5 மாநிலங்களில் தமிழகத்திற்கு மட்டும் கொஞ்சம் அதிகம்... சிறப்பு கேஷ்பேக் சலுகை அறிவித்த யமஹா! எவ்ளோ தெரியுமா?

யமஹா நிறுவனம் அதன் ஹைபிரிட் ஸ்கூட்டர்களை வாங்கினால் கேஷ்பேக் வழங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது. இந்தப் பிரத்யேக சலுகையைச் சில குறிப்பிட்ட மாநில வாசிகளுக்கு மட்டுமே நிறுவனம் அறிவித்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்தப் பதிவில் பார்க்கலாம், வாங்க.

5 மாநிலங்களில் தமிழகத்திற்கு மட்டும் கொஞ்சம் அதிகம்... சிறப்பு கேஷ்பேக் சலுகை அறிவித்த யமஹா! எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான யமஹா, புதிய வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக சிறப்பு சலுகையை அறிவித்திருக்கின்றது. குறிப்பாக, அதன் ஹிபிரிட் ஸ்கூட்டர்களின் பக்கம் மக்களைக் கவரும் விதமாக இந்த சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

5 மாநிலங்களில் தமிழகத்திற்கு மட்டும் கொஞ்சம் அதிகம்... சிறப்பு கேஷ்பேக் சலுகை அறிவித்த யமஹா! எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

நிறுவனம் ஃபஸ்ஸினோ (Fascino) மற்றும் ரே-இசட்ஆர் (RayZR) ஆகிய இரு மாடல்களிலேயே ஹைபிரிட் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இவற்றிற்கே சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அதாவது, இரண்டில் எந்த ஸ்கூட்டரை வாங்கினாலும் அதற்கு கேஷ்பேக் சலுகை வழங்க இருப்பதாக யமஹா நிறுவனம் தெரிவித்துள்ளது.

5 மாநிலங்களில் தமிழகத்திற்கு மட்டும் கொஞ்சம் அதிகம்... சிறப்பு கேஷ்பேக் சலுகை அறிவித்த யமஹா! எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

ஃபஸ்ஸினோ 125 எஃப்ஐ ஹைபிரிட் (Fascino 125 Fi Hybrid) மற்றும் ரே-இசட்ஆர் 125 எஃப்ஐ ஹைபிரிட் (RayZR 125 Fi Hybrid) ஆகிய ஹைபிரிட் மாடல் ஸ்கூட்டர்களையே யமஹா நாட்டில் விற்பனைச் செய்து வருகின்றது. இவற்றிற்கே சிறப்பு கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை நாட்டில் உள்ள ஐந்து மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

5 மாநிலங்களில் தமிழகத்திற்கு மட்டும் கொஞ்சம் அதிகம்... சிறப்பு கேஷ்பேக் சலுகை அறிவித்த யமஹா! எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

அதில், ஒன்றாக நம்முடைய தமிழ்நாடு இருக்கின்றது. இத்துடன், மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா, அசாம் மற்றும் வட-கிழக்கு ஆகிய மாநிலங்களுக்கும் கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒவ்வொரு மாநிலங்களுக்குமே வெவ்வேறு விதமான சலுகைகளை யமஹா அறிவித்திருக்கின்றது.

5 மாநிலங்களில் தமிழகத்திற்கு மட்டும் கொஞ்சம் அதிகம்... சிறப்பு கேஷ்பேக் சலுகை அறிவித்த யமஹா! எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

அந்தவகையில், அசாம், வட-கிழக்கு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஃபஸ்ஸினோ 125 எஃப்ஐ ஹைபிரிட் ஸ்கூட்டருக்கு மட்டுமே கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த ஸ்கூட்டரை வாங்குபவர்களுக்கு ரூ. 2 ஆயிரத்து 500 வரை கேஷ்பேக் வழங்க நிறுவனம் இருக்கின்றது.

5 மாநிலங்களில் தமிழகத்திற்கு மட்டும் கொஞ்சம் அதிகம்... சிறப்பு கேஷ்பேக் சலுகை அறிவித்த யமஹா! எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

மஹாராஷ்டிரா வாசிகளுக்கும் இதேபோல் ஓர் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மாநிலத்தில் ஃபஸ்ஸினோ 125 எஃப்ஐ ஹைபிரிட் மற்றும் ரே இசட்ஆர் 125 எஃப்ஐ ஹைபிரிட் என இரு ஸ்கூட்டர்களுக்குமே சலுகை அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இரு ஸ்கூட்டர்களுக்கும் ரூ. 2,500 வரை கேஷ்பேக் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

5 மாநிலங்களில் தமிழகத்திற்கு மட்டும் கொஞ்சம் அதிகம்... சிறப்பு கேஷ்பேக் சலுகை அறிவித்த யமஹா! எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

மேலே பார்த்த மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்திற்கு சற்று கூடுதல் கேஷ்பேக் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அந்தவகையில், ரூ. 5 ஆயிரம் வரை கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபஸ்ஸினோ 125 எஃப்ஐ ஹைபிரிட் மற்றும் ரே இசட்ஆர் 125 எஃப்ஐ ஹைபிரிட் ஆகிய இரு ஸ்கூட்டர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

5 மாநிலங்களில் தமிழகத்திற்கு மட்டும் கொஞ்சம் அதிகம்... சிறப்பு கேஷ்பேக் சலுகை அறிவித்த யமஹா! எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

சலுகை அறிவிக்கப்பட்டிருக்கும் யமஹாவின் இந்த இரு ஹைபிரிட் ஸ்கூட்டர்களுமே மிக சிறப்பான தயாரிப்பாக காட்சியளிக்கின்றன. இரண்டிற்கும் இந்திய இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. குறிப்பாக, ஃபஸ்ஸினோ ஸ்கூட்டர் மாடலுக்கு சிறப்பான டிமாண்ட் நாட்டில் நிலவி வருகின்றது.

5 மாநிலங்களில் தமிழகத்திற்கு மட்டும் கொஞ்சம் அதிகம்... சிறப்பு கேஷ்பேக் சலுகை அறிவித்த யமஹா! எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இரு ஹைபிரிட் ஸ்கூட்டர்களிலுமே பிஎஸ்-6 தர ஏர் கூல்டு, ஃப்யூவல் இன்ஜெக்டட் (Fuel-Injected), 125 சிசி ப்ளூ கோர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 8.2 பிஎஸ் பவரை 6,500 ஆர்பிஎம்மிலும், 10.3 என்எம் டார்க்கை 5,000 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது.

5 மாநிலங்களில் தமிழகத்திற்கு மட்டும் கொஞ்சம் அதிகம்... சிறப்பு கேஷ்பேக் சலுகை அறிவித்த யமஹா! எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இதுமட்டுமின்றி, ஹைபிரிட் பவர் அசிஸ்ட் தொழில்நுட்பம் வசதிக் கொண்ட ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஓர் எஞ்ஜின் ஸ்டார்ட் சிஸ்டம் ஆகும். தேவைக்கேற்ப தானாகவே ஸ்டாப் மற்றும் ஸ்டார்ட் செய்ய உதவும். ஆகையால் எரிபொருள் சிக்கனம் அதிகளவில் கிடைக்கும்.

5 மாநிலங்களில் தமிழகத்திற்கு மட்டும் கொஞ்சம் அதிகம்... சிறப்பு கேஷ்பேக் சலுகை அறிவித்த யமஹா! எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

மேலும், சைடு ஸ்டாண்டு போட்டிருந்தால் எஞ்ஜின் ஆஃப்பாக்கும் வசதியும் ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி இன்னும் பல்வேறு சிறப்பு வசதிகளைக் கொண்டதாக இரு ஸ்கூட்டர்களும் காட்சியளிக்கின்றன. இவற்றின் பக்கம் மக்களைக் கவரும் நோக்கிலேயே யமஹா தற்போது கேஷ்பேக் சலுகை அறிவித்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 10, 2022, 10:35 [IST]
English summary
Yamaha announces cashback offers for fascino 125 and rayzr 125 hybrid scooter models
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+