யமஹாவின் இந்த 3 தயாரிப்புதான் நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் பைக்குகளாம்.. எல்லாத்துக்குமே டிமாண்ட் அமோகம்!
இந்திய இருசக்கர வாகன சந்தையில் யமஹாவின் எந்த டூ-வீலருக்கு அதிகம் வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்..
இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் யமஹாவும் ஒன்று. இந்த நிறுவனத்தின் எந்த பைக் மாடலுக்ககு நாட்டில் வரவேற்பு அதிகரித்துக் காணப்படுகின்றது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (Society of Indian Automobile Manufacturers) வெளியிட்ட புள்ளி விபரங்களின் அடிப்படையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளோம் என்பது குறிப்பிடத்தகுந்தது. யமஹா நிறுவனத்தின் எஃப்இசட் பைக் மாடலுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக 2022 அக்டோபரில் 20,440 யூனிட்டுகள் அது விற்பனையாகியிருக்கின்றது.
கடந்த 2021 அக்டோபர் மாதத்தில் இதே பைக் மாடல் வெறும் 13,404 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியிருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது. இதனுடன் நடப்பாண்டை ஒப்பிட்டு பார்த்தால் பல மடங்கு வளர்ச்சியுடன் எஃப்இசட் விற்பனையாகிக் கொண்டிருப்பது தெளிவாக தெரிகின்றது. ஆகையால், நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் பைக் மாடல்களாக இது இருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் ஆர்15 வி4 பைக் இருக்கின்றது.
இந்த பைக் மாடல் 2022 அக்டோபரில் 10,541 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளன. இதுவும் லேசான விற்பனை வளர்ச்சியை இந்தியாவில் சந்தித்துள்ளது. புள்ளி விபரங்களின் அடிப்படையில் சுமார் 290க்கும் அதிகமான யூனிட்டுகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தைக் காட்டிலும் நடப்பாண்டு அக்டோபரில் இந்த பைக் மாடல் விற்பனையாகியிருக்கின்றது.
2021 அக்டோபரில் 10,246 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியிருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய சிறப்பான விற்பனையை வளர்ச்சியை அடுத்தே நிறுவனத்தின் இரண்டாவது அதிகம் விற்பனையாகும் டூ-வீலர் மாடலாக ஆர்15 வி4 மாறியிருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக நிறுவனத்தின் மூன்றாவது அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகன மாடலாக எம்டி15 இருக்கின்றது. இது அதிகபட்சமாக 8,037 யூனிட்டுகள் வரை விற்பனையாகியிருக்கின்றது.
இந்தியாவில் யமஹா நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் பிரீமியம் தர மோட்டார்சைக்கிள்களில் இதுவும் ஒன்றாகும். எனவே இந்தியர்கள் மத்தியில் தொடர்ச்சியாக இந்த பைக் மாடல் விற்பனை வளர்ச்சியைச் சந்தித்த வண்ணம் இருக்கின்றது. உதாரணமாக கடந்த 2021ம் ஆண்டில் 6,016 யூனிட்டுகள் மட்டுமே எம்டி15 விற்பனையாகியிருக்கும் நிலையில் நடப்பாண்டில் அது 8,037 யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது.
இந்த மாதிரியான வளர்ச்சி பாதையிலேயே யமஹாவின் எம்டி15 பயணித்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு பைக்கில் வழங்கப்பட்டிருக்கும் பிரீமியம் அம்சங்கள் ஓர் முக்கிய காரணமாக இருந்தாலும் அதன் குறைவான விலையும் இந்திய இளைஞர்கள் அதிகம் அந்த பைக்கை நுகர காரணமாக இருக்கின்றது. ரூ. 1.63 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து எம்டி15 பைக் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.
இந்த குறைவான விலையிலேயே பை-ஃபங்க்சனல் எல்இடி ஹெட்லைட், மல்டி ஃபங்க்சன் நெகட்டிவ் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் போன்ற அம்சங்கள் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. இந்த திரை யமஹாவின் கன்னெக்ட் அம்சம் கொண்டது. இதன் வாயிலாக செல்போனுக்கு வரும் அழைப்பு, எஸ்எம்எஸ் மற்றும் மெயில் போன்றவற்றை அறிந்துக் கொள்ள முடியும். இதுதவிர இன்னும் பல தகவல்களை வழங்கும் வசதிக் கொண்டதாக இத்திரை இருப்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








