இந்தியாவிற்காக பாதுகாப்பான இ-ஸ்கூட்டரை தயார் செய்யும் பணியில் யமஹா! பஜாஜ், டிவிஎஸ்க்கு நெருக்கடி வெகு விரைவில்
நாட்டில் மின்சார வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது. மக்கள் மின்சார வாகனங்களுக்கு அளித்து வரும் அமோக வரவேற்பின் காரணத்தினால் தற்போது அவற்றின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால் முன்பு அரிதினும் அரிதாக தென்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்கள் தற்போது அதிகளவில் கண்களில் பட தொடங்கி உள்ளன. அந்தளவிற்கு சாலையில் அவை அதிகரித்துக் காணப்படுகின்றன.
இத்தகைய சூழல் இந்தியாவில் நிலவுவதன் காரணத்தினால், முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் தொடங்கி புதுமுக வாகன உற்பத்தியாளர்கள் வரை இந்தியாவை மையமாகக் கொண்டு தங்களின் மின்சார வாகனங்களைக் களமிறக்கத் தொடங்கியிருக்கின்றன. குறிப்பாக, மின்சார இருசக்கர வாகனங்கள் அதிகளவில் நாட்டில் விற்பனைக்குக் களமிறங்கிக் கொண்டிருக்கின்றன. இந்திய சந்தையில் டிவிஎஸ் நிறுவனம் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும், பஜாஜ் நிறுவனம் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இதுபோன்று இன்னும் பல நிறுவனங்கள் மின்சார வாகனங்களை இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன. மேலும், வெகு விரைவில் இந்த கோதாவில் களமிறங்க சில முன்னணி நிறுவனங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விடா எனும் புதுமுக பிராண்டின்கீழ் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. கூடிய விரைவிலேயே நிறுவனத்தின் மின்சார வாகனங்கள் விற்பனைக்குக் களமிறக்கப்பட இருக்கின்றன. இதற்கான அனைத்து பணிகளையும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மிக தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது.
இந்த நிலையிலேயே நாட்டின் மற்றுமொரு முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளரான யமஹாவும் அதன் மின்சார இருசக்கர மாடலை இந்திய சந்தையில் களமிறக்கும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறுவனம் இந்திய சந்தையில் நியோ எனும் எலெக்ட்ரிக் டூ-வீரலையே விற்பனைக்குக் கொண்டு வரும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. பஜாஜ் சேத்தக் மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக இதனை யமஹா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

நியோ ஓர் ஸ்கூட்டர் ரக மின்சார வாகனம் ஆகும். இதையே யமஹா நிறுவனம் அண்மைக் காலமாக இந்திய சாலைகளில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தி வருகின்றது. இந்த நிலையிலேயே சமீபத்திய பேட்டி ஒன்றில், யமஹா இந்தியா நிறுவனத்தின் சேர்மேன் ஆன ஐஷின் சிஹானா, இந்தியாவின் பன்முக மாறுபட்ட கால நிலைக்கு ஏற்ப தங்களின் வாகனத்தை தயார்படுத்தி வருவதாக கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்திருக்கின்றார்.
இந்தியாவில் கோடை காலத்தில் வெயில் சுட்டெரிக்கும். குறிப்பாக, ஒரு சில மாநிலங்களில் தார் சாலையையே உருக்கும் அளவிற்கு வெயில் கொளுத்தும். இதுமாதிரியான சூழலுக்கு ஏற்ற வாகனமாக தங்களது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உருவாகிக் கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். ஆகையால், யமஹாவின் இந்த முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிக பாதுகாப்பானதாக விற்பனைக்கு வரும் என தெரிகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக யமஹா இந்தியா நிறுவனத்தின் சேர்மேனின் லேட்டஸ்ட் பேட்டி அமைந்துள்ளது.

இதனாலேயே பலர் ஆச்சரியத்தில் மூழ்கி இருக்கின்றனர். மேலும், இந்த தகவல் பலரின் எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. யமஹா நிறுவனம் இந்தியாவிலேயே மின்சார இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. உள்நாட்டு நிறுவனங்களை போல இதுவும் செயல்பட இருப்பதால், நிறுவனத்தின் மின்சார இருசக்கர வாகனங்கள் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. அதேசமயத்தில் யமஹாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிக அதிக தொழில்நுட்ப வசதிகளுடனும் விற்பனைக்கு வர இருக்கின்றது.
எல்இடி ஹெட்லைட், முழுமையான டிஜிட்டல் தரத்திலான இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், எல்இடி தர டெயில் லேம்ப், எல்இடி தர இன்டிகேட்டர் உள்ளிட்ட அம்சங்கள் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் எதிர்பார்க்கப்படுகின்றன. இதுதவிர, ஸ்வாப்பபிள் பேட்டரி வசதியும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் வாயிலாக தேவைப்படும் இடத்திற்கே எடுத்துச் சென்று பேட்டரியை சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதன் வாயிலாக சார்ஜ் செய்ய வாகனத்துடன் எடுத்து செல்ல வேண்டும் என்கிற நிலை தவிர்க்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கூறியது போல யமஹா நிறுவனம் வெகு நாட்களாக தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தி வருகின்றது. ஆகையால், எப்போது வேண்டுமானால் இந்த நிறுவனத்தின் மின்சார வாகனம் வெளியீட்டைப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுவரை இதன் வருகை பற்றிய சின்ன தகவலைகூட யமஹா நிறுவனம் வெளியிடவில்லை. இருப்பினும், இதன் வருகையை நோக்கி இந்தியர்கள் பெருத்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே தங்களது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பாதுகாப்பானதாக உருவாக்கப்பட்டு வருவதாக நிறுவனத்தின் முக்கிய அதிகாரி தகவல் வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications








