ஸ்டைலிஷான தோற்றத்தில் புதிய யமஹா எஃப்.இசட்.எஸ்-எஃப்.ஐ பைக்குகள் அறிமுகம்!! பொங்கல் நன்நாளில் விற்பனை துவக்கம்

புத்துணர்ச்சியான ஸ்டைலில் எஃப்.இசட்.எஸ் பைக்குகளை யமஹா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய யமஹா பைக்குகளை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஸ்டைலிஷான தோற்றத்தில் புதிய யமஹா எஃப்.இசட்-எஃப்.ஐ பைக்குகள் அறிமுகம்!! பொங்கல் நன்நாளில் விற்பனை துவக்கம்

‘தி கால் ஆஃப் தி ப்ளூ' என்ற பெயரில் இந்திய இருசக்கர வாகன சந்தையில் மிகவும் கவர்ச்சிகரமான தயாரிப்புகளை களமிறக்கும் முயற்சியாக இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் எஃப்.இசட்.எஸ் ஃப்யுல்-இன்ஜெக்டட் பைக்கினை புத்துணர்ச்சியான நிறத்தேர்வுகளில், ஸ்டைலிஷான தோற்றத்தில் அறிமுகம் செய்துள்ளது.

ஸ்டைலிஷான தோற்றத்தில் புதிய யமஹா எஃப்.இசட்-எஃப்.ஐ பைக்குகள் அறிமுகம்!! பொங்கல் நன்நாளில் விற்பனை துவக்கம்

அத்துடன் இந்த மோட்டார்சைக்கிளில் புதியதாக எஃப்.இசட்.எஸ்-எஃப்.ஐ Dlx (டீலக்ஸ்) என்ற வேரியண்ட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய எஃப்.இசட்.எஸ் மாடல்கள் இந்த 2022 ஜனவரி மாதத்தின் இரண்டாம் வாரத்தில் இருந்து அனைத்து யமஹா டீலர்ஷிப்களிலும் விற்பனைக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டைலிஷான தோற்றத்தில் புதிய யமஹா எஃப்.இசட்-எஃப்.ஐ பைக்குகள் அறிமுகம்!! பொங்கல் நன்நாளில் விற்பனை துவக்கம்

புதிய பெயிண்ட் தேர்வுகளினால் பைக்கின் தோற்றம் புத்துணர்ச்சியாகி உள்ளதே தவிர்த்து, பைக்கின் தோற்றத்தில் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை. அதாவது வழக்கமான மூன்றாம் தலைமுறை எஃப்.இசட்.எஸ்-எஃப்.ஐ பைக்கின் தோற்றத்தையே புதிய எஃப்.இசட்.எஸ் பைக்கும் கொண்டுள்ளது. அதேபோல் எப்போதும் பொருத்தப்படும் 149சிசி என்ஜின் தான் புதிய எஃப்.இசட்.எஸ்-எஃப்.ஐ டீலக்ஸ் வேரியண்ட்டிலும் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்டைலிஷான தோற்றத்தில் புதிய யமஹா எஃப்.இசட்-எஃப்.ஐ பைக்குகள் அறிமுகம்!! பொங்கல் நன்நாளில் விற்பனை துவக்கம்

அதிகப்பட்சமாக இந்த என்ஜின் 7,250 ஆர்பிஎம்-இல் 12.4 பிஎஸ் மற்றும் 5500 ஆர்பிஎம்-இல் 13.3 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. 2022ஆம் ஆண்டிற்கான அப்டேட்டாக ஸ்டாண்டர்ட் எஃப்.இசட்.எஸ்-எஃப்.ஐ பைக்கில் எல்இடி டெயில்லைட்களும், அதுவே புதிய வேரியண்ட்டில் இந்த டெயில்லைட் அமைப்பில் கூடுதலாக எல்இடி ஃப்ளாஷர்ஸும் சேர்க்கப்பட்டுள்ளன.

ஸ்டைலிஷான தோற்றத்தில் புதிய யமஹா எஃப்.இசட்-எஃப்.ஐ பைக்குகள் அறிமுகம்!! பொங்கல் நன்நாளில் விற்பனை துவக்கம்

புதிய எஃப்.இசட்.எஸ்-எஃப்.ஐ டீலக்ஸ் வேரியண்டை மெட்டாலிக் கருப்பு, மெட்டாலிக் அடர் சிவப்பு மற்றும் சாலிட் க்ரே என்ற 3 விதமான நிறங்களில் பெறலாம். இதில் சாலிட் க்ரே நிறத்தேர்வை தவிர்த்து மற்ற இரண்டிலும் பைக்கின் அலாய் சக்கரங்கள் தங்க நிறத்தில் வழங்கப்பட உள்ளன. அதுவே, சாலிட் க்ரே நிற பெயிண்ட் தேர்வில் அலாய் சக்கரங்கள் நீல நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டிருக்கும்.

ஸ்டைலிஷான தோற்றத்தில் புதிய யமஹா எஃப்.இசட்-எஃப்.ஐ பைக்குகள் அறிமுகம்!! பொங்கல் நன்நாளில் விற்பனை துவக்கம்

அதேபோல் ஒற்றை-துண்டு இருக்கையும் மற்ற இரண்டில் இளம் சிவப்பு நிறத்தில் வழங்கப்பட்டிருக்க, சாலிட் க்ரே நிறத்தேர்வில் மட்டும் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. இவற்றினால் பைக்கின் தோற்றம் முற்றிலுமாக மெருக்கேறியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். எஃப்.இசட்.எஸ் பைக்கில் பிற முக்கிய சிறப்பம்சமாக யமஹாவின் கனெக்ட்-எக்ஸ் மொபைல் செயலி இணைப்பு வசதி வழங்கப்படுகிறது.

ஸ்டைலிஷான தோற்றத்தில் புதிய யமஹா எஃப்.இசட்-எஃப்.ஐ பைக்குகள் அறிமுகம்!! பொங்கல் நன்நாளில் விற்பனை துவக்கம்

ப்ளூடூத் மூலம் இணைக்கக்கூடியதாக வழங்கப்படுகின்ற இது மொபைல் போனிற்கு வரும் அழைப்புகளை இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் வாயிலாகவே பதிலளிக்கும் வசதி, வாகனத்தின் இருப்பிடத்தை கண்டறிதல் மற்றும் பயண வரலாறுகள் உள்ளிட்ட விபரங்களை ஓட்டுனருக்கு வழங்கக்கூடியதாக உள்ளது. இதனுடன் 3ஆம் தலைமுறை எஃப்.இசட்.எஸ்-எஃப்.ஐ பைக்கில் வழங்கப்படும் மற்ற அம்சங்களாக சிங்கிள்-சேனல் ஏபிஎஸ், எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், எல்இடி ஹெட்லைட், பின்பக்க டயருக்கு நெருக்கமாக மட்கார்ட், என்ஜினை பாதுகாக்க அடித்தட்டு உள்ளிட்டவற்றை சொல்லலாம்.

ஸ்டைலிஷான தோற்றத்தில் புதிய யமஹா எஃப்.இசட்-எஃப்.ஐ பைக்குகள் அறிமுகம்!! பொங்கல் நன்நாளில் விற்பனை துவக்கம்

புதிய எஃப்.இசட்.எஸ்-எஃப்.ஐ பைக்குகளின் அறிமுகத்தின் போது பேசிய யமஹா மோட்டார் இந்தியா க்ரூப்பின் தலைவர் இஷின் சிஹானா, தி கால் ஆஃப் தி ப்ளூ முன்முயற்சியின் கீழ், நாங்கள் தொடர்ந்து எங்கள் வாடிக்கையாளர்களை சென்றடைவோம் மற்றும் அவர்களின் வளர்ந்துவரும் தேவைகளை பூர்த்தி செய்ய எங்கள் தயாரிப்பு வரம்பை மேம்படுத்துவோம். எங்களது வாடிக்கையாளர்களின் கருத்தை அடிப்படையாக கொண்ட எஃப்.இசட்.எஸ்-எஃப்.ஐ டீலக்ஸ் பைக்கின் வெளியீடு அத்தகைய மேம்படுத்தல் ஆகும்.

ஸ்டைலிஷான தோற்றத்தில் புதிய யமஹா எஃப்.இசட்-எஃப்.ஐ பைக்குகள் அறிமுகம்!! பொங்கல் நன்நாளில் விற்பனை துவக்கம்

3வது தலைமுறை 150சிசி எஃப்.இசட் மாடல் இந்திய இளைஞர்களுக்கான ஸ்டைல் மற்றும் செயல்திறனின் சரியான கலவையாக இருப்பதை நிரூபிப்பதால் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. எஃப்.இசட் பைக்குகள் வரிசையின் பிரீமியம் கவர்ச்சியை மேம்படுத்தும் வகையில் எஃப்.இசட்.எஸ்-எஃப்.ஐ டீலக்ஸ் வேரியண்ட் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த புதிய வேரியண்ட்டிலும், ஸ்டாண்டர்ட் எஃப்.இசட்.எஸ்-எஃப்.ஐ பைக்கிலும் மிகவும் நவீனமயமான எல்இடி லைட்டிங் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஸ்டைலிஷான தோற்றத்தில் புதிய யமஹா எஃப்.இசட்-எஃப்.ஐ பைக்குகள் அறிமுகம்!! பொங்கல் நன்நாளில் விற்பனை துவக்கம்

மேலும், எஃப்.இசட்.எஸ்-எஃப்.ஐ பைக்கில் குறிப்பிடத்தக்க வண்ண சேர்க்கைகள் மற்றும் டீலக்ஸ் வேரியண்ட்டில் லைட் ஃப்ளாஷர்கள் உண்மையிலேயே யமஹா ரேசிங்கின் உலகளாவிய உணர்வை பிரதிப்பலிக்கின்றன" என்றார். வழக்கமான மேட் சிவப்பு & மேட் நீலம் என்ற நிறத்தேர்வுகளில் எல்இடி டெயில்லைட்களை மட்டுமே புதிய அப்டேட்டாக பெற்றுள்ள ஸ்டாண்டர்ட் எஃப்.இசட்-எஸ் எஃப்.ஐ பைக்கின் விலை ரூ.115,900 ஆகவும், 3 புதிய பெயிண்ட் தேர்வுகள், வண்ண நிறங்களில் அலாய் சக்கரங்கள், புதிய கிராஃபிக்ஸ், எல்இடி ஃப்ளாஷர்கள், எல்இடி டெயில்லைட்கள் மற்றும் இரட்டை-நிற இருக்கை உள்ளிட்டவற்றை பெற்றுள்ள புதிய எஃப்.இசட்.எஸ்-எஃப்.ஐ டீலக்ஸ் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.118,900 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha #pongal 2022
English summary
Yamaha Launches FZS-Fi Models with Refreshed Styling for 2022.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X