யமஹாவின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் - நியோ & இ01!! இந்தியாவில் எது முதலில் அறிமுகமாகும்?
இ01 மற்றும் நியோ என்கிற பெயர்களில் இரு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை யமஹா சர்வதேச சந்தையில் வெளியீடு செய்துள்ளது. இந்த புதிய யமஹா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இவி ஸ்டார்ட்-அப் பிராண்ட்களை தாண்டி முன்னணி 2-வீலர்ஸ் பிராண்ட்களும் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் ஆர்வத்துடன் ஈடுப்பட ஆரம்பித்துள்ளன. இந்தியாவை பொறுத்தவரையில், பஜாஜ், டிவிஎஸ் பிராண்ட்களை தவிர்த்து மற்றவை இப்போதுதான் ஆரம்பக்கட்ட முயற்சிகளில் உள்ளன.

ஆனால் மற்ற பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளில் முன்னணி பிராண்ட்களில் இருந்து எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த வகையில் ஜப்பானை தலைமையிடமாக கொண்ட யமஹாவும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தன்னை மாற்றிக்கொண்டு வருகிறது. ஆனால் இந்த விஷயத்தில் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் யமஹாவின் செயல்பாடுகள் சற்று வித்தியாசமானவைகளாக உள்ளன.

அதாவது, எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை வரிசையாக சர்வதேச சந்தைகளில் விற்பனைக்கு கொண்டுவருவதற்கு மாற்றாக, சீனா, இந்தியா போன்ற உலகின் பெரும் ஆட்டோமொபைல் சந்தைகளில் களமிறக்குவதற்கான எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களில் ஆராய்ச்சி செய்து வடிவமைக்கும் பணிகளில் யமஹா தன்னை ஈடுப்படுத்தி கொண்டுவந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த ஆராய்ச்சிகளின் மூலம் வடிவமைக்கப்பட்ட தனது முதல் இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை யமஹா நிறுவனம் ஒருவழியாக வெளியீடு செய்துள்ளது. இதில் ஒன்றான யமஹா நியோ, 50சிசி பெட்ரோல் ஸ்கூட்டருக்கு இணையானதாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் சில வெளிநாட்டு சந்தைகளில் 50சிசி-யில் யமஹா நியோ ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

2019இல் நடைபெற்ற டோக்கியோ மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட இ02 கான்செப்ட் மாதிரியின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள யமஹா நியோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் மிக முக்கியமான அம்சம் என்னவென்று பார்த்தால், பேட்டரி மாற்று தொழிற்நுட்பத்தை இது பெற்றுவரவுள்ளது. ஸ்கூட்டருக்கு சரியாக மத்தியில் வழங்கப்பட்டுள்ள எலக்ட்ரிக் மோட்டாரில் லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மற்றப்படி எலக்ட்ரிக் மோட்டாரின் திறன் மற்றும் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவுகள் குறித்த விபரங்கள் எதுவும் தற்போதைக்கு வெளியிடப்படவில்லை. எங்களுக்கு தெரிந்தவரையில், எலக்ட்ரிக் மோட்டார் 2 கிலோவாட்ஸ் திறனை கொண்டதாக இருக்கும். அதேபோல் யமஹா நியோ ஆனது குறை-வேக எலக்ட்ரிக் ஸ்கூட்டராகவே கொண்டுவரப்படும் என நமக்கு கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆதலால் இயக்க ஆற்றலை பெரியதாக இந்த புதிய யமஹா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் எதிர்பார்க்க முடியாது. ஆனால் இளம் தலைமுறையினரை கவரும் வகையில் கவர்ச்சிக்கரமான ஸ்டைலினை எதிர்பார்க்கலாம். அதேநேரம் போதுமான தொழிற்நுட்ப வசதிகளும் இந்த இ-ஸ்கூட்டரில் யமஹா வழங்கும். தற்போது வெளியீடு செய்யப்பட்டிருக்கும் இரண்டாவது யமஹா எலக்ட்ரிக் ஸ்கூட்டரான இ01 தற்சமயம் தயாரிப்பு பணிகள் அனைத்தையும் நிறைவு செய்யும் நிலையில் உள்ளது.

அதாவது இன்னும் முழுவதுமாக வடிவமைக்கப்படவில்லை. இதனால் ஜப்பான் உள்பட சர்வதேச சந்தைகளில் முதல் யமஹா எலக்ட்ரிக் ஸ்கூட்டராக நியோ மாடலே களமிறக்கப்படும். யமஹா இ01 ஆனது 125சிசி பெட்ரோல் ஸ்கூட்டருக்கு இணையான செயல்படுதிறன் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இ01 கான்செப்ட் மாதிரியின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இ01 கான்செப்ட் மாதிரியும் 2019 டோக்கியோ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த யமஹா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சில முறை ஜப்பானில் சோதனை ஓட்டங்களின்போது அடையாளம் காணப்பட்டு இருந்தன. அப்போது கிடைக்க பெற்றிருந்த ஸ்பை படங்களின் மூலமாக யமஹா இ01 இ-ஸ்கூட்டரில் ஈக்கோ, நார்மல் மற்றும் பவர் என்கிற 3 விதமான ரைட் மோட்கள் வழங்கப்பட உள்ளது தெரியவந்திருந்தது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் மிகவும் எளிமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் வழங்கப்பட்டுள்ளது.

இது பேட்டரியின் சார்ஜ் நிலை, ஸ்கூட்டரின் வேகம் உள்ளிட்ட விபரங்களை காட்டக்கூடியதாக உள்ளது. இதுதவிர்த்து சாவியில்லா ஸ்டார்ட் & ப்ளூடூத் இணைப்பு உள்ளிட்ட தொழிற்நுட்ப அம்சங்களும் யமஹா இ01 இ-ஸ்கூட்டரில் வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம். இ01 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முதலாவதாக ஐரோப்பாவில் விற்பனையை துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








