யமஹாவின் 50சிசி ஸ்கூட்டர்... 2022 வினோ!! புதிய நிறத்தேர்வுடன் ஜப்பானில் வெளியீடு!

உலகளவில் பிரபலமான 2-வீலர்ஸ் பிராண்டான யமஹா அதன் வினோ 50சிசி ஸ்கூட்டரை 2022ஆம் ஆண்டிற்காக அப்டேட் செய்துள்ளது. இந்த அப்டேட் செய்யப்பட்ட 50சிசி யமஹா ஸ்கூட்டரை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

யமஹாவின் 50சிசி ஸ்கூட்டர்... 2022 வினோ!! புதிய நிறத்தேர்வுடன் ஜப்பானில் வெளியீடு!

ஜப்பானில் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரக்கூடிய யமஹா ஸ்கூட்டர்களுள் ஒன்றாக விளங்கும் வினோ மாடலுக்கு புதிய ஆண்டிற்கான அப்டேட்டாக புதிய நிறத்தேர்வுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இதை தவிர்த்த ஸ்கூட்டரின் மற்ற அம்சங்கள் அனைத்தும் அப்படியே தொடரப்பட்டுள்ளன.

யமஹாவின் 50சிசி ஸ்கூட்டர்... 2022 வினோ!! புதிய நிறத்தேர்வுடன் ஜப்பானில் வெளியீடு!

இந்த அப்டேட்டின்படி, பழுப்பு கலந்த நீலம் என்கிற இரட்டை-நிற பெயிண்ட்டில் 2022 யமஹா வினோ ஸ்கூட்டர் அலங்கரிக்கப்பட்டு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பழுப்பு நிறம் ஸ்கூட்டரின் இருக்கை, க்ரிப்கள் மற்றும் ஓட்டுனர் கால் வைக்கும் பகுதிகளில் வழங்கப்பட்டுள்ளது. புதியதாக வழங்கப்பட்டுள்ள இந்த நீலம்-பழுப்பு பெயிண்ட் தேர்வு யமஹா வினோ ஸ்கூட்டரை மேலும் புத்துணர்ச்சியானதாக காட்டுகிறது.

யமஹாவின் 50சிசி ஸ்கூட்டர்... 2022 வினோ!! புதிய நிறத்தேர்வுடன் ஜப்பானில் வெளியீடு!

இந்த புதிய பெயிண்ட் தேர்வுடன் கருப்பு கலந்த பச்சை பெயிண்ட் தேர்வும் 2022 யமஹா வினோ ஸ்கூட்டருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பெயிண்ட் தேர்வில் ஸ்கூட்டரின் இருக்கை மற்றும் க்ரிப்கள் உள்ளிட்டவை கருப்பு நிறத்தில் வழங்கப்படுகின்றன. ஏற்கனவே கூறியதுதான், இயந்திர பாகங்களை பொறுத்தவரையில் 2022 யமஹா வினோ ஸ்கூட்டரில் எந்த மாற்றமும் இல்லை.

யமஹாவின் 50சிசி ஸ்கூட்டர்... 2022 வினோ!! புதிய நிறத்தேர்வுடன் ஜப்பானில் வெளியீடு!

வினோ ஸ்கூட்டரில் பொருத்தப்படும் 50சிசி லிக்யுடு-கூல்டு என்ஜின் அதிகப்பட்சமாக 4.5 பிஎச்பி மற்றும் 4.1 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. உண்மையில் இந்த 50சிசி என்ஜினை மற்றொரு ஜப்பானிய மோட்டார்சைக்கிள் பிராண்டான ஹோண்டா யமஹாவிற்கு வழங்குகிறது என்றால் நம்ப முடிகிறதா...! ஏனெனில் வினோ ஸ்கூட்டரினை ஹோண்டாவும், யமஹாவும் கூட்டணியாக இணைந்து தயாரித்து வருகின்றன.

யமஹாவின் 50சிசி ஸ்கூட்டர்... 2022 வினோ!! புதிய நிறத்தேர்வுடன் ஜப்பானில் வெளியீடு!

பிரேக்கிங் பணியை கவனிக்க யமஹா வினோ ஸ்கூட்டரில் இரு சக்கரங்களிலும் ட்ரம் ப்ரேக்குகள் பொருத்தப்படுகின்றன. சஸ்பென்ஷனுக்கு டெலெஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் இரு முனைகளிலும் வழங்கப்படுகின்றன. ஜப்பானில் 2,03,500 யென் என்கிற ஆரம்ப விலையில் யமஹா வினோ ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படுகிறது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.1.3 லட்சமாகும்.

யமஹாவின் 50சிசி ஸ்கூட்டர்... 2022 வினோ!! புதிய நிறத்தேர்வுடன் ஜப்பானில் வெளியீடு!

50சிசி ஸ்கூட்டருக்கு இத்தகைய விலை சற்று அதிகமே. இந்தியாவில் தற்போதைக்கு 110சிசி-யில் கூட ஸ்கூட்டர் எதுவும் விற்பனையில் இல்லை. குறைந்தப்பட்சமாகவே 125சிசி என எப்போதோ காலம் மாறிவிட்டது. ஆதலால் 2022 வினோ ஸ்கூட்டரை நம் நாட்டு சந்தையில் யமஹா நிறுவனம் அறிமுகம் செய்ய வாய்ப்புகள் மிகவும் குறைவே. வாய்ப்பே இல்லை என்றுக்கூட சொல்லலாம்.

யமஹாவின் 50சிசி ஸ்கூட்டர்... 2022 வினோ!! புதிய நிறத்தேர்வுடன் ஜப்பானில் வெளியீடு!

இதனால் கவலைக்கொள்ள வேண்டாம், ஏனெனில் இந்திய சந்தையில் ஃபேஸினோ 125, ரே இசட்.ஆர்125 மற்றும் ஏரோக்ஸ் 155 என கவர்ச்சிக்கரமான ஸ்கூட்டர்களை யமஹா சந்தைப்படுத்தி வருகிறது. இதில் யமஹாவின் சமீபத்திய அறிமுகமான ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர் ஆர்15 பைக்கை அடிப்படையாக கொண்டதாக விளங்குகிறது. இதனால் அதில் பொருத்தப்படும் அதே 155சிசி என்ஜின் தான் ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரிலும் பொருத்தப்படுகிறது.

யமஹாவின் 50சிசி ஸ்கூட்டர்... 2022 வினோ!! புதிய நிறத்தேர்வுடன் ஜப்பானில் வெளியீடு!

இதற்கிடையில் அப்டேட் செய்யப்பட்ட புதிய ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர் சமீபத்தில் இந்தோனிஷிய நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டருக்கு அப்டேட்டாக புதியதாக 6 நிறத்தேர்வுகளை யமஹா வழங்கியுள்ளது. இந்தியாவிலும் இந்த 155சிசி யமஹா ஸ்கூட்டர் விற்பனையில் உள்ளதால், இதன் புதிய அப்டேட் வெர்சன் நம் நாட்டு சந்தைக்கும் கொண்டுவரப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

யமஹாவின் 50சிசி ஸ்கூட்டர்... 2022 வினோ!! புதிய நிறத்தேர்வுடன் ஜப்பானில் வெளியீடு!

இந்த நிலையில் யமஹா நிறுவனம் அதன் பிரபலமான டிமேக்ஸ் மேக்ஸி-ஸ்கூட்டருக்கான ஹைப்ரீட் அமைப்பிற்கான காப்புரிமையை சமீபத்தில் தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக நமக்கு கிடைக்க பெற்றிருந்த ஆவண படங்களின் மூலம் யமஹாவின் இந்த ஹைப்ரீட் அமைப்பை பற்றிய சில விபரங்கள் கிடைத்திருந்தன. யமஹா டி-மேக்ஸ் பல சர்வதேச சந்தைகளில் பிரீமியம் ரக மேக்ஸி-ஸ்கூட்டராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

யமஹாவின் 50சிசி ஸ்கூட்டர்... 2022 வினோ!! புதிய நிறத்தேர்வுடன் ஜப்பானில் வெளியீடு!

இந்திய சந்தையில் அடுத்ததாக எம்டி-15 பைக்கின் புதிய தலைமுறை மாடலை அறிமுகப்படுத்த யமஹா தயாராகி வருகிறது. இதன் எதிரொலியாக, முந்தைய தலைமுறை எம்டி-15 பைக்கின் விற்பனை சமீபத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. யமஹா ஆர்15 பைக்கிற்கு இணையாக எம்டி-15 பைக்குகளுக்கும் நம் நாட்டில் வரவேற்பு கிடைத்து வந்தது. இந்த நிலையில் இந்த பைக்கின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதால், இதன் புதிய தலைமுறையை மெருக்கேற்றப்பட்ட தோற்றத்தில் எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Saturday, March 5, 2022, 11:19 [IST]
English summary
2022 Yamaha Vino 50cc Scooter Debuts With Two New Colour Options.
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+