அப்டேட் செய்யப்பட்ட 2022 யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

அப்டேட் செய்யப்பட்ட யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர் இந்தோனிஷிய நாட்டு சந்தையில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. புதிய யமஹா ஏரோக்ஸ் ஸ்கூட்டரை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

அப்டேட் செய்யப்பட்ட 2022 யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

ஜப்பானிய மோட்டார்சைக்கிள் பிராண்டான யமஹாவின் இந்தோனிஷியா நாட்டு பிரிவின் சார்பில் அப்டேட் செய்யப்பட்ட புதிய ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆர்15 பைக்கை அடிப்படையாக கொண்ட ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர் இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் உள்ளதால், புதிய ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரும் நம் நாட்டில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

அப்டேட் செய்யப்பட்ட 2022 யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

ஆனால் இந்த அறிமுகம் எப்போது நிகழும் என்பதுதான் தற்போதைக்கு கேள்வியாக உள்ளது. யமஹா புதிய ஏரோக்ஸ்155 ஸ்கூட்டருக்கு அப்டேட்டாக புதியதாக 6 நிறத்தேர்வுகளை வழங்கியுள்ளது. 2022 ஏரோக்ஸின் ஏபிஎஸ் வேரியண்ட்டிற்கு மேட் கருப்பு கோல்டு மற்றும் மேட் வெள்ளை கோல்டு என்கிற இரு புதிய நிறத்தேர்வுகளும், கனெக்டட் வெர்சனுக்கு 4 புதிய நிறத்தேர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன.

அப்டேட் செய்யப்பட்ட 2022 யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

இந்த 4 புதிய நிறத்தேர்வுகளில் கருப்பு சியான், டார்க் க்ரே மஞ்சள், சிவப்பு தொடுதல்களுடன் கருப்பு மற்றும் பளிச்சிடும் கருப்பு நிற உடற் பேனல்களுடன் சிவப்பு என்பவை அடங்குகின்றன. இந்த புதிய நிறத்தேர்வுகளை தவிர்த்து தோற்றத்திலும், பரிமாண அளவுகளிலும், இவ்வளவு ஏன், இயந்திர பாகங்களிலும் கூட எந்தவொரு மாற்றமும் இல்லை.

அப்டேட் செய்யப்பட்ட 2022 யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

ஆனால் நிச்சயம் இந்த புதிய பெயிண்ட் தேர்வுகளினால் ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரின் ஆயுட்காலம் அதிகரிக்கும் என்பது மட்டும் உறுதி. இந்தியாவில் யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர் கடந்த ஆண்டு இறுதியில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலைகள் சமீபத்தில் தான் புதிய 2022ஆம் ஆண்டிற்கு ஏற்ப சற்று திருத்தப்பட்டன. இதன்படி இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.1,000 உயர்த்தப்பட்டது.

அப்டேட் செய்யப்பட்ட 2022 யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

தற்சமயம் ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரின் விலை ரூ.1.32 லட்சமாக உள்ளது. நிச்சயமாக, இதன் அப்டேட் வெர்சன் அறிமுகப்படுத்தப்பட்டால், அதன் விலை இதனை காட்டிலும் அதிகமாகவே நிர்ணயிக்கப்படும். இந்தியாவில் யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டருக்கு அப்ரில்லா எஸ்.ஆர்160 மற்றும் எஸ்.எக்ஸ்.ஆர் 160 உள்ளிட்டவை போட்டியாக விளங்குகின்றன.

அப்டேட் செய்யப்பட்ட 2022 யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

ஆனால் இந்த அப்ரில்லா ஸ்கூட்டர்களுடன் ஒப்பீடுகையில் ஏரோக்ஸ் 155 ஆனது முற்றிலும் வேறுப்பட்ட ஹேண்ட்லிங் மற்றும் அதிக செயல்திறனை கொண்டுள்ளது. இதன் மூலமாக உண்மையான, ஸ்போர்டியான ஸ்கூட்டராக ஏரோக்ஸ் விளங்குகிறது. ஏனெனில் பிரபலமான ஆர்15 மோட்டார்சைக்கிளில் வழங்கப்படும் அதே 155சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு, ஃபுயுல்-இன்ஜெக்டட் என்ஜினே ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரிலும் பொருத்தப்படுகிறது.

அப்டேட் செய்யப்பட்ட 2022 யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

வெவ்வேறான வால்வு செயல்பாட்டு தொழிற்நுட்பத்துடன் வழங்கப்படும் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 14.79 பிஎச்பி மற்றும் 13.9 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. ஆற்றல்மிக்க ஸ்கூட்டரான இதில் முன்பக்கத்திலும், பின்பக்கத்திலும் 14-இன்ச்சில் சக்கரங்கள் பொருத்தப்படுகின்றன.

அப்டேட் செய்யப்பட்ட 2022 யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

புதிய ஏரோக்ஸ் 155-இல் மிக முக்கிய தொழிற்நுட்ப அம்சமாக எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்படுகிறது. இத்துடன் ஆர்15 பைக்குகளுக்கு இணையான எல்இடி ஹெட்லேம்ப், சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் அமைப்பு, சைடு-ஸ்டாண்ட் போடப்பட்டிருந்தால் என்ஜின் ஆஃப் ஆகும் செயல்பாடு மற்றும் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவையும் ஏரோக்ஸ் 155-இல் வழங்கப்படுகின்றன.

அப்டேட் செய்யப்பட்ட 2022 யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

இந்தியாவில் இந்த யமஹா ஸ்கூட்டர் கருப்பு, க்ரே மற்றும் நீலம் என்கிற 3 விதமான நிறத்தேர்வுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் கருப்பு நிறத்தேர்வில் சமீபத்தில் தான் ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்துடன் மோட்டோஜிபி வெர்சனிலும் ஏரோக்ஸ் மாடல் கிடைக்கிறது. மோட்டோஜிபி வெர்சனில் இந்த யமஹா ஸ்கூட்டரின் விலை சற்று அதிகமாகும்.இந்தியாவிலும் ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரில் ப்ளூடூத் இணைப்பு வசதி வழங்கப்படுகிறது.

அப்டேட் செய்யப்பட்ட 2022 யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

இந்த ஸ்கூட்டரில் இருக்கைக்கு அடியில் 24.5 லிட்டர்கள் கொள்ளளவில் பொருட்களை வைக்கும் பகுதி வழங்கப்படுகிறது. 276 கிலோவில் எடையினை கொண்டுள்ள இந்த யமஹா ஸ்கூட்டரில் ஓட்டுனர் இருக்கை ஆனது தரையில் இருந்து 790கிமீ உயரத்தில் கொடுக்கப்படுகிறது. க்ரவுண்ட் க்ளியரென்ஸ் இந்திய சாலைகளுக்கு ஏற்ப 145மிமீ-இல் வழங்கப்படுகிறது.பயணிகளின் பாதுகாப்பிற்கு சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரில் வழங்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, February 7, 2022, 18:27 [IST]
English summary
Yamaha introduced updated aerox 155 find here more details and changes
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+