இனி கருப்பு நிறத்திலும் யமஹா ஆர்15எஸ் பைக்!! விலை ரூபாய் ஆயிரம் மட்டுமே அதிகரிப்பு

விற்பனையில் இருக்கும் ஆர்15எஸ் மோட்டார்சைக்கிளுக்கு புதிய கருப்பு நிற தேர்வை யமஹா நிறுவனம் வழங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இனி கருப்பு நிறத்திலும் யமஹா ஆர்15எஸ் பைக்!! விலை ரூபாய் ஆயிரம் மட்டுமே அதிகரிப்பு

இந்தியர்களையும் யமஹா ஆர்15 பைக்கையும் பிரிக்கவே முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு கடந்த பல வருடங்களாக இந்திய சந்தையில் யமஹாவின் மிகுந்த நம்பிக்கைக்குரிய மாடலாக ஆர்15 உள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் மிக பிரபலமான பைக்குகளுள் ஒன்றாக ஆர்15 உள்ளது.

இனி கருப்பு நிறத்திலும் யமஹா ஆர்15எஸ் பைக்!! விலை ரூபாய் ஆயிரம் மட்டுமே அதிகரிப்பு

இதனாலேயே ஆர்15-இன் புதிய தலைமுறை மாடல் ஆர்15 வி4 என்கிற பெயரில் கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், முந்தைய 3ஆம் வெர்சன் தொடர்ந்து ஆர்15எஸ் என்கிற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆர்15எஸ் மோட்டார்சைக்கிளுக்கு தான் புதியதாக மேட் கருப்பு நிறத்தேர்வு வழங்கப்பட்டுள்ளது.

இனி கருப்பு நிறத்திலும் யமஹா ஆர்15எஸ் பைக்!! விலை ரூபாய் ஆயிரம் மட்டுமே அதிகரிப்பு

அறிமுகத்தில் இருந்து இதுவரையில் ஆர்15எஸ் பைக்கிற்கு ரேசிங் நீல நிறத்தேர்வு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. தற்போது இதனுடன் புதிய மேட் கருப்பு நிற பெயிண்ட் தேர்வும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆர்15எஸ் பைக்கும் தொடர்ந்து புத்துணர்ச்சியானதாக காட்சியளிக்கும். அதேநேரம் ஆர்15எஸ் மாடலின் விலைகளையும் ஆயிரம் ரூபாய் வரையில் யமஹா நிறுவனம் உயர்த்தியுள்ளது.

இனி கருப்பு நிறத்திலும் யமஹா ஆர்15எஸ் பைக்!! விலை ரூபாய் ஆயிரம் மட்டுமே அதிகரிப்பு

யமஹா ஆர்15 பைக்குகளில் உள்ள ஒரே குறை என்னவென்றால், அவற்றின் விலைகள் தான். கடந்த 2021இன் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆர்15 வி4 பைக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையே ரூ.1.78 லட்சமாக உள்ளது. இந்த விலையில் இதேபோன்று பந்தய களத்திற்கு ஏற்ற மோட்டார்சைக்கிளான சுஸுகி ஜிக்ஸெர் எஸ்.எஃப்250 -ஐ வாங்கிவிடலாம். இத்தனைக்கும் இது 250சிசி மாடல்.

Yamaha Jul 2022 Price Jun 2022 Price
FZ-FI 1,12,700 1,12,700
FZS-FI 1,20,400 1,20,400
FZS-FI Deluxe 1,23,400 1,23,400
FZ-X 1,31,400 1,31,400
FZ 25 1,44,600 1,44,600
FZS 25 1,49,100 1,49,100
MT15 Black 1,61,900 1,61,900
MT15 Ice Fluo / CYAN / Blue 1,62,900 1,62,900
R15S 1,60,900 1,59,900
R15 V4 Metallic Red 1,77,400 1,77,400
R15 V4 Dark Knight 1,78,400 1,78,400
R15 V4 Racing Blue 1,82,400 1,82,400
R15M V4 Metallic Grey 1,87,400 1,87,400
R15M WGP 60th Edition 1,88,800 1,88,800
இனி கருப்பு நிறத்திலும் யமஹா ஆர்15எஸ் பைக்!! விலை ரூபாய் ஆயிரம் மட்டுமே அதிகரிப்பு

இருப்பினும் வாடிக்கையாளர்கள் பலரது தேர்வு ஆர்15 மீதுதான் உள்ளது என்பதை ஒவ்வொரு மாத விற்பனை எண்ணிக்கைகளும் தெளிவாக காட்டிவிடுகின்றன. ஆர்15-இன் மூன்றாம் தலைமுறையில் (அதாவது தற்போதைய ஆர்15எஸ்) யுஎஸ்டி ஃபோர்க்குகள் உள்பட சில உதவி தொகுப்பு குறைப்பாடாக இருந்தது. ஆனால் இதனை புதிய ஆர்15 வி4 மாடல் நிவர்த்தி செய்துவிட்டது. இருப்பினும் தற்போதைய ஆர்15எஸ் மாடலில் இந்த குறைப்பாடுகள் இன்னமும் உள்ளன.

இனி கருப்பு நிறத்திலும் யமஹா ஆர்15எஸ் பைக்!! விலை ரூபாய் ஆயிரம் மட்டுமே அதிகரிப்பு

இதனாலேயே ஆர்15 வி4 உடன் ஒப்பிடுகையில், ஆர்15எஸ் பைக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை கிட்டத்தட்ட ரூ.10,000-இல் இருந்து ரூ.15,000 வரையில் குறைவாக உள்ளன. டெல்டா பெட்டகம் மற்றும் சிறப்பான காற்றியக்கவியலுக்கு இணக்கமான உடலமைப்பில் உருவாக்கப்படும் ஆர்15எஸ் பைக்கில் 155சிசி சிங்கிள்-சிலிண்டர் SOHC 4-வால்வு என்ஜின் பொருத்தப்படுகிறது.

இனி கருப்பு நிறத்திலும் யமஹா ஆர்15எஸ் பைக்!! விலை ரூபாய் ஆயிரம் மட்டுமே அதிகரிப்பு

இது அதிக-அழுத்த மற்றும் விரைவான சுழல் வேகத்தை கொண்ட என்ஜின் ஆகும். தற்கால மாடர்ன் மோட்டார்சைக்கிளுக்கு ஏற்ப லிக்யுடு கூலிங் அமைப்பை பெறும் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 10,000 ஆர்பிஎம்-இல் 18.1 பிஎச்பி மற்றும் 8,500 ஆர்பிஎம்-இல் 14.1 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

இனி கருப்பு நிறத்திலும் யமஹா ஆர்15எஸ் பைக்!! விலை ரூபாய் ஆயிரம் மட்டுமே அதிகரிப்பு

சஸ்பென்ஷனுக்கு ஆர்15எஸ் பைக்கில் முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் அமைப்பும், பின்பக்கத்தில் மோனோஷாக் அமைப்பும் வழங்கப்படுகின்றன. இதன் 17-இன்ச் சக்கரங்களில் முன் சக்கரத்தில் 100-பிரிவு & 80 சுயவிவரம் டயரும், பின் சக்கரத்தில் 140-பிரிவு & 70 சுயவிவரம் டயரும் பொருத்தப்படுகின்றன. இந்த யமஹா ஸ்போர்ட்ஸ் பைக்கின் எடை வெறும் 142 கிலோ மட்டுமே.

இனி கருப்பு நிறத்திலும் யமஹா ஆர்15எஸ் பைக்!! விலை ரூபாய் ஆயிரம் மட்டுமே அதிகரிப்பு

இதனால் பந்தய களங்களில் குறுகிய வளைவுகளில் ஆர்15எஸ் பைக்கில் திரும்புவது எளிது. கடந்த ஆண்டு அறிமுகத்தின்போது மோட்டோஜிபி வெர்சனிலும் ஆர்15 வி4 பைக் களமிறக்கப்பட்டது. ஆனால் இந்த ஸ்பெஷல் வெர்சனை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யவுள்ளதாக அதன் அறிமுகத்தின்போதே யமஹா தெரிவித்திருந்தது.

இனி கருப்பு நிறத்திலும் யமஹா ஆர்15எஸ் பைக்!! விலை ரூபாய் ஆயிரம் மட்டுமே அதிகரிப்பு

ஆனால் எதிர்பார்த்ததற்கு முன்னதாகவே ஆர்15 வி4 மோட்டோஜிபி எடிசன் பைக்குகள் கடந்த மே மாத மத்தியில் விற்று தீர்ந்தன. அத்துடன் ஆர்15 வி4 மாடலுடன், எஃப்.இசட்25 என்ற தனது 250சிசி நாக்டு பைக்கிற்கும் மோட்டோஜிபி எடிசனை யமஹா வழங்கி இருந்தது. இதுவும் முழுவதுமாக விற்று தீர்ந்துள்ளது. எஃப்.இசட்25 மோட்டோஜிபி எடிசன் வெறும் ரூ.1.38 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 5, 2022, 11:05 [IST]
English summary
Yamaha launched new colour option for r15s
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+