யமஹா எம்டி15 பைக்கின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம்!! புதிய வெர்சன் விரைவில் அறிமுகம்!

யமஹா எம்டி15 பைக்கின் விற்பனை இந்தியாவில் நிறுத்தி கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்த முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

யமஹா எம்டி15 பைக்கின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம்!! புதிய வெர்சன் விரைவில் அறிமுகம்

இந்தியாவில் எப்போதும் பிரபலமான யமஹா மோட்டார்சைக்கிள் என்றால் அது ஆர்15 தான். அந்த அளவிற்கு நம் நாட்டில் யமஹா ஆர்15 பைக்குகளுக்கு ரசிகர்கள் உள்ளனர். ஆர்15 மாடலின் புதிய நான்காம் தலைமுறையை ஆர்15 வி4 என்கிற பெயரில் யமஹா கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தியது.

யமஹா எம்டி15 பைக்கின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம்!! புதிய வெர்சன் விரைவில் அறிமுகம்

இதனை தொடர்ந்து ஆர்15 பைக்கின் நாக்டு வெர்சனாக பார்க்கப்படும் எம்டி15 பைக்கிற்கும் குறிப்பிடத்தக்க அப்டேட்கள் வழங்கப்பட உள்ளன. ஆர்15 பைக்கை போல் இந்தியாவில் எம்டி15 பைக்கிற்கும் சிறப்பான வரவேற்பு அறிமுகத்தில் இருந்து கிடைத்து வருகிறது. இதனை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் கொண்டுவரப்படும் புதிய எம்டி15 பைக்கின் அறிமுகத்தினை அடுத்த 2022 ஏப்ரல் மாதத்தில் எதிர்பார்க்கிறோம்.

யமஹா எம்டி15 பைக்கின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம்!! புதிய வெர்சன் விரைவில் அறிமுகம்

இந்த நிலையில்தான் தற்போது புதிய எம்டி15 பைக்கின் அறிமுகத்திற்கு முன்னதாக, விற்பனையில் இருக்கும் எம்டி15 பைக்கின் விற்பனை நாடு முழுவதும் படிப்படியாக நிறுத்தி கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் அருகில் உள்ள டீலர்ஷிப் மையங்களை விசாரித்தால், இன்னும் சில எம்டி15 பைக்குகள் ஸ்டாக்கில் இருக்கலாம். தற்போதைய குறைந்த விலையில் எம்டி15 பைக்கை சொந்தமாக்க நினைப்பவர்களுக்கு இதுவே சரியான தருணம்.

யமஹா எம்டி15 பைக்கின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம்!! புதிய வெர்சன் விரைவில் அறிமுகம்

ஏனெனில் வருகிற ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய எம்டி15 பைக்கின் விலை நிச்சயமாக சற்று அதிகமாகவே நிர்ணயிக்கப்படும். விலையெல்லாம் எனக்கு கவலை இல்லை, பைக் புத்துணர்ச்சியான தோற்றத்தில் காட்சியளிக்க வேண்டுமென்பவர்கள் புதிய எம்டி15 பைக்கின் அறிமுகம் வரையில் காத்திருங்கள். விற்பனையை பொறுத்தவரையில், ஏற்கனவே கூறியதுதான் கிட்டத்தட்ட யமஹா ஆர்15 பைக்கிற்கு இணையான வரவேற்பு எம்டி15 பைக்கிற்கும் கிடைத்துவந்தது.

யமஹா எம்டி15 பைக்கின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம்!! புதிய வெர்சன் விரைவில் அறிமுகம்

இந்தியாவில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு சில மாதங்களுக்கு மட்டுமே எம்டி15 பைக்கின் விற்பனை சுமாராக இருந்தது. ஆனால் சில மாதங்களிலேயே இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகிய இந்த நாக்டு பைக்கின் விற்பனை அதன்பின்பு வேகமெடுக்க ஆரம்பித்தது. கடந்த 2021ஆம் ஆண்டில் சராசரியாக மாதத்திற்கு 5 ஆயிரம் எம்டி15 பைக்குகள் நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டன.

யமஹா எம்டி15 பைக்கின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம்!! புதிய வெர்சன் விரைவில் அறிமுகம்

ஆனால் எந்தவொரு வாகனத்தின் விற்பனையும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும்தான் என்பது நமக்கு தெரிந்ததே. இதில் யமஹா எம்டி15 பைக் மட்டும் என்ன விதிவிலக்கா. மாதத்திற்கு சராசரியாக 5 ஆயிரம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த பைக்கின் விற்பனை சமீப மாதங்களாக வெகுவாக குறைய ஆரம்பித்தது. அதிலிலும் குறிப்பாக, கடந்த 2022 ஜனவரி மாதத்தில் வெறும் 17 எம்டி15 பைக்குகள் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

யமஹா எம்டி15 பைக்கின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம்!! புதிய வெர்சன் விரைவில் அறிமுகம்

இதில் இருந்து எம்டி15 பைக்கை அப்டேட் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை யமஹா உணர்ந்துள்ளது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, தற்போதைய தலைமுறை எம்டி15 பைக்கின் தயாரிப்பு நிறுத்தப்பட்டு, அப்டேட் செய்யப்பட்ட புதிய எம்டி15 பைக்கை தயாரிக்கும் பணிகளை ஏற்கனவே யமஹா தனது இந்திய தொழிற்சாலைகளில் துவங்கிவிட்டது. ஜப்பானை சேர்ந்த யமஹாவிற்கு இந்தியாவில் ஹரியானா, உத்தர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு என 3 மாநிலங்களில் தொழிற்சாலைகள் உள்ளன.

யமஹா எம்டி15 பைக்கின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம்!! புதிய வெர்சன் விரைவில் அறிமுகம்

தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் யமஹா 2-வீலர்ஸ் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் யமஹா இருசக்கர வாகனங்கள் உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்படுவது மட்டுமின்றி, வெளிநாட்டு சந்தைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. 2022 யமஹா எம்டி15 பைக்கை பொறுத்தவரையில், இது தோற்றத்திலும் மற்றும் இயந்திர பாகங்களிலும் அப்டேட்களை பெற்றுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யமஹா எம்டி15 பைக்கின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம்!! புதிய வெர்சன் விரைவில் அறிமுகம்

எம்டி15 பைக்கின் முகப்பு தோற்றம் இந்திய இளம் தலைமுறையினருக்கு மிகவும் பிடித்துப்போய் உள்ளதால், இதன் முன்பக்க இரட்டை-கண் ஹெட்லேம்ப் அமைப்பில் யமஹா பெரியதாக கை வைக்காது. ஆனால் ஹேண்டில்பாரை சற்று அகலமாக்கலாம். இவற்றுடன் பின்பக்கத்தை காட்டும் கண்ணாடிகள், பெட்ரோல் டேங்க், என்ஜின் பாதுகாப்பான், ரேடியேட்டருக்கான பக்கவாட்டு ஃபின்கள், நறுக்கப்பட்ட பின் முனைப்பகுதி மற்றும் மேல்நோக்கி வளைக்கப்பட்ட எக்ஸாஸ்ட் குழாய் உள்ளிட்டவற்றிலும் மாற்றங்கள் வழங்கப்படலாம்.

யமஹா எம்டி15 பைக்கின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம்!! புதிய வெர்சன் விரைவில் அறிமுகம்!

இத்துடன் காஸ்மெட்டிக் அப்டேட்களாக புதிய கிராஃபிக்ஸ் மற்றும் பெயிண்ட் தேர்வுகள் எம்டி15 பைக்கிற்கு கொடுக்கப்படலாம். தற்சமயம் எம்டி15 பைக் மெட்டாலிக் கருப்பு, அடர் மேட் நீலம் மற்றும் ஐஸ் ஃப்ளூ-வெர்மிலன் என்கிற நிறத்தேர்வுகளில் கிடைக்கிறது. மேலும், மான்ஸ்டர் எனர்ஜி யமஹா மோட்டோஜிபி எடிசனிலும் இந்த நாக்டு பைக் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 3, 2022, 10:55 [IST]
English summary
Yamaha mt15 discontinued ahead of new version launch
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+