ரொம்ப நாளா எதிர்பார்த்த ஆர்எக்ஸ்100 பைக் மீண்டும் விற்பனைக்கு வருது! விலை எவ்வளவு தெரியுமா?

யமஹா நிறுவனம் தனது பிரபலமான ஆர்எக்ஸ் 100 பைக்கை மீண்டும் புதிய வடிவமைப்பில் மார்கெட்டிற்கு கொண்டு வர முடிவு செய்திருந்தது. தற்போது அந்த பைக் குறித்த மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் யமஹா நிறுவனத்தின் ஆர்எக்ஸ் 100 பைக் மிகவும் பிரபலமானது. இந்த பைக்கிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இன்றும் இந்த இந்த பைக் செகண்ட் ஹேண்ட் மார்கெட்டில் மிகப்பெரிய டிமாண்டில் இருக்கிறது. இன்று ரூ50 ஆயிரம் கொடுத்தாலும் இந்த பைக் கிடைப்பதில்லை. இப்படியாக மக்கள் மத்தியில் பெயர் பெற்ற இந்த ஆர்எக்ஸ் 100 பைக்கை மீண்டும் வெளியிட யமஹா நிறுவனம் முடிவு செய்திருந்தது.

ரொம்ப நாளா எதிர்பார்த்த ஆர்எக்ஸ்100 பைக் மீண்டும் விற்பனைக்கு வருது! விலை எவ்வளவு தெரியுமா?

இந்த செய்தியை அந்நிறுவனத்தின் தலைவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில் இந்த பைக் குறித்த மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிதாக வரப்போகும் யமஹா ஆர்எக்ஸ் 100 பைக் அந்த நிறுவனத்தின் குறைந்த விலை பைக்காக விற்பனைக்கு வரும் எனத் தெரியவந்துள்ளது. இந்த பைக்கின் வடிவமைப்பில் பழைய பைக்கின் டிசைனை மேலும் மேம்படுத்தி தற்போதைய இளைஞர்களைக் கவரும் வகையில் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் இன்ஜின் முதல் வீல் வரை பல மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. பழைய பைக்கை விட புதிய தலைமுறை ஆர்எக்ஸ்100 பைக்கில் நவீனமான ஃப்யூயல் இன்ஜெக்டர் வசதி கொண்ட முன்பைவிட அதிக பவர் கொண்ட இன்ஜின் பொருத்தப்படுகிறது. இது போக பைக்கில் எல்இடி டிஆர்எல்கள், எலெக்ட்ரிக் ஸ்டார்ட், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென் கன்சோல் உள்ளிட்ட விஷயங்கள் இடம் பெறவுள்ளன. இந்த பைக் முற்றிலுமாக புதிய பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படவுள்ளது.

பைக்கின் வீலை பொருத்தவரை வயர்-ஸ்போக் வீல்கள் கொடுக்கப்படவுள்ளன. இந்த பைக்கின் சஸ்பென்சனை பொருத்தவரை முன்பக்கம் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்க்கம் ட்வின் ஷாக் அப்சர்பர்கள் கொடுக்கப்படவுள்ளன. பிரேக்கிங்கை பொருத்தவரை முன் பக்க வீலில் டிஸ்க் பிரேக்கும், பின்பக்க வீலில் டிரம் பிரேக்கும் வழங்கப்படவுள்ளன. இதுவரை வெளியான தகவலின்படி இந்த ஆர்எக்ஸ் 100 பைக்கில் 125 சிசி இன்ஜின் பொருத்தப்படும் எனப் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இன்று இந்தியாவில் பல ஸ்கூட்டர்களிலேயே 125 சிசி இன்ஜின்கள் பொருத்தப்படுகின்றன. அதனால் இந்த பைக்கில் 150 சிசி இன்ஜின் பொருத்தப்படும் என்ற பேச்சும் நிலவுகிறது. இந்த பைக் விற்பனைக்கு வந்தால், இது நேரடியாக டிவிஎஸ் ரைடர் 125 பைக்குடன் போட்டியிடும் என எதிர்பார்க்கலாம். இதுவரை யமஹா நிறுவனம் ஆர்எக்ஸ் 100 பைக் எப்பொழுது விற்பனைக்கு வரும் என உறுதியான தகவலை இதுவரை வெளியிடவில்லை.

ஆனால் நமக்குக் கிடைத்த தகவலின்படி இந்த பைக் வரும் 2023ம் ஆண்டு இறுதியிலோ அல்லது 2024ம் ஆண்டு துவக்கத்திலோ வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் மார்கெட்டிற்கு வரும் போது ரூ1.25 முதல் 1.5 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கலாம். குறைந்த விலையில் விற்பனைக்கு வருவதால் இந்த பைக் வெளியாகும் போது இதன் விற்பனை மேலும் அதிகமாகும் எனக் கூறப்படுகிறது.

யமஹா நிறுவனம் தற்போது உள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டிரெண்டிலும் இணையும் முயற்சியில் இருக்கிறது. இந்நிறுவனம் டிவிஎஸ் ஐக்யூப், ஏத்தர் 450எக்ஸ், ஓலா எஸ்1 ப்ரோ, ஆகிய ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இறக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த ஆர்எக்ஸ் 100 பைக் மீண்டும் விற்பனைக்கு வரவுள்ள நிலையில் இந்த பைக்கை நீங்கள் வாங்கியுள்ளீர்கள்? இதை விரிவாகக் காணலாம் வாருங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 14, 2022, 19:00 [IST]
English summary
Yamaha new gen Rx 100 bike bigger engine and other detailed
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+