இந்த பைக் ஸ்டாண்ட் போடலனாலும் கீழே விழாது... நம்ம யமஹா உருவாக்கிய அசத்தலான எலெக்ட்ரிக் பைக்!

முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான யமஹா செல்ஃப் பேலன்ஸ் வசதிக் கொண்ட மோட்டார்சைக்கிளை உருவாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆர்3 மாடலையே இந்த அசத்தலான அம்சம் கொண்ட பைக்காக நிறுவனம் உருவாக்கி உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஒட்டுமொத்த உலகமே மின் வாகன இயக்கத்தை நோக்கி நகர தொடங்கி இருக்கின்றது. இந்த நகர்வை முன்னிட்டு வாகன உற்பத்தியாளர்களும் மின் வாகனங்களை அனல் பறக்க தயாரிக்கத் தொடங்கி இருக்கின்றனர். இந்த நிலையிலேயே உலக புகழ்பெற்ற இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான யமஹா செல்ஃப் பேலன்ஸ் வசதிக் கொண்ட ஆர் 3 பைக்கை உருவாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பைக்கை வெறும் செல்ஃப் பேலனஸ் வசதிக் கொண்ட இருசக்கர வாகனமாக மட்டுமே நிறுவனம் தயாரிக்கவில்லை.

செல்ஃப் பேலன்ஸிங் பைக்

அதில் பெட்ரோல் மோட்டாருக்கு பதிலாக எலெக்ட்ரிக் மோட்டாரையே நிறுவனம் பயன்படுத்தியிருக்கின்றது. ஆமாங்க, யமஹா நிறுவனம் இந்த பைக்கை எலெக்ட்ரிக் பைக்காகவே உருவாக்கி இருக்கின்றது. இதையே தற்போது வெளியீடும் செய்துள்ளது. இதனை நிறுவனம் எப்போது இந்த உலகிற்கு விற்பனைக்குக் கொண்டு வரும் என்கிற தகவல் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இந்த பைக்கின் வருகையை எதிர் நோக்கி ஒட்டுமொத்த இருசக்கர வாகன பிரியர்களும் இப்போதே காத்திருக்கத் தொடங்கி இருக்கின்றனர்.

இதற்கு மிக முக்கியமான காரணமே செல்ஃப் பேலன்ஸ் வசதியைக் கொண்ட வாகனமாக இது உருவாக்கப்பட்டிருப்பதே ஆகும். இதற்காக நிறுவனம் அட்வான்ஸ்ட் மோட்டார்சைக்கிள் ஸ்டெபிளிட்டி அசிஸ்ட் சிஸ்டத்தை (Advanced Motorcycle Stability Assist System) பயன்படுத்தி இருக்கின்றது. இந்த அம்சத்தையே தற்போது டம்மியாக உருவாக்கப்பட்டிருக்கும் எலெக்ட்ரிக் ஆர்3 பைக்கில் யமஹா பயன்படுத்தி இருக்கின்றது. இந்த பைக்கை மின்சார பைக் என்பது தெரியாத வண்ணம் நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது. ஆம், நிறுவனத்தின் வழக்கமான மோட்டார்சைக்கிளை போலவே இதனை உருவாக்கி இருக்கின்றது.

அதேவேளையில், இது ஓர் எலெக்ட்ரிக் பைக் என்பதனால் ஒரு சில புதிய அம்சங்களும் இந்த பைக்கில் இடம் பெற்றிருப்பதை நம்மால் காண முடிகின்றது. முன் பக்கத்தில் இரண்டு மோட்டார்களை நம்மால் காண முடிகின்றது. முன் வீல் மற்றும் ஸ்டியரிங் வீல் ஹெட்டில் அது பொருத்தப்பட்டுள்ளது. இவையே பைக் இயங்கும், தேவைக்கேற்ப வலது மற்றும் இடது என திரும்பி பேலன்ஸ் செய்யவும் உதவியாக இருக்கும்.

மேலும், இருசக்கர வாகனத்தின் செல்ஃப் பேலன்ஸ் வசதிக்காக நிறுவனம் இன்னும் சில சிறப்பு கருவிகளை சேர்த்திருக்கின்றது. ஆறு ஆக்சிஸ் இன்டர்சியல் மெசர்மென்ட் யூனிட் பயன்படுத்தப்பட்டுள்ளது. யமஹா நிறுவனம் இதுபோன்று அட்வான்ஸ்ட் தொழில்நுட்ப வசதிக் கொண்ட இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்திருக்கின்றது. அந்தவகையில், 2015 ஆம் ஆண்டில் மோட்டோபாட் எனும் மாடலையும், 2017 இல் மோட்ட்ராய்டு எனும் மாடலையும் வெளியீடு செய்தது. ஆனால், இவை இரண்டும் இப்போது உற்பத்திக்கு வரவில்லை.

செல்ஃப் பேலன்ஸிங் பைக்

இந்த நிலையிலேயே புதிதாக நிறுவனம் அட்வான்ஸ்ட் மோட்டார்சைக்கிள் ஸ்டெபிளிட்டி அசிஸ்ட் சிஸ்டம் கொண்ட ஆர் 3 பைக் மாடலை யமஹா வெளியீடு செய்திருக்கின்றது. இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பான பயண அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக, இந்த அம்சத்தை தனது டூ-வீலரில் வழங்கும் பணியில் யமஹா ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனத்தை போலவே இன்னும் சில இருசக்கர வாகன உற்பத்தியாளர்களும் இதுபோல் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அதிக பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றன.

அந்தவகையில், ஹோண்டா நிறுவனம் நடுத்தர தன்னாட்சி இயக்கம் வசதிக் கொண்ட மற்றும் ஏர் பேக் செட்-அப் கொண்ட டூ-வீலரை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. இந்த மோட்டார்சைக்கிளும், தற்போது யமஹா வெளியீடு செய்திருக்கும் ஆர்3 செல்ஃப் பேலன்ஸ் வசதிக் எலெக்ட்ரிக் பைக்கும் எதிர்காலத்தில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், அவை எப்போது விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என்கிற துள்ளியமான விபரங்கள் வெளியிடப்படவில்லை.

இதுமட்டுமில்லைங்க ஆர்3 எலெக்ட்ரிக் பைக்கின் முக்கிய விபரங்கள் பல இப்போது வரை வெளியிடப்படவில்லை. அதாவது, என்ன மாதிரியான பவரை வெளியேற்றக் கூடிய மின்சார மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது?, ஓர் முழு சார்ஜில் எவ்வளவு ரேஞ்ஜை இந்த பைக்கை வழங்கும் (எத்தனை கிமீ பயணிக்கும்)?, என்பது போன்ற எந்த முக்கிய தகவலையும் நிறுவனம் வெளியிடவில்லை. இதுபோன்று அனைத்து தகவல்களும் ரகசியம் காக்கப்படுவதனாலேயே இந்த பைக் மீது இன்னும் ஆர்வம் அதிகரித்துக் காணப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, December 26, 2022, 19:25 [IST]
English summary
Yamaha self balancing r3 e bike
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+