பெட்ரோல் மற்றும் எத்தனாலில் இயங்கும் யமஹா பைக் அறிமுகம்... எங்கு தெரியுமா? இதோ முழு விபரம்!
பெட்ரோல் மற்றும் எத்தனாலில் ஓடக் கூடிய பைக் ஒன்றை பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான யமஹா வெளியீடு செய்துள்ளது. எங்கு, எந்த மாடலை அது வெளியீடு செய்திருக்கின்றது என்பது பற்றிய விபரங்களை கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

காற்று மாசுபாட்டின் தீவிரத்தை உணர்ந்து உலக நாடுகள் அனைத்தும் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு முடிவுகட்டும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றன. இந்த விஷயத்தில் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாண அரசாங்கம் ஒரு படி மேலே சென்றுவிட்டது என கூறலாம். பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு முற்றிலுமாக தடை விதிக்க அம்மாகாண அரசு தயாராகி இருக்கின்றது.

2035ம் ஆண்டிற்கு பிறகு எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட வாகனங்கள் மட்டுமே அம்மாகாணத்தில் விற்பனையில் இருக்கும்படியான நடவடிக்கையை அது எடுக்க தொடங்கியிருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. இவ்வாறு எண்ணற்ற நடவடிக்கைகள் உலகம் முழுக்க பெட்ரோல் - டீசல் வாகனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்தியாவிலும்கூட ஃப்ளெக்ஸி ஃப்யூவலில் இயங்கக் கூடிய வாகனங்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையிலேயே, யமஹா நிறுவனம் பெட்ரோல் மற்றும் எத்தனால் ஆகிய இரண்டிலும் இயங்கக் கூடிய இருசக்கர வாகனத்தை வெளியீடு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எஃப்இசட் - 15 பைக்கையே நிறுவனம் பெட்ரோல் மற்றும் எத்தனாலில் ஓடும் திறனில் உருவாக்கியிருக்கின்றது. பிரேசில் சந்தைக்கான அப்டேட் செய்யப்பட்ட 2023 வெர்ஷனே இந்த பைக்காகும். இதே பைக்கே ஃபேஸர் எஃப்இசட் 15 எனும் பெயரில் தெற்கு அமெரிக்க சந்தையில் தற்போது விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இந்த இருசக்கர வாகனத்தையே யமஹா நிறுவனம் வெகு விரைவில் இந்திய சந்தையிலும் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

அது விற்பனைக்கு வரும்பட்சத்தில் எஃப்இசட் வி3 எனும் பெயரில் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வருடம் அல்லது எப்போது வேண்டுமானாலும் அது இந்தியாவில் விற்பனைக்கு வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 2023 எஃப்இசட் 15 பைக்கில் இன்னும் சில மாற்றங்களும் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருசக்கர வாகனத்தின் ஸ்டைலிலேயே அம்மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. முன் பக்கத்திற்கு ஸ்போர்ட்ஸ் லுக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த தோற்றத்திற்காக ஹெட்லேம்ப் செட்-அப் முழுமையாக அப்டேட் செய்யப்பட்டிருக்கின்றது. மற்றபடி வேறு எந்த மாற்றத்தையும் இந்த பைக்கில் யமஹா நிறுவனம் செய்யவில்லை. ஆகையால், தற்போது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் எஃப்இசட் 25 பைக்கைப் போலவே பிரேசிலுக்காக புதுப்பிப்பைப் பெற்றிருக்கும் எஃப்இசட் 15 பைக்கும் காட்சியளிக்கின்றது.

ஏர் வெண்டுகள் கொண்ட பெரிய பெட்ரோல் டேங்க், ஒற்றை துண்டு அமைப்பிலான இருக்கை, சிறிய டெயில் லைட் மற்றும் ஸ்டப்பி எக்சாஸ்ட் ஆகிய அம்சங்களே எஃப்இசட் 25 பைக்கில் இடம் பெற்றிருக்கின்றன. அதேநேரத்தில், பைக்கின் பெட்ரோல் கொள்ளளவை நிறுவனம் குறைத்திருக்கின்றது. 11.9 லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது. புதிதாக இந்த பைக்கில் பைரல்லி டையப்ளோ ரோஸோ டயர்கள் இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த டயர்களை ஸ்டாண்டர்டு அம்சமாக யமஹா நிறுவனம் வழங்கியிருக்கின்றது. இந்த அம்சங்கள் அனைத்தைக் காட்டிலும் மிக சூப்பரான வசதியாக 2023 யமஹா எஃப்இசட் 15 பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மோட்டார் இருக்கின்றது. 149 சிசி மோட்டார் இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது வழக்கமான மோட்டாரில் இருந்து பல மடங்கு மாறுபட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

பெட்ரோல் மற்றும் எத்தனால் ஆகிய இரண்டிலும் இயங்கக் கூடியதே இந்த மோட்டார். ஆனால் பெட்ரோல் மற்றும் எத்தனாலில் மாறுபட்ட திறனை அது வெளிப்படுத்தும். பெட்ரோலில் ஓடும்போது 12.2 பிஎச்பி பவரையும், 12.7 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். அதேவேலையில், எத்தனாலில் 12.4 பிஎச்பி பவரையும், 13.3 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

இந்தியாவிலும் இதே திறனை வெளியேற்றக் கூடிய எஃப்இசட் வி3 பைக்கே எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல், அண்டர்பின்னங்ஸ் விஷயத்திலும் இந்த பைக்கில் எந்த மாற்றமும் இருக்காது என நம்பப்படுகின்றது. அதாவது, பிரேக்கிங் மற்றும் எஞ்ஜின் ஆகிய விஷயங்களில் எந்த மாற்றமும் இருக்காது என கூறப்படுகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் பிரேசில் மற்றும் இந்தியாவில் விற்பனையில் இருக்கும் எஃப்இசட் 15 பைக் ஒரே எடை மற்றும் ஒரே மாதிரியான தோற்றத்தைக் கொண்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications








