அதுக்குள்ளயா... யெஸ்டி பைக்குகளின் டெலிவிரி துவங்கியாச்சு!! ஆனந்த் மஹிந்திரா செம்ம குஷி!

யெஸ்டி மோட்டார்சைக்கிள்களின் டெலிவிரிகள் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும் விதமான ட்விட் ஒன்றினை மஹிந்திரா & மஹிந்திரா க்ரூப்பின் சேர்மன் ஆனந்த் மஹிந்திரா பதிவிட்டுள்ளார். இதனை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

அதுக்குள்ளயா... யெஸ்டி பைக்குகளின் டெலிவிரி துவங்கியாச்சு!! ஆனந்த் மஹிந்திரா செம்ம குஷி!

ஜாவா பிராண்டை போல், பழமையான யெஸ்டி பிராண்டையும் சொந்தமாக கொண்டுள்ள கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் இந்த பிராண்டில் இருந்து சமீபத்தில் மூன்று புதிய மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் முன்பு செயல்பாட்டில் இருந்த யெஸ்டி பிராண்ட் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.

அதுக்குள்ளயா... யெஸ்டி பைக்குகளின் டெலிவிரி துவங்கியாச்சு!! ஆனந்த் மஹிந்திரா செம்ம குஷி!

இந்த நிலையில் சமீபத்தில் புதிய யெஸ்டி பைக்குகளின் டெலிவிரிகள் துவங்கப்பட்டுள்ளதாக நமது ட்ரைவ்ஸ்பார்க் தமிழ் செய்திதளத்தில் கூறியிருந்தோம். தற்போது, இதனை மஹிந்திரா & மஹிந்திரா க்ரூப்பின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா அதிகாரப்பூர்வமாக தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி உள்ளார். யெஸ்டி பைக்குகளை முதலாவதாக டெலிவிரி பெற்ற வாடிக்கையாளர்களின் படங்களுடன் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

அதுக்குள்ளயா... யெஸ்டி பைக்குகளின் டெலிவிரி துவங்கியாச்சு!! ஆனந்த் மஹிந்திரா செம்ம குஷி!

மஹிந்திரா & மஹிந்திரா க்ரூப்பின் ஒரு அங்கமாக கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் செயல்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது. பண்ணி புனியா மற்றும் மனோஜ் குமார் என பெயர் கொண்ட முதல் வாடிக்கையாளர்களில், பண்ணி புனியா யெஸ்டி அட்வென்ச்சர் பைக்கையும், மனோஜ் யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்கையும் டெலிவிரி பெற்றுள்ளனர்.

அதுக்குள்ளயா... யெஸ்டி பைக்குகளின் டெலிவிரி துவங்கியாச்சு!! ஆனந்த் மஹிந்திரா செம்ம குஷி!

இவற்றிற்கு முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜாவா பைக்குகளை முன்பதிவு செய்தவர்கள் டெலிவிரி பெற நீண்ட வாரங்கள் காத்திருக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் யெஸ்டி பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்ட சில வாரங்களிலேயே டெலிவிரி கொடுக்கப்பட துவங்கப்பட்டுவிட்டது. இதனை வரும் வாரங்களிலும் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் தொடரும் என எதிர்பார்க்கிறோம்.

அதுக்குள்ளயா... யெஸ்டி பைக்குகளின் டெலிவிரி துவங்கியாச்சு!! ஆனந்த் மஹிந்திரா செம்ம குஷி!

மறுஉயிர் பெற்றுள்ள யெஸ்டி பிராண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 3 மோட்டார்சைக்கிள்களாவன, ரோட்ஸ்டர், அட்வென்ச்சர் மற்றும் ஸ்க்ராம்ப்ளர் ஆகும். இவை மூன்றும் சில பாகங்களை ஒன்றுடன் ஒன்று பகிர்ந்து கொண்டுள்ளன. இந்த பாகங்களில் ஸ்விட்ச்கியர், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் பிரேக் பாகங்கள் உள்ளிட்டவற்றை சொல்லலாம்.

அதுக்குள்ளயா... யெஸ்டி பைக்குகளின் டெலிவிரி துவங்கியாச்சு!! ஆனந்த் மஹிந்திரா செம்ம குஷி!

இதனாலேயே இந்த மூன்று பைக்குகளின் விலைகளையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக கிளாசிக் லெஜண்ட்ஸால் நிர்ணயிக்க முடிந்தது மட்டுமல்லாமல், அவற்றின் போட்டி மாடல்களின் விலைகளுக்கு இணையானதாகவும் நிர்ணயிக்க முடிந்துள்ளது. அதேபோல் இவை மூன்றும் எல்இடி விளக்குகள் மற்றும் எல்இடி டர்ன் இண்டிகேட்டர்களை கொண்டுள்ளன.

அதுக்குள்ளயா... யெஸ்டி பைக்குகளின் டெலிவிரி துவங்கியாச்சு!! ஆனந்த் மஹிந்திரா செம்ம குஷி!

இவ்வளவு ஏன், இவை மூன்றிலும் ஒரே மாதிரியாக 334சிசி, லிக்யுடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த என்ஜின் இந்த 3 மோட்டார்சைக்கிள்களிலும் வெவ்வேறான ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் ட்யூன் செய்யப்பட்டு கொடுக்கப்பட உள்ளது. அதேபோல் இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகளும் ஒன்றுக்கொன்று வித்தியாசப்படுகின்றன.

அதுக்குள்ளயா... யெஸ்டி பைக்குகளின் டெலிவிரி துவங்கியாச்சு!! ஆனந்த் மஹிந்திரா செம்ம குஷி!

ரோட்ஸ்டர் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.98 லட்சமாகவும், ஸ்க்ராம்ப்ளர் பைக்கின் விலை ரூ.2.04 லட்சமாகவும். அட்வென்ச்சர் பைக்கின் விலை ரூ.2.09 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இவற்றின் ஆரம்ப விலையாகும். அதாவது, பெயிண்ட் தேர்வை பொறுத்து இந்த எக்ஸ்-ஷோரூம் விலைகள் அதிகமாகலாம். விலையை பார்த்தவுடனே தெரிந்திருக்கும், ரோட்ஸ்டர் தான் இருப்பதிலேயே மலிவான யெஸ்டி பைக்காகும்.

அதுக்குள்ளயா... யெஸ்டி பைக்குகளின் டெலிவிரி துவங்கியாச்சு!! ஆனந்த் மஹிந்திரா செம்ம குஷி!

3 யெஸ்டி பைக்குகளிலேயே ட்யுப்லெஸ் டயர்கள் மற்றும் அலாய் சக்கரங்களுடன் விற்பனை செய்யப்படும் ஒரே மோட்டார்சைக்கிள் இது மட்டுமே ஆகும். இதன் முன் சக்கரம் 18-இன்ச்களிலும், பின் சக்கரம் 17-இன்ச்களிலும் வழங்கப்படுகின்றன. இதில் 334சிசி, லிக்யுடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 29.7 எச்பி மற்றும் 29 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

அதுக்குள்ளயா... யெஸ்டி பைக்குகளின் டெலிவிரி துவங்கியாச்சு!! ஆனந்த் மஹிந்திரா செம்ம குஷி!

யெஸ்டி ரோட்ஸ்டரில் மிக முக்கிய சிறப்பம்சமாக இரட்டை எக்ஸாஸ்ட் குழாய்கள் வழங்கப்படுகின்றன. வேரியண்ட்டை பொறுத்து இந்த யெஸ்டி மாடலை கருப்பு மற்றும் க்ரோம் ஃபினிஷிங்கில் பெறலாம். முதலாவதாக வாடிக்கையாளரை சென்றடைந்துள்ள யெஸ்டி அட்வென்ச்சர் பைக்கில் ஆஃப்-ரோடு பயணங்களுக்காக நீண்ட-டிராவல் சஸ்பென்ஷன் முன்பக்கத்திலும், மோனோ-ஷாக் பின்பக்கத்திலும் வழங்கப்பட்டுள்ளன.

அதுக்குள்ளயா... யெஸ்டி பைக்குகளின் டெலிவிரி துவங்கியாச்சு!! ஆனந்த் மஹிந்திரா செம்ம குஷி!

இதன் முன் சக்கரம் 21 இன்ச்சிலும், பின்சக்கரம் ஒரேடியாக சிறியதாக 17 இன்ச்சிலும் வழங்கப்படுகிறது. ஸ்போக்டு சக்கரங்களுடன் வழங்கப்படும் இந்த அட்வென்ச்சர் பைக்கில் இரட்டை-பயன்பாடு டயர்கள் பொருத்தப்படுகின்றன. ப்ளூடூத் இணைப்பு மற்றும் ஒவ்வொரு திருப்பலுக்குமான நாவிகேஷன் வசதி உள்ளிட்டவற்றுடன் யெஸ்டி அட்வென்ச்சர் பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 220மிமீ-இல் க்ரவுண்ட் க்ளியரென்ஸை இந்த பைக் கொண்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 18, 2022, 15:41 [IST]
English summary
Yezdi deliveries commence Anand Mahindra shares the first pictures.
மேலும்... #யெஸ்டி #yezdi
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+