ராயல் என்பீல்டின் போட்டி மாடல்! யெஸ்டி ரோட்ஸ்டர் பைக்கில் அதிரடி அப்டேட்! கரெக்டான நேரத்துல பண்ணியிருக்காங்க!
யெஸ்டி ரோட்ஸ்டர் பைக்கில் அதிரடியான அப்டேட் ஒன்று செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் யெஸ்டி ரோட்ஸ்டர் (Yezdi Roadster) மிகவும் பிரபலமான பைக்குகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த சூழலில், யெஸ்டி ரோட்ஸ்டர் பைக்கில் யெஸ்டி இந்தியா நிறுவனம் தற்போது 2 புதிய கலர் ஆப்ஷன்களை அறிமுகம் செய்யவுள்ளது. இந்தியாவில் விரைவில் பண்டிகை காலம் தொடங்கவுள்ள நிலையில், இந்த 2 புதிய கலர் ஆப்ஷன்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இதன் காரணமாக பண்டிகை காலத்தில் இந்திய சந்தையில் யெஸ்டி ரோட்ஸ்டர் பைக்கின் விற்பனை எண்ணிக்கை உயரலாம் என யெஸ்டி நிறுவனம் எதிர்பார்க்கிறது. யெஸ்டி ரோட்ஸ்டர் பைக்கில் தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருப்பது இன்ஃபெர்னோ ரெட் (Inferno Red) மற்றும் க்ளாசியல் ஒயிட் (Glacial White) கலர் ஆப்ஷன்கள் ஆகும்.

யெஸ்டி ரோட்ஸ்டர் பைக் ஏற்கனவே ஸ்மோக்கி க்ரே (Smokey Grey), ஸ்டீல் ப்ளூ (Steel Blue), ஹண்டர் க்ரீன் (Hunter Green), கேலண்ட் க்ரே (Gallant Grey) மற்றும் சின் சில்வர் (Sin Silver) ஆகிய கலர் ஆப்ஷன்களில் கிடைத்து வருகிறது. இதனுடன் தற்போது இன்ஃபெர்னோ ரெட் மற்றும் க்ளாசியல் ஒயிட் ஆகிய புதிய கலர் ஆப்ஷன்களிலும் யெஸ்டி ரோட்ஸ்டர் பைக் விற்பனைக்கு கிடைக்கும்.

இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 (Royal Enfield Meteor 350) பைக்குடன், யெஸ்டி ரோட்ஸ்டர் பைக் போட்டியிட்டு வருகிறது. செயல்திறனை பொறுத்தவரையில், யெஸ்டி ரோட்ஸ்டர் பைக்கில் 334 சிசி, லிக்யூட் கூல்டு, டிஓஹெச்சி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்மில் 29.78 பிஹெச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 29.9 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

யெஸ்டி ரோட்ஸ்டர் பைக்கின் இன்ஜின், ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் இன்ஜினை காட்டிலும் சற்றே சிறியது. ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கில், 349 சிசி, ஃப்யூயல்-இன்ஜெக்டட், சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 6,100 ஆர்பிஎம்மில் 20.4 பிஎஸ் பவரையும், 4,000 ஆர்பிஎம்மில் 27 என்எம் டார்க் திறனையும் மட்டுமே உருவாக்க கூடியது.

எனவே யெஸ்டி ரோட்ஸ்டர் பைக்கின் இன்ஜின் சற்று சிறியது என்றாலும் கூட அதிக சக்தி வாய்ந்தது. இதற்கிடையே யெஸ்டி ரோட்ஸ்டர் பைக்கின் இன்ஜினுடன், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. யெஸ்டி ரோட்ஸ்டர் பைக்கின் முக்கிய அம்சங்கள் என எல்இடி ஹெட்லைட்கள், எல்இடி டெயில்லேம்ப்கள், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மற்றும் USB-A மற்றும் C டைப் சார்ஜிங் பாயிண்ட்கள் ஆகியவற்றை குறிப்பிடலாம்.

அதே நேரத்தில் யெஸ்டி ரோட்ஸ்டர் பைக்கின் முன் பகுதியில் டெலஸ்கோபிக் சஸ்பென்ஸனும், பின் பகுதியில் ட்வின் ஷாக் அப்சார்பர்களும் வழங்கப்பட்டுள்ளன. பிரேக்குகளை பொறுத்தவரையில் யெஸ்டி ரோட்ஸ்டர் பைக்கின் முன் பகுதியில் பெரிய 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் சிறிய 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் யெஸ்டி ரோட்ஸ்டர் பைக், 2.01 லட்ச ரூபாய் முதல் 2.09 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். அடிக்கடி தொலை தூர பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என விரும்புபவர்களுக்கு யெஸ்டி ரோட்ஸ்டர் பைக் மிகவும் ஏற்றது. இந்த பைக்கின் ரைடிங் பொஷிஷனும் தொலை தூர பயணங்களுக்கு ப்ளஸ் பாயிண்ட்டாக கருதப்படுகிறது.

இந்த சூழலில் யெஸ்டி ரோட்ஸ்டர் பைக்கில் புதிதாக 2 கலர் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டிருப்பது, இந்தியா முழுவதும் உள்ள யெஸ்டி ஷோரூம்களுக்கு இன்னும் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என கருதப்படுகிறது. இதன் மூலம் யெஸ்டி ரோட்ஸ்டர் பைக்கின் விற்பனை அதிகரிக்கும் என கருதப்படுவதால், அது யெஸ்டி நிறுவனத்திற்கு பலன் அளிக்க கூடியதாக இருக்கும்.

இதற்கிடையே பண்டிகை காலத்தை முன்னிட்டு யெஸ்டி மட்டுமல்லாது இன்னும் பல்வேறு கார் மற்றும் டூவீலர் தயாரிப்பு நிறுவனங்களும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. விற்பனையை அதிகரிப்பதற்காக புதிய வாகனங்களை அறிமுகம் செய்வது, ஏற்கனவே விற்பனையில் உள்ள வாகனங்களை அப்டேட் செய்வது போன்ற நடவடிக்கைகளை வாகன நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications








