போலி பதிவெண் பயன்படுத்தியதாக நடிகர்கள் மீது புகார்... புகராளித்த இளைஞர் மீதே நடவடிக்கை எடுத்த காவல்துறை!

பிரபல நடிகை மற்றும் நடிகர் மீது போலி பதிவெண் பயன்படுத்தியதாக இளைஞர் ஒருவர் புகார் எழுப்பியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

போலி பதிவெண் பயன்படுத்தியதாக நடிகர்கள் மீது புகார் அளித்த இளைஞர்... புகராளித்தவர் மீதே நடவடிக்கை எடுத்த போலீஸ்!

கத்ரீனா கைஃப், விக்கி கவுசல் திருமணம் அண்மையில் நடைபெற்றது. திருமண வாழ்க்கையைத் தொடர்ந்து தற்போது புதிய படப் பிடிப்பில் பிசியாகி இருக்கின்றார் நடிகர் விக்கி கவுசல். இப்புதிய படத்தில் இவருக்கு கதாநாயகியாக நடித்து வருகின்றார் சாரா அலிகான். நடிகர் தனுஷு உடன் அட்ராங்கி ரே திரைப்படத்தில் ஜோடியாக நடித்தவர் இவர்.

போலி பதிவெண் பயன்படுத்தியதாக நடிகர்கள் மீது புகார் அளித்த இளைஞர்... புகராளித்தவர் மீதே நடவடிக்கை எடுத்த போலீஸ்!

தமிழில் இந்த படம் கலாட்டா கல்யாணம் எனும் பெயரில் வெளியாகி இருக்கின்றது. இதன் வாயிலாக தமிழ் திரையுலகில் கால் தடம் பதித்திருக்கின்றார் சாரா அலிகான். இந்த நிலையில் சாரா அலிகான் மற்றும் விக்கி கவுசல் அவர்களின் புதிய படத்தில் போலி பதிவெண்ணைப் பயன்படுத்தி இருப்பதாக சர்ச்சையான புகார் ஒன்று எழும்பியிருக்கின்றது.

போலி பதிவெண் பயன்படுத்தியதாக நடிகர்கள் மீது புகார் அளித்த இளைஞர்... புகராளித்தவர் மீதே நடவடிக்கை எடுத்த போலீஸ்!

புதிய படப்பிடிப்பில் போலி பதிவெண் கொண்ட இருசக்கர வாகனத்தை பயன்படுத்தி இருப்பதாகக் கூறி இளைஞர் ஒருவர் விக்கி கவுசல், சாரா அலிகான் மற்றும் படக் குழுவினர் மீது புகார் தெரிவித்திருக்கின்றார். உண்மையில் திரைப்பட படப்பிடிப்பின்போது என்ன நடந்தது? போலி பதிவெண் கொண்ட இருசக்கர வாகனம் பயன்படுத்தப்பட்டதா? இதுகுறித்த நிஜ தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

போலி பதிவெண் பயன்படுத்தியதாக நடிகர்கள் மீது புகார் அளித்த இளைஞர்... புகராளித்தவர் மீதே நடவடிக்கை எடுத்த போலீஸ்!

புதிய படத்திற்கான பட பிடிப்பு பணிகள் மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த திரைப்படத்தின்-போது பொதுமக்கள் சிலரால் படமாக்கப்பட்ட வீடியோக் காட்சிகள் சில சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு வெளிவந்த ஓர் காட்சியே தற்போதைய போலி பதிவெண் சர்ச்சையை எழுப்ப காரணமாக அமைந்திருக்கின்றது.

போலி பதிவெண் பயன்படுத்தியதாக நடிகர்கள் மீது புகார் அளித்த இளைஞர்... புகராளித்தவர் மீதே நடவடிக்கை எடுத்த போலீஸ்!

படத்திற்காக விக்கி கவுசல் மற்றும் சாரா அலிகான் இருசக்கர வாகனத்தில் பயணிப்போது காட்சிப் பதிவு செய்யப்பட்டது. இதில், இந்த காட்சிக்காக பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்திலேயே போலி பதிவெண் பயன்படுத்தப்பட்டிருப்பதாக சர்ச்சை எழும்பி இருக்கின்றது.

போலி பதிவெண் பயன்படுத்தியதாக நடிகர்கள் மீது புகார் அளித்த இளைஞர்... புகராளித்தவர் மீதே நடவடிக்கை எடுத்த போலீஸ்!

இதுகுறித்து வழக்கு ஒன்றை பதிவு செய்த இளைஞர், தன்னுடைய இருசக்கர வாகனத்தின் பதிவெண்ணை போலியாக பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும், அவர்கள் என்னுடைய வாகனத்தின் நம்பர் பிளேட்டை பயன்படுத்த முடியாது. இதற்கான அனுமதி என்னிடத்தில் பெறவில்லை என்றும்" புகார் தெரிவித்தார்.

போலி பதிவெண் பயன்படுத்தியதாக நடிகர்கள் மீது புகார் அளித்த இளைஞர்... புகராளித்தவர் மீதே நடவடிக்கை எடுத்த போலீஸ்!

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த படக் குழுவினர், தாங்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம், தயாரிப்பு நிறுவனத்திற்கு சொந்தமானது. அதில், போலி பதிவெண் பயன்படுத்தப்படவில்லை என கூறினர். இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. ஆகையால், இதுகுறித்து தீவிர விசாரணையில் மத்திய பிரதேச காவல்துறையி களமிறங்கியது.

போலி பதிவெண் பயன்படுத்தியதாக நடிகர்கள் மீது புகார் அளித்த இளைஞர்... புகராளித்தவர் மீதே நடவடிக்கை எடுத்த போலீஸ்!

அப்போதே ஓர் உண்மை என்ன என்பது தெரிய வந்தது. படப்பிடிப்பிற்காக பயன்படுத்தப்பட்டது போலி பதிவெண் அல்ல. அது அந்த வாகனத்திற்கான நம்பர்தான் என காவல்துறையினர் தெரிவித்தனர். நம்பர் பிளேட்டைப் பொருத்த அதில் அடிக்கப்பட்டிருந்த ஸ்குரூவே 1 எனும் எண்ணை நான்கு என்பதைப் போல் சித்தரித்திருக்கின்றது. இதனாலேயே குழப்பம் ஏற்பட்டிருக்கின்றது என காவல்துறை தெரிவித்தது.

போலி பதிவெண் பயன்படுத்தியதாக நடிகர்கள் மீது புகார் அளித்த இளைஞர்... புகராளித்தவர் மீதே நடவடிக்கை எடுத்த போலீஸ்!

இளைஞர் தனது வாகனத்தின் பதிவெண்ணான 4728 எனும் எண்ணையே படப் பிடிப்பில் பயன்ப்டுத்தியதாக புகார் அளித்தார். ஆனால், காவல்துறையினர் விசாரணையினால் அது 1728 என்பது தெரிய வந்திருக்கின்றது. நம்பர் பிளேட்டை பொருத்தப்பட்ட பயன்படுத்தப்பட்ட ஸ்குரூவினாலேயே இந்த சர்ச்சையை எழும்பியிருக்கின்றது.

போலி பதிவெண் பயன்படுத்தியதாக நடிகர்கள் மீது புகார் அளித்த இளைஞர்... புகராளித்தவர் மீதே நடவடிக்கை எடுத்த போலீஸ்!

தற்போது சர்ச்சைக்கு முற்று புள்ளி வைக்கப்பட்டிருக்கின்றது. போலி பதிவெண் பயன்படுத்துவது இந்தியாவில் மிக பெரிய குற்றமாகும். திருட்டு, கொள்ளை, கொலை போன்ற சம்பவங்களுக்கு இது வழி வகுக்கும் என்பதால் இந்த விவகாரத்தில் போக்குவரத்துத் துறை அதிக கவனம் செலுத்துகின்றது.

போலி பதிவெண் பயன்படுத்தியதாக நடிகர்கள் மீது புகார் அளித்த இளைஞர்... புகராளித்தவர் மீதே நடவடிக்கை எடுத்த போலீஸ்!

Source: ANI

ஒவ்வொரு வாகனத்திற்கும் தனித்துவமான பதிவெண்கள் அதன் சேஸிஸ் எண் மற்றும் எஞ்ஜின் எண்ணைக் கொண்டு வழங்கப்படுகின்றது. ஆகையால் ஒரே எண் இரு வாகனங்களில் இடம் பெறாது. இதை மீறி பயன்படுத்தும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இத்துடன், அந்த குறிப்பிட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

போலி பதிவெண் பயன்படுத்தியதாக நடிகர்கள் மீது புகார் அளித்த இளைஞர்... புகராளித்தவர் மீதே நடவடிக்கை எடுத்த போலீஸ்!

இந்த மாதிரியான நடவடிக்கையில் இருந்தே தற்போது படக் குழுவினர் தப்பி இருக்கின்றனர். அதேநேரத்தில், தெளிவாக பதிவெண்கள் தெரிய வேண்டும் என்பது விதியாகும். இதிலும் சிலர் முறைகேடுகளை செய்து வருகின்றனர். தங்களுக்கு பிடித்தமான ஸ்டைலில் நம்பர் பிளேட்டில் எண்களை எழுதிக் கொள்கின்றனர். இதுவும் இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி குற்றமாகும். இந்த விவகாரத்தில் அபராதம் போன்ற கடும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

போலி பதிவெண் பயன்படுத்தியதாக நடிகர்கள் மீது புகார் அளித்த இளைஞர்... புகராளித்தவர் மீதே நடவடிக்கை எடுத்த போலீஸ்!

புகார் அளித்த இளைஞர் மீது நடவடிக்கை

புகார் அளித்த இளைஞர் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை பயன்படுத்தி வருகின்றார். இந்த ஸ்கூட்டரில் பேன்சி எண்களை அவர் பயன்படுத்தி இருக்கின்றார். இது மோட்டார் வாகன சட்டபடி குற்றமாகும். அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்படும் என்பதால் பேன்சி எண்களை நம்பர் பிளேட்டில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறிய குற்றத்திற்காகவே புகார் அளித்த இளைஞர் மீது மத்திய பிரதேச காவல்துறையினர் நடவடிக்ககை எடுத்திருக்கின்றனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Youngster filed complaint against vicky kaushal sara ali khan for using fake number plate
Story first published: Monday, January 3, 2022, 14:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X