செல்ஃப் பேலன்ஸிங் பைக்கை வீட்டிலேயே உருவாக்கிய இளைஞர்கள்!.. கேடிஎம்கூட இப்படி ஒரு பைக்கை உருவாக்கல!
கேடிஎம் பைக் ஸ்டைலில் செல்ஃப் பேலன்ஸிங் பைக்கை இளைஞர்கள் சிலர் உருவாக்கியிருக்கின்றனர். இந்த நிகழ்வுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இளைஞர்கள் சிலர் குழுவாக சேர்ந்து இளம் தலைமுறையினர்களுக்கு பிடித்தமான கேடிஎம் பைக்கை தழுவிய செல்ஃப் பேலன்ஸிங் வாகனம் ஒன்றை உருவாக்கியிருக்கின்றார். அதாவது, தன்னைத்தானே சமநிலைப்படுத்திக் கொண்டு ஒற்றை வீலில் இயங்கக் கூடிய ஓர் வாகனத்தை கேடிஎம் பைக் ஸ்டைலில் உருவாக்கியிருக்கின்றார்.

பைக்கை மாடிஃபை செய்திருக்கும் இந்த இளைஞர்களே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒற்றை வீலில் இயங்கக் கூடிய ஓர் ஸ்கூட்டரை உருவாக்கினர். இதனைத் தொடர்ந்தே அவர்கள் செல்ஃப் பேலனஸ் பைக்கையும் உருவாக்கியுள்ளனர். இளைஞர்களின் இந்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது.

ஏனெனில், இந்த செல்ஃப் பேலன்ஸிங் வாகனத்தின் ஒவ்வொரு பாகத்தையும் இளைஞர்களே அவர்களின் கைப்பட உருவாக்கியிருக்கின்றனர். ஃப்யூவல் டேங்க் (எரிபொருள் நிரப்பும் தொட்டி), ஹேண்டில் பார், வீல் மற்றும் லைட்டுகள் ஆகியவற்றைத் தவிர மற்ற அனைத்தையும் அவர்களே பிரத்யேகமாக வடிவமைத்திருக்கின்றனர்.

அதாவது, பைக்கிற்கான ஃப்ரேம், இருக்கைகள், பேட்டரி பேக் ஆகியவற்றை இளைஞர்களே அவர்களுக்கு தேவையான வகையில் கஸ்டமைசேஷன் செய்திருக்கின்றனர். இவற்றின் வாயிலாகவே செல்ஃப் பேலன்ஸ் திறன் கொண்ட ஒற்றை வீல் பைக் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி, தன்னைத்தானே சமநிலைப்படுத்திக் கொள்வதற்காக பைக்கில் சில சிறப்பு கருவிகளும் சேர்க்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, கேடிஎம் பைக்கை பிரதிபலிக்கும் வகையில் ஃப்ரேம் மற்றும் எரிபொருள் தொட்டி உள்ளிட்டவற்றிற்கு ஆரஞ்சு, கருப்பு வெள்ளை நிறங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிறங்களே இந்த ஒற்றை வீல் பைக்கை கேடிஎம் பைக்கை போல் காட்சியளிக்க செய்திருக்கின்றது. இதுமட்டுமின்றி, எரிபொருள் தொட்டியின்மீது கேடிஎம் என்கிற பெயர் ஸ்டிக்கரும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது ஓர் மின்சாரத்தால் இயங்கும் ஒற்றை பைக்காகும். இப்படி இருக்க இந்த வாகனத்தில் எரிபொருள் தொட்டிக்கான வேலை என்ன என்கிற கேள்வி உங்களுக்கு எழும்பலாம். வெறும் பைக் தோற்றத்தை வழங்க வேண்டும் என்பதற்காக மட்டுமே இது பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேவேலையில், பேட்டரிகள் மட்டும் மின் மோட்டாரை கட்டுப்படுத்தும் முக்கியமான போர்டுகள் ஆகியவை இருக்கை மற்றும் தொட்டி ஆகியவற்றிற்கு அடிப்பகுதியிலேயே நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த ஒற்றை வீல் இயக்கம் கொண்ட பைக் பார்ப்பதற்கு வேண்டுமானால் கேடிஎம் ட்யூக் பைக்கைப் போன்று காட்சியளிக்கலாம். ஆனால், இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் எரிபொருள் நிரப்பும் தொட்டி யமஹா எஃப்இசட் பைக்குடையது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோல், ஹெட்லைட் மற்றும் டிஜிட்டல் மீட்டர்கள் உள்ளிட்டவற்றையும் பிற வாகனங்களுடையதாகக் காட்சியளிக்கின்றன.
இந்த வாகனத்தில் ஒரு நபரால் மட்டுமே பயணிக்க முடியும். இதற்கேற்ப இருக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இருக்கையானது கஃபே ரேஸர் பைக்கில் இடம் பெறும் இருக்கையைப் போல் காட்சியளிக்கின்றது. மேலும், இந்த வாகனம் முன் மற்றும் பின் என இரு திசைகளிலும் இயங்கும் திறனைக் கொண்டுள்ளது.

இத்தகைய சிறப்பான செல்ஃப் பேலன்ஸிங் ஒற்றை வீல் பைக்கை இளைஞர்கள் உருவாக்கியிருக்கின்றனர். இந்த இருசக்கர வாகனத்தின் மிக முக்கியமான அம்சமாக சுய சமநிலை அம்சம் இருக்கின்றது. இந்த அம்சம் தானாகவே நிற்தல் மற்றும் தன்னைத் தானே சமநிலைப்படுத்துவது உள்ளிட்டவற்றை செய்யும். இதற்கான சென்சார்கள் கம்பிகளுடன் நேரடியாக பொருத்தப்பட்டுள்ளது.

இதேபோல் வாகனத்தை இயக்க வைப்பதற்கான மோட்டார் நேரடியாக வீலில் இணைக்கப்பட்டுள்ளது. இதுவே, இருசக்கர வாகனத்தை முன் மற்றும் பின் என இரு திசைகளிலும் இயங்கச் செய்கின்றது. ஆனால், இது என்ன வேகத்தில் செல்லும் மற்றும் வாகனத்தில் பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரிகள் ஓர் முழுமையான சார்ஜில் எத்தனை கிமீ பயணிக்கும் போன்ற முக்கிய தகவல்கள் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இந்த வாகனம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








