டிடிஎஃப் வாசனை மிஞ்சிய யூடியூபர்! 299 கி.மீ வேகத்தில் சீறிப் பாய்ந்த வீடியோ வைரல்!
யூடியூபர் ஒருவர் தனது சூப்பர் பைக்கில் 300 கி.மீ வேகத்தில் பயணித்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமீப காலமாக யூடியூபர்கள் அதிக வேகத்தில் பயணிக்கும் வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். இந்த வீடியோவின் விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் சமீப காலமாகச் சாலை கட்டமைப்புகள் மிக சிறப்பாக இருந்து வருகிறது. சாலைகளில் பலர் தங்கள் கார் மற்றும் பைக்குகளில் குறிப்பிட்ட சாலைகளில் அதிவேகமாகப் பயணித்து வருகின்றனர். குறிப்பாக சூப்பர் பைக், சூப்பர் கார் வைத்திருப்பார்கள் தங்கள் பைக் அல்லது காரில் இப்படி வேகமாக பயணிப்பதற்காகவே இப்படியான சாலைகளில் தங்கள் பைக் மற்றும் காரை எடுத்துச் சென்று வேகமாகப் பயணிக்கின்றனர். இந்த டிரெண்ட் இளைஞர்கள் மத்தியில் தற்போது அதிகமாகப் பரவி வருகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த டிடிஎஃப் வாசன் என்ற இளைஞர் தனது பைக்கில் சுமார் 250 கி.மீ வேகத்தில் பயணித்த வீடியோ சில மாதங்கள் முன்பு வைரலாகியது. அவர் தமிழக முழுவதும் பெரும் விமர்சனத்திற்குள்ளாகப்பட்டார்.அவர் மீது வழக்குகள் எல்லாம் பாய்ந்தது. இந்நிலையில் தற்போது யூடியூபர் ஒருவர் தனது கவாஸகி நிஞ்சா இசட்எக்ஸ்-10 ஆர் பைக்கில் 300 கி.மீ வேகத்தில் பயணித்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
யூடியூபில் பீர் பைக்கர் ஷாமி என்ற பெயரில் சேனலை நடத்தி வரும் இளைஞர், தனது நண்பருடன் சேர்ந்து கொல்கத்தாவிலிருந்து லடாக்கிற்கு ட்ரிப் சென்றுள்ளார். இந்த ட்ரிப்பின் போது தனக்கு ஏற்படும் பயண அனுபவங்களை வீடியோவாக எடுத்து அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். இவர்கள் இருவரும் முறையே கவாஸகி நிஞ்சா இசட்எக்ஸ்-10ஆர் மற்றும் சுஸூகி ஹயாபுஸா ஆகிய பைக்கில் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இந்த பயணம் குறித்த வீடியோ அவ்வப்போது இவர்களது யூடியூப் சேனலில் வெளியாகி வருகிறது.
இந்த பயண திட்டத்தின்படி இவர்கள் வாரணாசியிலிருந்து நொய்டாவிற்குப் பயணித்துக்கொண்டிருந்தனர். இந்த பயணத்திற்காக இவர்கள் லக்னோ- ஆக்ரா எக்ஸ்பிரஸ் சாலையில் பயணித்தனர். இந்த எக்ஸ்பிரஸ் சாலை சுமார் 300 கி.மீ நீளம் கொண்ட 6 வழி சாலையாகும். இந்த சாலையைப் பயன்படுத்த பைக்குகளும் டோல்கேட் கட்டணம் செலுத்த வேண்டும். ரூ295 டூவீலர்களுக்கு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.இந்த கட்டணத்தைச் செலுத்தி இந்த சாலையில் பீர் பைக்கர் ஷாமியும் அவரது நண்பரும் பயணித்துள்ளனர்.
இந்த சாலையில் அவர்கள் பயணிக்கும் போது சுமார் 300 கி.மீ வேகத்தில் இவர்கள் பயணித்துள்ளனர். இதை இவர்கள் பொருத்தியிருந்த POV கேமராவில் பதிவாகியிருந்தது. இவரது நண்பர்கள் ஓட்டி வந்த சுஸூகி ஹயாபுஸா பைக்கில் அதிகபட்சமாக 299 கி.மீ வேகத்திலும், இவர் பயணித்த கவாஸகி நிஞ்சா இசட்எக்ஸ்-10 ஆர் பைக்கில் அதிகபட்சமாக 299 கி.மீ வேகத்திலும் பயணித்துள்ளனர். இந்த வீடியோவை அவர்கள் தங்களது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இவர்கள் பயணித்த கவாஸகி நிஞ்சா இசட்எக்ஸ்-10 ஆர் பைக் முற்றிலும் டிராக் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட பைக், சுஸூகி ஹயாபுஸா பைக் ரிலாக்ஸடு இன்ஜினை கொண்ட பைக்காகும். இதில் இசட்எக்ஸ்-10 ஆர் பைக் ஹயாபுஸா பைக்கை விட அதிக சத்தத்தை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த பைக் அதிகபட்சமாக 299 கி.மீ வேகத்தில் சீறி பாயும்.
சுஸூகி ஹயாபுஸா பைக்கில் இன்லைன் 4 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 1340 சிசி லிக்யூடு கூல்டு இன்ஜினை கொண்டது. இது அதிகபட்சமாக 197 பிஎச்பி பவரை 9500 ஆர்பிஎம்மிலும், 155 என்எம் டார்க் திறனை 7200 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
அடுத்தாக கவாஸகி நிஞ்சா இசட்எக்ஸ்-10 ஆர் பைக்கை பொருத்தவரை 998சிசி இன்லைன் இன்ஜினை கொண்டது. இது அதிகபட்சமாக 13 ஆயிரம் ஆர்பிஎம்மில் 197.3 பிஎச்பி பவரையும், 11500 ஆர்பிஎம்மில் 113.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டு. இந்த இரண்டு பைக்குகளிலும் பாதுகாப்பு காரணமாக அதன் அதிகபட்ச வேகத்தை 299 கி.மீ மேல் செல்லாமல் எலெக்டரானிக்கல் முறையில் வேகம் லிமிட் செய்யப்பட்டுள்ளது.
என்னதான் பைக்குகளில் இவ்வளவு வேகம் செல்லும் திறன் இருந்தாலும் இந்தியச் சாலைகளில் அந்த சாலைக்கான அதிகபட்ச வேகம் என்று ஒன்று இருக்கிறது. இந்தியாவில் 130 கி.மீ வேகத்திற்கு மேல் செல்ல அனுமதிக்கப்பட்ட சாலைகளே கிடையாது. ஆனால் அதையும் மீறி பலர் அதிகமான வேகத்தில் பயணித்து வருகின்றனர். இது முற்றிலும் சாலை விதிமுறைகளை மீறிய செயலாகும். பலர் தங்களுக்கு ஒரு த்ரில்லிங் அனுபவம் மற்றும் ஆசைக்காகப் பயணிக்கின்றனர். இது எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விபரீதத்தில் சென்று முடியலாம்.
இந்தியாவில் டிராக்குகளில் ஓட்ட மட்டுமே ஸ்பீடு லிமிட் கிடையாது. சாலைகளில் பயணிக்கும் போது என்னதான் அதிவேகமாக வாகனம் ஓட்டுவதில் பயிற்சி பெற்ற ஓட்டுநராக இருந்தாலும் சாலையில் செல்லும் மற்றவர்களின் பாதுகாப்பைக் கருதி அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிகமான வேகத்தில் பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலே இணைக்கப்பட்டவீடியோவில் இவர் பயணித்த சாலையில் இவரைத் தவிர வேறு பயணிகள் சாலையில் இல்லாததால் பெரிய பிரச்சனை ஏதுவும் ஏற்படவில்லை. ஒருவேலை யாராவது பயணித்திருந்தால் விபத்து நடக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த வீடியோ குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








