சைக்கிள், போட், களைப்பாற்றும் ரூம்... எப்படி வேணாலும் பயன்படுத்திக்கலாம்... இப்படி ஒரு வண்டி-தாங்க தேவை!

3 இன் 1 வசதிக் கொண்ட ஓர் வாகனம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த வாகனம் குறித்த கூடுதல் முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சைக்கிள், போட், கலைப்பாற்றும் ரூம்... எப்படி வேணாலும் பயன்படுத்திக்கலாம்... இப்படி ஒரு வண்டி தாங்க தேவை!

வாகன உற்பத்தியாளர்கள் 'மோட்டார் ஹோம்' எனப்படும் வீடு மாதிரியான வாகனங்களை உருவாக்கியது பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஏன், சில நிறுவனங்கள் மிதிவண்டியின் அம்சங்கள் கொண்ட மினி கார் மற்றும் பைக் ரக மினி கார்களைகூட உருவாக்கியது பற்றிய தகவலைக்கூட நாம் பார்த்திருப்போம்.

சைக்கிள், போட், கலைப்பாற்றும் ரூம்... எப்படி வேணாலும் பயன்படுத்திக்கலாம்... இப்படி ஒரு வண்டி தாங்க தேவை!

இந்த மாதிரியான சூழ்நிலையில் இதுவரை நாம் யாரும் கண்டிராத ஓர் வாகனத்தை வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று உருவாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முற்றிலும் மாறுபட்ட அமைப்பு மற்றும் வசதிக் கொண்ட அந்த வாகனத்திற்கு இசட்-ட்ரிடன் (Z-Triton) எனும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சைக்கிள், போட், கலைப்பாற்றும் ரூம்... எப்படி வேணாலும் பயன்படுத்திக்கலாம்... இப்படி ஒரு வண்டி தாங்க தேவை!

இந்த வாகனம் சைக்கிள் - படகு என இரு விதமான உருவ தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. அதேவேலையில், இது மூன்று விதமான பயன்பாட்டை வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இசட்-ட்ரிடனின் தோற்றமும் இதனை உறுதிப்படுத்தும் வகையில் இருக்கின்றது.

சைக்கிள், போட், கலைப்பாற்றும் ரூம்... எப்படி வேணாலும் பயன்படுத்திக்கலாம்... இப்படி ஒரு வண்டி தாங்க தேவை!

நிலத்தில் இரு விதங்களில் பயன்பாட்டையும், நீரில் ஒற்றை விதமான பயன்பாட்டையும் இசட்-ட்ரிடன் வழங்கும். இத்தகைய ஓர் சிறப்பு வசதிமிக்க வாகனமே உலகில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய அம்சத்துடன் ஓர் வாகனம் உலகில் உருவாக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

சைக்கிள், போட், கலைப்பாற்றும் ரூம்... எப்படி வேணாலும் பயன்படுத்திக்கலாம்... இப்படி ஒரு வண்டி தாங்க தேவை!

லாத்வியா (Latvia) நாட்டைச் சேர்ந்த ஓர் ஆரம்ப நிலை வாகன உற்பத்தி நிறுவனமே இந்த வாகனத்தை உருவாக்கியிருக்கின்றது. ஜெல்தினி (Zeltini) என்ற பெயர் கொண்ட நிறுவனமே இசட்-ட்ரிடன் உருவாக்கிய நிறுவனம் ஆகும். இது ஓர் ரீகிரியேஷனல் ரக வாகனமாகும். அதாவது, பொழுதுபோக்கு வாகனம்.

சைக்கிள், போட், கலைப்பாற்றும் ரூம்... எப்படி வேணாலும் பயன்படுத்திக்கலாம்... இப்படி ஒரு வண்டி தாங்க தேவை!

இசட்-ட்ரிடன் ஓர் மின்சார வாகனம் ஆகும். இந்த வாகனத்தில் 250 வாட் எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவே, வாகனத்தை இ-மிதிவண்டியாகவும், இ-போட்டாகவும் பயன்படுத்த உதவுகின்றது. அதேவேலையில், பெடல்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆகையால், மூன்றாவதாக இவ்வாகனத்தை மிதி-வண்டியாகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

சைக்கிள், போட், கலைப்பாற்றும் ரூம்... எப்படி வேணாலும் பயன்படுத்திக்கலாம்... இப்படி ஒரு வண்டி தாங்க தேவை!

இதுமட்டுமின்றி பயன்பாட்டாளர்கள் ஓய்வெடுக்கும் வகையில் சிறிய அறை வசதிக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் இரு பெரியவர்கள் வரை தங்கிக் கொள்ள முடியும். ஆகையால், பைக் ரக மோட்டார்ஹோமாகவும் காட்சியளிக்கின்றது. இதன் முன் மற்றும் பின் வீலை தூக்குவதன் மூலம் இசட்-ட்ரைடன் முழுமையான படகாக மாறிவிடும்.

சைக்கிள், போட், கலைப்பாற்றும் ரூம்... எப்படி வேணாலும் பயன்படுத்திக்கலாம்... இப்படி ஒரு வண்டி தாங்க தேவை!

இதனை நீரில் படாகப் பயன்படுத்தும்போது மின்சார தீர்ந்துவிட்டால் என்ன செய்வது என்ற கேள்வி உங்களுக்கு எழும்பலாம். பயப்பட வேண்டாம், அந்த நேரத்தில் உதவுவதற்காக பெடல் வசதிக் கொடுக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி படகை கரை சேர்த்துவிடலாம். இதுபோன்ற வசதிகளை இந்த சிறிய வாகனத்தில் ஜெல்தினி நிறுவனம் கொடுத்திருக்கின்றது.

சைக்கிள், போட், கலைப்பாற்றும் ரூம்... எப்படி வேணாலும் பயன்படுத்திக்கலாம்... இப்படி ஒரு வண்டி தாங்க தேவை!

மேலும், இந்த வாகனத்தை அதிக பொழுதுபோக்கு வசதிகள் கொண்ட வாகனமாக மாற்றும் வகையில் ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட ஸ்பீக்கர்கள், சோலார் பேனல் மற்றும் பல சிறப்பு வசதிகள் இசட்-ட்ரைடன் வாகனத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

சைக்கிள், போட், கலைப்பாற்றும் ரூம்... எப்படி வேணாலும் பயன்படுத்திக்கலாம்... இப்படி ஒரு வண்டி தாங்க தேவை!

முன்னதாக இதனை ஐரோப்பிய சந்தையிலேயே விற்பனைக்கு வழங்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அங்கு 16,422 அமெரிக்க டாலர்களுக்கு இசட்-ட்ரைடன் விற்பனைக்குக் கிடைக்கும். ஐரோப்பிய அறிமுகத்தைத் தொடர்ந்து இன்னும் சில உலக நாடுகளில் இவ்வாகனத்தை விற்பனைக்கு அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 23, 2022, 16:53 [IST]
English summary
Z triton this bike can convert as a boat and an rv
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+