டிவிஎஸ் ஸெப்லின் க்ரூஸர் பைக் உருவாக வாய்ப்பில்லையா? டிவிஎஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!!

ஸெப்லின் கான்செப்ட்டில் இருந்து க்ரூஸர் பைக்கை உருவாக்கும் திட்டத்தில் தற்போதைக்கு நாங்கள் இல்லை டிவிஎஸ் நிறுவனத்தின் சார்பில் வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

டிவிஎஸ் ஸெப்லின் க்ரூஸர் பைக் உருவாக வாய்ப்பில்லையா? டிவிஎஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!!

டிவிஎஸ் நிறுவனம் கடந்த 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அதன் ஸெப்லின் கான்செப்ட் மாடலை காட்சிப்படுத்தி இருந்தது. க்ரூஸர் ரக எலக்ட்ரிக் பைக்குகளுக்கான கான்செப்ட்டான இது அந்த எக்ஸ்போவில் வாடிக்கையாளர்கள் பலரது கவனத்தை வெகுவாக ஈர்த்திருந்தது.

டிவிஎஸ் ஸெப்லின் க்ரூஸர் பைக் உருவாக வாய்ப்பில்லையா? டிவிஎஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!!

அதுமட்டுமின்றி இத்தகைய எலக்ட்ரிக் க்ரூஸர் பைக் சந்தையில் விற்பனைக்கு வருமோ என அவ்வப்போது நம்மை கேட்க வைத்தது. முதன்முதலாக காட்சிப்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட 4 வருடங்களாகி விட்டாலும், இப்போதும் ஸெப்லினின் படங்கள் நம்மை கவர்கின்றன. இருந்தாலும், இந்த எலக்ட்ரிக் பைக்கினை தயாரிக்கும் ஐடியாவில் தாங்கள் இல்லை என டிவிஎஸ் தெரிவித்துள்ளது.

டிவிஎஸ் ஸெப்லின் க்ரூஸர் பைக் உருவாக வாய்ப்பில்லையா? டிவிஎஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!!

ஸெப்லினின் அறிமுகம் தொடர்பாக இன்ஸ்டாகிராமில் நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்விக்கு டிவிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஹேண்டிலில் இருந்து, 'டிவிஎஸ் ஸெப்லின் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது. இது கான்செப்ட் வாகனமே தவிர, தயாரிப்பு பணிகளுக்கானது கிடையாது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ் ஸெப்லின் க்ரூஸர் பைக் உருவாக வாய்ப்பில்லையா? டிவிஎஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!!

அதாவது, இந்த எலக்ட்ரிக் பைக்கை எப்போதும் தயாரிக்கும் முடிவில் இல்லை என்பதுபோல் இந்த பதிலினை டிவிஎஸ் அளித்துள்ளது. இதனால் கான்செப்ட்டை தாண்டி வேறெந்த அவதாரத்திலும் ஸெப்லின் அடுத்தக்கட்ட மேம்பாடுகளுக்கு செல்ல வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. 'ஸெப்லின் ஆர்' என்கிற பெயருக்கான உரிமையை டிவிஎஸ் பதிவு செய்துக்கொண்டதாக கடந்த 2021ஆம் ஆண்டில்தான் இணையத்தில் செய்திகள் வெளிவந்தன.

டிவிஎஸ் ஸெப்லின் க்ரூஸர் பைக் உருவாக வாய்ப்பில்லையா? டிவிஎஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!!

2018 ஆட்டோ எக்ஸ்போவில் மிகவும் புதுமையாக ஹைப்ரீட் ஆற்றல் வழங்கியை கொண்ட எலக்ட்ரிக் பைக் கான்செப்ட் மாடலாக ஸெப்லின் பார்க்கப்பட்டது. அதாவது இந்த கான்செப்ட்டில் இருந்து உருவாக்கப்படும் பைக் முழு எலக்ட்ரிக்கானதாக இருக்காது. எலக்ட்ரிக் மோட்டார் உடனான என்ஜினை கொண்டதாக இருக்கும். இதுதான் ஸெப்லினை அடுத்தக்கட்ட மேம்பாட்டு பணிகளுக்கு கொண்டு செல்ல டிவிஎஸ் நிறுவனத்திற்கு ஆர்வத்தை குறைத்திருக்கலாம் என எதிர்பார்க்கிறோம்.

டிவிஎஸ் ஸெப்லின் க்ரூஸர் பைக் உருவாக வாய்ப்பில்லையா? டிவிஎஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!!

ஸெப்லின் கான்செப்ட்டில் 220சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஆயில்-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டிருந்தது. இதனுடன் 1200வாட்ஸ் ரீஜெனரேட்டிவ் மோட்டார் 48 வோல்ட் லித்தியம்-இரும்பு பேட்டரி உடன் இணைக்கப்பட்டிருந்தது. டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஏற்கனவே காப்புரிமையை பெற்றிருந்த ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்டார்டர் ஜெனரேட்டரையும் இந்த மோட்டார்சைக்கிள் கொண்டிருந்தது. இது அனைத்து விதமான என்ஜின் தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

டிவிஎஸ் ஸெப்லின் க்ரூஸர் பைக் உருவாக வாய்ப்பில்லையா? டிவிஎஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!!

அதாவது, சிறந்த மைலேஜை வழங்குவதற்கு உதவியாக இருக்கும் இந்த தொழிற்நுட்பம், தேவை என்றால் என்ஜின் கூடுதல் ஆற்றலை வெளிப்படுத்தவும் உதவுகிறது. க்ரூஸர் பைக்குகள் என்றாலே பொதுவாக பழமையான கிளாசிக் தோற்றத்தில்தான் இருக்கும். ஆனால் ஸெப்லின் சற்று வித்தியாசமாக மிகவும் மாடர்ன் தோற்றத்தினை ஆட்டோ எக்ஸ்போவில் கொண்டிருந்தது.

டிவிஎஸ் ஸெப்லின் க்ரூஸர் பைக் உருவாக வாய்ப்பில்லையா? டிவிஎஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!!

இந்த எலக்ட்ரிக் க்ரூஸர் பைக் கான்செப்ட்டில் வழங்கப்பட்டிருந்த முக்கிய சிறப்பம்சங்கள் என்று பார்த்தால், முன்பக்கத்தில் HD கேமிரா, பயோ-சாவி, இணைய வசதி மற்றும் எடை குறைவான சேசிஸ் உள்ளிட்டவற்றை சொல்லலாம். சஸ்பென்ஷன் யூனிட்களாக இந்த கான்செப்ட் மாதிரியில் முன்பக்கத்தில் தங்க நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்ட 41மிமீ யுஎஸ்டி ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோ-ஷாக்கும் வழங்கப்பட்டிருந்தன.

டிவிஎஸ் ஸெப்லின் க்ரூஸர் பைக் உருவாக வாய்ப்பில்லையா? டிவிஎஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!!

இந்தியாவில் க்ரூஸர் பைக்குகளுக்கான சந்தை தற்போதைக்கு மிகவும் சிறியதாகவே உள்ளது. எலக்ட்ரிக் க்ரூஸர் பைக் என்று பார்த்தால், ஒன்றுக்கூட இல்லை. எரிபொருள் என்ஜின் உடனான க்ரூஸர் பைக்குகளில் முக்கியமானவைகளாக பஜாஜ் ஆட்டோவின் அவெஞ்சர் 160 ஸ்ட்ரீட் மற்றும் 220 க்ரூஸ் உள்ளன. முந்தைய காலங்களில் யமஹா நிறுவனம் கூட எண்டிசியர் 125 என்ற க்ரூஸர் பைக்கை விற்பனை செய்து வந்தது.

டிவிஎஸ் ஸெப்லின் க்ரூஸர் பைக் உருவாக வாய்ப்பில்லையா? டிவிஎஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!!

ராயல் என்பீல்டு கிளாசிக், மீட்டியோர் 350 போன்றவையும் க்ரூஸர் ரக பைக் என சிலர் நினைத்திருக்கலாம். ஆனால் இவை இரண்டும் முழு-க்ரூஸர் பைக் கிடையாது. தண்டர்பேர்டு போன்ற பக்கா க்ரூஸர் பைக்குகளை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் தற்போது இத்தகைய பைக்குகளுக்கான காலம் இல்லை என்பதை சரியாக புரிந்துக்கொண்டு மீட்டியோர் போன்றதான க்ரூஸர் ரெட்ரோ கிளாசிக் மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்ய துவங்கியுள்ளது.

டிவிஎஸ் ஸெப்லின் க்ரூஸர் பைக் உருவாக வாய்ப்பில்லையா? டிவிஎஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!!

இத்தகைய ஃபார்முலா இந்திய வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் இந்த 350சிசி ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை அறிமுகத்தில் இருந்து தற்போதுவரையில் நல்லப்படியாகவே உள்ளது. க்ரூஸர் ரக பைக்கை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் இப்போதைக்கு டிவிஎஸ் இல்லை என்றாலும், விரைவில் 150சிசி-இல் ரெட்ரோ-ஸ்டைல் பைக் ஒன்றை அறிமுகப்படுத்த இந்த ஓசூர் நிறுவனம் தயாராகி வருகிறது.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
Zeppelin is a concept vehicle only and not meant for production says TVS.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X