1.5கோடி ரூபா மதிப்புள்ள கார் ரக மோட்டார்சைக்கிளைஓட்டி வந்த இளம்பெண்! வண்டிய போக விடாம சுத்திசுத்தி வந்த மக்கள்

10 லட்ச ரூபா, 20 லட்ச ரூபா மதிப்புள்ள மோட்டார்சைக்கிள்கள் விற்பனையில் இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், 1.5 கோடி ரூபா மதிப்புள்ள மோட்டார்சைக்கிளை பற்றி கேள்விப் பட்டிருக்கின்றீர்களா?, இவ்வளவு விலை உயர்ந்த வாகனமே இந்தியாவில் வலம் வந்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்த உலகத்தில் மிகவும் வித்தியாசமான வாகனங்கள் விற்பனையில் இருக்கின்றன. அனைத்திலும் வித்தியாசத்தை எதிர்பார்ப்பவர்களை கவரும் விதமாக சில வாகன உற்பத்தியாளர்கள் முற்றிலும் மாறுபட்ட அம்சங்கள் மற்றும் தோற்றம் கொண்ட வாகனங்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், அமெரிக்க வாகன உற்பத்தி நிறுவனமான போலரிஸ் (Polaris) விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் முற்றிலும் வித்தியாசமான உருவம் கொண்ட வாகனமே ஸ்லிங்லாட் (Slingshot).

ஸ்லிங்ஷாட்

இது ஓர் ஏடிவி (All-terrain vehicle) ரக வாகனமாகவும். உண்டிகோல் தோற்றத்தில் இந்த வாகனம் உருவாக்கப்பட்டு இருக்கும். அதாவது, முன் பக்கம் அகலமாகவும், பின் பக்கம் குறுகியதாகவும் இருக்கும். மொத்தம் மூன்று வீல்கள் இதில் வழங்கப்பட்டு இருக்கும். இதன் முன் பக்கத்தை பார்ப்பவர்கள் இதனை சூப்பர் கார் என நினைத்துக் கொள்வார்கள்.

அந்தவகையிலேயே இதன் பக்கம் இருக்கும். ஆனால், இது ஓர் மோட்டார்சைக்கிள் ரக வாகனம் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த வாகனத்திலேயே இளம் பெண் ஒருவர் வலம் வந்திருக்கின்றார். ஆனால், இந்த வாகனம் அவருக்கு சொந்தமானது அல்ல. இதன் உரிமையாளர் துபாயில் வசித்துக் கொண்டிருக்கின்றார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர் இந்தியா வந்ததாகக் கூறப்படுகின்றது.

ஸ்லிங்ஷாட்

அப்போதே அவர் அவ்-வாகனத்தையும் இந்தியா எடுத்து வந்திருக்கின்றார். கார்னெட் வாயிலாக இந்த வாகனத்தை அவர் இந்தியா எடுத்து வந்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. போலரிஸ் ஸ்லிங்ஷாட் மோட்டார்சைக்கிளின் மதிப்பு ரூ. 1.5 கோடிகள் என கூறப்படுகின்றது. இந்த விலையில் ஓர் சூப்பர் காரையே வாங்கிவிட முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இத்தகைய வாகனத்திலேயே இளம் பெண் ஒருவர் மஹாராஷ்டிராவின் மும்பை நகர சாலையில் வலம் வந்திருக்கின்றார். அவர் பைக் வித் கர்ல் யுட்யூப் சேனலைச் சேர்ந்தவர் ஆவார். இந்த சேனலுக்காக எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த மோட்டார்சைக்கிளில் 2.0 லிட்டர் பெட்ரோல் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

ஸ்லிங்ஷாட்

வழக்கமான மோட்டார்சைக்கிள்களைப் போலவே இதன் பின் வீலே இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. 18 அங்குல டூயல் டோன் அலாய் வீல்களே ஸ்லிங்ஷாட்டில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இரண்டு பேர் வரை இந்த வாகனத்தில் அமர்ந்து பயணிக்க முடியும். இதன் முகப்பு பகுதி எப்படி கார் போன்று இருக்கின்றது.

கேபினும் கார்களைப் போலவே இருக்கின்றது. ஸ்டியரிங் வீல், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், தொடுதிரை வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றது. இதுதவிர, சொகுசு கார்களில் இருப்பதைப் போலவே சொகுசான இருக்கை சீட் பெல்ட் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த கார் ரக மோட்டார்சைக்கிளில் உள் நுழைவது என்பது ரொம்ப சுலபமானது.

ஸ்லிங்ஷாட்

ஆனால், அதை பயன்படுத்த வேண்டும் எனில் பாஸ்வேர்டை உள்ளிட வேண்டும். பொதுவாக போலரிஸ் நிறுவனம் தயாரிக்கும் பெரும்பாலான வாகனங்கள் சாலையில் பயன்படுத்த முடியாதவையாக இருக்கின்றன. ஆனால், இந்த தயாரிப்பை சாலையில் மிக தாராளமாக பயன்படுத்தலாம். சாலையில் இயக்க சட்டப்படி உகந்த வாகனம் இதுவாகும்.

போலரிஸ் நிறுவனம் இந்த வாகனத்தை முதல் முறையாக 2014 ஆம் ஆண்டிலேயே இந்த உலகில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. நாம் வீடியோவில் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த மாடல் 2022 வெர்ஷன் ஆகும். இதுவரை யாரும் கண்டிராத வாகனம் இது என்பதால் இந்த வாகனத்தை பார்க்க அங்கு மக்கள் கூட்டம் அங்கு குவிந்துக் காணப்பட்டது. பலர் வாகனத்தை மடக்கி செல்ஃபி படம் எடுத்துக் கொண்டனர்.

More from DriveSpark

Article Published On: Monday, March 20, 2023, 11:49 [IST]
English summary
1 5 crore rupees worthable polaris slingshot
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X