பல்சர் பைக்குகளை வாங்குறதுக்கு தான் எல்லாரும் பஜாஜ் ஷோரூமுக்கு போறாங்க!! அப்பாச்சி கூட அடுத்துதான் இருக்கு!

இந்தியாவில் குறைந்த விலையில் பைக்குகளை வாங்கவே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். ஏனெனில், நம் நாட்டில் மக்கள் நிறைய பேரின் பொருளாதார நிலைமை அவ்வாறானதாக உள்ளது. இருப்பினும், சமீப ஆண்டுகளாக 200சிசி பைக்குகளை வாங்குவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, இளம் தலைமுறையினர் இவ்வாறான ஆற்றல்மிக்க பைக்குகளை அதிகம் வாங்குகின்றனர்.

இப்படிப்பட்ட நமது இந்திய சந்தையில் கடந்த 2023 அக்டோபர் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட 150சிசி- 200சிசி பைக்குகளை பற்றித்தான் இந்த செய்தியில் பார்க்க போகின்றோம். 150சிசி- 200சிசி-இல் பெரும்பாலான மக்கள் பிரபலமான பஜாஜ் பல்சர் பைக்குகளையே அதிகம் வாங்குகின்றனர்.

150cc- 200cc motorcycles sales

கடந்த 2023 அக்டோபர் மாதத்திலும் 150சிசி- 200சிசி-இல் மொத்தம் 57,198 பல்சர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. அதுவே, 2022 அக்டோபர் மாதத்தில் 49,389 150சிசி- 200சிசி பல்சர் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதன்படி பார்க்கும்போது, இந்த வகை பஜாஜ் பல்சர் பைக்குகளை 7,809 யூனிட்கள் கடந்த மாதத்தில் பஜாஜ் நிறுவனம் அதிகமாக விற்பனை செய்துள்ளது.

பஜாஜ் பல்சருக்கு அடுத்து, 2வது இடத்தில் டிவிஎஸ் அப்பாச்சி உள்ளது. அப்பாச்சி ஆர்டிஆர்310 மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆர்.ஆர்310 பைக்குகளை தவிர்த்து, மற்ற அனைத்து அப்பாச்சி பைக்குகளும் 150சிசி- 200சிசி-இல் அடங்குகின்றன. இந்த பிரிவில், கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்தம் 39,187 அப்பாச்சி பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

150cc- 200cc motorcycles sales

ஆனால், 2022 அக்டோபர் மாதத்தில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான 150சிசி- 200சிசி அப்பாச்சி பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. டிவிஎஸ் அப்பாச்சிக்கு அடுத்து பெரிய இடைவெளி உடன் யமஹா எஃப்.இசட் 3வது இடத்தில் உள்ளது. ஏனெனில், கடந்த மாதத்தில் மொத்தமாகவே 18 ஆயிரம் யமஹா எஃப்.இசட் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

ஆனால், 2022 அக்டோபர் மாதத்தில் 20,440 எஃப்.இசட் பைக்குகளை 150சிசி- 200சிசி-இல் யமஹா விற்பனை செய்திருந்தது. ஹோண்டா யூனிகார்ன் 4வது இடத்தில் உள்ளது. ஹோண்டாவின் பிரபலமான 160சிசி மோட்டார்சைக்கிளான யூனிகார்ன் கடந்த அக்டோபர் மாதத்தில் 16,404 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. ஆனால், கடந்த ஆண்டு அக்டோபரில் 31,986 யூனிகார்ன் பைக்குகளை ஹோண்டா விற்பனை செய்திருந்தது.

150cc- 200cc motorcycles sales

இந்த வகையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் யூனிகார்ன் பைக்குகளின் விற்பனை ஆனது பாதியாக குறைந்துள்ளது. யமஹாவின் ஆர்15 மற்றும் எம்டி15 பைக்குகள் இந்த வரிசையில் 5வது மற்றும் 6வது இடங்களில் உள்ளன. 155சிசி என்ஜின் உடன் விற்பனை செய்யப்படும் இந்த பைக்குகளில் ஆர்15 கடந்த மாதத்தில் 12,964 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. எம்டி15 பைக்குகள் 8,736 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால், 2022 அக்டோபரில் 10,541 ஆர்15 பைக்குகளும், 8,037 எம்டி15 பைக்குகளும் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. சந்தையில் சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட ஹோண்டா எஸ்பி160 இந்த வரிசையில் 8,014 யூனிட்களின் விற்பனை உடன் 7வது இடத்தில் உள்ளது. இதற்கடுத்து, 8வது, 9வது மற்றும் 10வது இடங்களில் முறையே ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர்/ 200 (4,461), ஹார்னெட் 2.0 (3,650) மற்றும் கேடிஎம் 200 (3,391) உள்ளிட்டவை உள்ளன.

150cc- 200cc motorcycles sales

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 150சிசி- 200சிசி மோட்டார்சைக்கிள்கள் பிரிவானது மிகவும் போட்டி மிகுந்தது ஆகும். இதனால், இந்த பிரிவில் கிட்டத்தட்ட அனைத்து 2-வீலர் பிராண்ட்களில் இருந்தும் வாகனங்கள் உள்ளன. 150சிசி- 200சிசி-இல் மட்டும் 57 ஆயிரம் பல்சர் பைக்குகள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டு இருப்பதில் இருந்து, இளைஞர்கள் மத்தியில் பல்சர் பைக்குகளுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு உள்ளது என்பதை அறிய முடிகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 21, 2023, 23:59 [IST]
English summary
150cc 200cc motorcycles sales 2023 october check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X