அன்று சில ஆயிரங்கள் மட்டுமே... இன்றோ பல கோடிகளில் விலை!! 1908இல் தயாரிக்கப்பட்ட பைக்கிற்கு இப்போ இவ்ளோ கிரேஸா
ஒரு சிலருக்கு பழைய பொருட்களை சேமிப்பதில் மிகுந்த ஆர்வம் இருக்கும். குறிப்பாக, பழைய கார் & பைக்குகளை பயன்படுத்த முடியாவிடினும் சும்மா காட்சிக்காகவாவது பெரும் தொகையை கொடுத்து வாங்கி வீட்டின் ஒரு ஓரத்தில் நிறுத்தி வைப்பர். இத்தகைய செயல்களை பெரும்பாலும் செல்வந்தர்களே செய்வர்.
ஏனெனில் பல வருடங்களுக்கு முன் விற்கப்பட்ட வாகனத்தின் விலை இன்று பல கோடிகளில் நிர்ணயிக்கப்படுகின்றன. அதிலிலும் குறிப்பாக, இத்தகைய வாகனங்கள் அரிதான பொருளாகவே கிடைப்பதால் அதிக பேர் முன்னிலையில் ஏலம் தான் விடப்படும். இதனால் அந்த பொருளுக்கு அதிகப்படியான கிரேஸ் இருந்தால் அதன் மதிப்பு அதிகரித்து கொண்டே போகும்.

இதையெல்லாம் ஏன் இப்போது சொல்கிறேன் என்றால், 1908இல் தயாரிக்கப்பட்ட ஹார்லி-டேவிட்சன் மோட்டார்சைக்கிள் ஒன்று சுமார் 935,000 அமெரிக்க டாலருக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் ரூ.7 கோடியே 73 லட்சம் ஆகும். இதுவரையில் உலகளவில் ஏலத்தில் வாங்கப்பட்டதில் மிகவும் விலையுயர்ந்த மோட்டார்சைக்கிளாக இது பார்க்கப்படுவதாக நமக்கு கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஏலம் ஆனது கடந்த ஜனவரி 28ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் உள்ள மெகம் ஏலம் விடும் இடத்தில் நடைபெற்றுள்ளது. மெகம் ஆனது பழமையான கார் மற்றும் பைக்குகளை ஏலம்விடும் பகுதியாகும். பழமையான விண்டேஹ் மோட்டார்சைக்கிள்களை கண்டறிந்து அவற்றை விற்பனை செய்வதில் நிபுணத்துவம் வாய்ந்த விண்டஜெண்ட் நிறுவனத்தின் சார்பில் இந்த குறிப்பிட்ட 1908 ஹார்லி-டேவிட்சன் பைக் ஏலம் விடப்பட்டுள்ளது.

இந்த விண்டேஜ் ஹார்லி-டேவிட்சன் பைக்கிற்கு ஸ்ட்ராப் டேங்க் என பெயர் வைத்துள்ளனர். ஏனெனில் இந்த பைக்கில் ஆயில் & பெட்ரோல் டேங்குகளை பைக்கின் சேசிஸ் உடன் நிக்கல் தகடுகள் மூலமாக இணைத்துள்ளனர். 1908இல் தயாரிக்கப்பட்ட இந்த ஹார்லி-டேவிட்சன் பைக்கை ஏலம் விட்டிருப்பது குறித்து மெகம் ஏலம் மையத்தின் மோட்டார்சைக்கிள் பிரிவு மேலாளர் க்ரேக் அர்னால்டு கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, "நாங்கள் இந்த பைக்கை நன்றாகவே விளம்பரப்படுத்தினோம். அதுமட்டுமின்றி, ஹார்லி மிகவும் பிரபலமான அமெரிக்க மோட்டார்சைக்கிள் பிராண்ட், இதனால் இது ஏலத்தில் நன்றாக விலை போகும் என உணர்ந்தோம். ஆனால் மிகவும் ஆச்சிரியமளிக்கும் வகையில் மிகவும் விலையுயர்ந்த பைக்காக விற்றுள்ளோம்" என்றார். மேலும், இந்த குறிப்பிட்ட ஹார்லி-டேவிட்சன் பைக்கில் வாங்கப்பட்டதற்கு பிறகு சில பாகங்கள் மாற்றப்பட்டுள்ளன.

இருப்பினும் பைக்கின் பெட்ரோல் டேங்க், சக்கரங்கள், சீட் கவர் மற்றும் என்ஜின் உள்ளிட்டவை இப்போதும் முதன்முதலாக பொருத்தப்பட்டவையாகவே உள்ளன. இந்த 1908 ஹார்லி-டேவிட்சன் பைக்கை முதன்முதலாக வாங்கியவர் குறித்த விபரங்கள் கிடைக்க பெறவில்லை. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, 1941இல் அமெரிக்காவில் விஸ்கான்சின் மாகாணத்தில் ஒரு பண்ணையில் டேவிட் உயிஹ்லெயின் என்பரால் பைக் கண்டறியப்பட்டது.
அப்போதில் இருந்து சுமார் 66 வருடங்களாகவே அவரிடமே இந்த பைக் இருந்துள்ளது. 1908இல் இந்த குறிப்பிட்ட ஹார்லி-டேவிட்சன் பைக் மாடல் மொத்தமாகவே 450 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. ஆனால் இவற்றில் வெறும் 12 யூனிட்கள் மட்டுமே தற்போதைக்கு உலகளவில் இருப்பதாக நம்ப படுகிறது. இதே ஏலத்தில் 1907 தயாரிக்கப்பட்ட ஸ்ட்ராப் டேங்க் பைக் ஒன்றும் ஏலத்தில் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Courtesy: Mecum Auctions


Click it and Unblock the Notifications









