40 வருடம் பழமையான பைக் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டாங்க!! காசை தண்ணி போல் செலவு செய்துள்ள ஓனர்!
ஹீரோ ஹோண்டா சிடி100 (Hero Honda CD100), இந்த மோட்டார்சைக்கிளை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். ஆனால் இப்போது வைத்திருப்பவர்கள் மிகவும் குறைவே. அவ்வாறு, சிடி100 பைக்கை வைத்துள்ள மிகவும் சில உரிமையாளர்களுள் ஒருவர் அதனை தனது விருப்பத்திற்கு ஏற்ப புத்துணர்ச்சியான தோற்றத்திற்கு மாற்றிக் கொண்டுள்ளார்.
ஹீரோ ஹோண்டா, இன்று தனித்தனியாக பிரிந்துப்போன 2-வீலர் நிறுவனங்கள். ஆனால் ஒரு சமயத்தில், இவை இரு வேறு நிறுவனங்கள் என மக்களுக்கு துளியும் சந்தேகம் எழாத அளவிற்கு மிக நெருக்கமாக இருந்தன. ஹீரோ- ஹோண்டா கூட்டணியில் இருந்து சந்தையில் பல்வேறு தரமான தயாரிப்புகள் வெளிவந்தன. இன்று மார்க்கெட்டில் பிரபலமாக இருக்கும் ஸ்பிளெண்டரை அதில் ஒரு உதாரணமாக சொல்லலாம்.

இத்தகைய ஹீரோ- ஹோண்டா கூட்டணியில் இருந்து வெளிவந்த முதல் மோட்டார்சைக்கிள் சிடி100 ஆகும். வழக்கமான வட்ட வடிவிலான ஹெட்லைட்டில் இருந்து மாற்றாக, செவ்வ வடிவிலான ஹெட்லைட் உடன் வடிவமைக்கப்பட்டது ஹீரோ ஹோண்டா சிடி100 பைக்கின் அடையாளமாக பார்க்கப்பட்டது. மேலும், அதுதான் இந்த ஹீரோ ஹோண்டா பைக்கை மக்களிடையே பிரபலப்படுத்தியது என்று சொன்னால் அது மிகையில்லை.
ஆனால், இப்போது சிடி100 பைக்கை வைத்திருப்பவர்கள் மிகவும் குறைவே. ஏனெனில், கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன்னர் இந்த பைக் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை இப்போது வரையில் முறையாக பராமரித்து, பயன்படுத்தி வருவது என்பது சிரமமான காரியம். அவ்வாறு, பராமரிக்க முடியாமல் விற்கப்பட்ட 1985 ஹீரோ ஹோண்டா சிடி100 எஸ்.எஸ் பைக்கை பெங்களூரை சேர்ந்த ஒருவர் அதன் உரிமையாளரிடம் இருந்து வாங்கியுள்ளார்.

ஆனால், அவருக்கு பைக்கை அதே பழைய தோற்றத்தில் பயன்படுத்த விருப்பமில்லை. இதனால், புனேவில் உள்ள ஒரு கஸ்டமைசேஷன் நிறுவனத்திடம் தனது விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொடுக்க பைக்கை அனுப்பியுள்ளார். அதாவது, பைக்கின் ஒவ்வொரு நட் & போல்டையும் கழற்றி, சரிப்பார்த்து தேவைப்பட்டால் புதுமையானதாக பொருத்த வேண்டும் என்பதுதான் அந்த கஸ்டமைசேஷன் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட பணி ஆகும்.
கொடுத்த பணியை புனேவை சேர்ந்த அந்த நிறுவனம் சிறப்பாக செய்து முடிந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இதுகுறித்து அந்த கஸ்டமைசேஷன் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை கீழே செய்தியின் இறுதியில் காணலாம். இந்த வீடியோவில், வாய்ஸ் ஓவர் போன்று கொடுத்துள்ளனர். அதாவது, என்னென்ன பணிகள் தங்களுக்கு கொடுக்கப்பட்டன, எதை எதை நாங்கள் செய்தோம் என்பதை அந்த மெக்கானிக் நிறுவன குழுவினர் தெரிவிப்பது போல் இந்த வீடியோ அமைந்துள்ளது.

அவர்கள் கூறியதுப்படி பார்க்கும்போது, பைக் முழுவதுமாக கழற்றப்பட்டுள்ளது. தற்போதைய உரிமையாளர் பைக்கில் சில பாகங்களை மாற்ற வேண்டாம் என கூறியுள்ளார். அவை சரிப்பார்க்கப்பட்ட பின்னர், மாற்றப்படாமல் அப்படியே பொருத்தப்பட்டன. பைக்கின் என்ஜின் அமைப்பு முழுவதுமாக பழுதுப் பார்க்கப்பட்டு உள்ளது. சங்கிலி ஸ்ப்ராக்கெட் புதியதாக பொருத்தப்பட்டுள்ளது.
1985இல் தயாரிக்கப்பட்ட இந்த ஹீரோ ஹோண்டா சிடி100 பைக்கை புத்துணர்ச்சியானதாக காட்ட, புதிய பெயிண்ட் வழங்கப்பட்டு உள்ளது. பைக்கின் சேசிஸ் கழற்றி மீண்டும் பொருத்தப்பட்டுள்ளது. பளபளக்கும் க்ரோம் பாகங்கள் அனைத்திலும் பளபளக்கும் தன்மை மெருக்கேற்றப்பட்டு உள்ளது. பைக்கில் இருந்து கழற்றப்பட்ட ஒவ்வொரு பாகமும் சரிப்பார்க்கப்பட்ட பின்னரே மீண்டும் பொருத்தப்பட்டதாக வீடியோவில் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு சோதனை செய்த போது, பைக்கின் பெட்ரோல் டேங்கில் நிறைய துளைகள் இருப்பதை கண்டறிந்துள்ளனர். பைக்கை இதற்கு முன் பயன்படுத்தியவர் டேங்கில் ஏற்பட்ட துளைகளை விரைவாகவும், தற்காலிகமாகவும் சரிச் செய்ய எம்-சீலை பயன்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில், பெட்ரோல் டேங்கை புதியதாக மாற்ற மெக்கானிக்குகள் திட்டமிட்டுள்ளனர். இன்றைய காலத்தில் சிடி100 பைக்கிற்கான பெட்ரோல் டேங்கை பெற முடியாது என்பதால், வெல்டிங் மூலம் துளைகளை அடைத்து சரிச் செய்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹீரோ ஹோண்டா சிடி100 போன்ற பழமையான மோட்டார்சைக்கிளை ரீ-ஸ்டோர் செய்வதில் உள்ள பிரச்சனை என்னவென்றால், அவற்றிற்கான பாகங்கள் இன்றைய கால மார்க்கெட்டில் கிடைக்காது என்பதாகும். இதனாலேயே பலர் தங்களது கிளாசிக் பைக்குகளை கிடப்பில் வைத்துள்ளனர். ஆனால், கொஞ்சம் அலைந்து திரிந்தால், இவ்வாறான கஸ்டமைசேஷன் மெக்கானிக் நிறுவனங்களை கண்டறியலாம்.


Click it and Unblock the Notifications









