இணையத்தில் வைரலாகும் இந்தியாவின் முதல் ராயல் என்பீல்டு புல்லட் எலெக்ட்ரிக் பைக்கின் வீடியோ!
உலகின் மிகவும் பழமையான இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ராயல் என்பீல்டு-ம் ஒன்று. 1949 ஆம் ஆண்டில் இருந்தே இந்த நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் நாட்டில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றன. ஆனால், இந்த நிறுவனம் இப்போது வரை பெட்ரோலில் ஓடக் கூடிய டூ-வீலர்களை மட்டுமே தயாரித்துக் கொண்டிருக்கின்றது, அவற்றையே விற்பனைக்கும் வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இதுவரை ஒற்றை மின்சார இருசக்கர வாகனத்தைகூட நிறுவனம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வரப்படவில்லை. இதற்கான முயற்சிகள் இப்போதே துளிர்விட தொடங்கி இருக்கின்றன. மேலும், நிறுவனத்தின் இ-வாகனங்கள் விற்பனைக்கு வர ஓரிரு ஆண்டுகள் ஆகும் என்கிற சூழலே நிலவுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இணையத்தில் இந்தியாவின் முதல் மின்சார ராயல் என்பீல்டு புல்லட் பைக் என்கிற பெயரில் வீடியோ ஒன்று வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

ஃபேமஸ் யுட்யூப் சேனலான பைக் வித் கேர்ல் இதுவே இதுகுறித்த வீடியோவை வெளியிட்டு இருக்கின்றது. ஓர் இளம் பெண்ணால் இயக்கப்படும் இந்த யுட்யூப் சேனல் பைக்குகள் பற்றிய சுவாரஷ்ய வீடியோக்களை வெளியிடுவதில் பெயர்போன சேனலாக இருக்கின்றது. பைக்கை இவர்கள் அதிகம் பேசுவதனாலேயோ என்னமோ இவர்களுக்கு ஃபாலோவர்களும் மிக அதிகம்.
இந்த மாதிரியான ஓர் சேனலே இந்தியாவின் முதல் மின்சார ராயல் என்பீல்டு புல்லட் பைக் என்கிற தலைப்பில் வீடியோவை வெளியிட்டு இருக்கின்றது. இதுவே இணையத்தில் தற்போது பேசு பொருளாக மாறி இருக்கின்றது. அந்த சேனல் காட்சிப்படுத்திய மோட்டார்சைக்கிள் கடந்த காலங்களில் பெட்ரோலில் ஓடிக் கொண்டிருந்த ஓர் வாகனம் ஆகும்.

தற்போது பெட்ரோல் மோட்டார் உள்ளிட்ட முக்கிய கருவிகள் பல அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக பேட்டரி பேக்கும், மின் மோட்டாரும் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. பெங்களூருவைச் சேர்ந்த ஓர் இருசக்கர வாகன கஸ்டமைசேஷன் நிறுவனமே ராயல் என்பீல்டு புல்லட் பைக்கை மின்சாரத்தால் இயங்கும் வாகனமாக மாற்றியிருக்கின்றது.
அந்த நிறுவனத்தின் பெயர் புல்லட்டீர் கஸ்டம்ஸ் (Bulleteer Customs) ஆகும். இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் "இந்த பைக்கை இழக்க நான் விரும்பவில்லை. அதை மின்சாரத்தால் இயங்கும் மாற்றிக் கொடுங்கள்" என கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அது எலெக்ட்ரிக் வாகனமாக கன்வெர்ட் செய்யப்பட்டு இருக்கின்றது.
இது ஓர் 1984 மாடல் ஆகும். தன்னுடைய அடுத்தடுத்து வரும் சந்ததியினரும் இந்த பைக்கை பயன்படுத்த வேண்டும் என்கிற நோக்கிலேயே அதை மின்சார வாகனமாக மாற்றி இருக்கின்றார். இந்த மாற்றத்தினால் பைக்கின் தோற்றம் சற்று முரட்டுத் தனமானதாக மாறி இருக்கின்றது. ஆனால், இந்த தோற்றம் தனக்கு பிடிக்கவில்லை என்று பைக்கின் உரிமையாளர் கூறி இருக்கின்றார்.
குறிப்பாக, எஞ்ஜின் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கும் பெட்டி போன்ற அமைப்பு பைக்கின் அழகை கெடுக்கும் வகையில் அமைந்திருப்பதாக அவர் கருத்து தெரிவித்து உள்ளார். இருப்பினும், லைஃப் டைம் முழுக்க இந்த வாகனம் வாழ்க்கையில் பின்தொடரும் என்பது மட்டும் அவருக்கு ஆறுதலாக அமைந்து இருக்கின்றது.
இந்த வாகனத்தை மின்சார வாகனமாக மாற்ற பல்வேறு முக்கிய பாகங்கள் அகற்றப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், கியர்கள், பிஸ்டன் என பல முக்கிய பாகங்கள் அகற்றப்பட்டு இருக்கின்றன. இதை அடுத்து 5KW மின்சார மோட்டார் மற்றும் 72 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இதை முழுமையாக சார்ஜ் செய்தால் எத்தனை கிமீ டிராவல் செய்ய முடியும். மின் மோட்டாரின் திறன் என்ன என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. இதேபோல், இதை மின்சார காராக மாற்றியதற்கு எவ்வளவு செலவாகியது என்கிற விபரம் வெளியிடப்படவில்லை. இருப்பினும், தற்போது இந்த இருசக்கர வாகனம் நெட்டிசன்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, ஒட்டுமொத்த இந்தியர்களையும் ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்போது வரை ஒரு சில வாகனங்களுக்கு மட்டுமே மின்சார வாகனமாக மாற்றிக் கொள்வதற்கான அனுமதி அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டு இருக்கின்றது. விரைவில் அனைத்து வாகனங்களுக்கும் இந்த அனுமதியானது விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால், சில விண்டேஜ் கார்கள் எப்போதும் அதன் உரிமையாளர்களுடன் இருக்கும் சூழல் உருவாகும். இந்தியாவில் விண்டேஜ் கார் பிரியர்கள் மிக அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது.
உண்மையில் ராயல் என்பீல்டின் மின்சார இருசக்கர வாகனத்திற்காக இந்தியாவிலும், உலக நாடுகளில் சிலவற்றிலும் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துக் காட்சியளிக்கின்றது. இந்தியாவில் அது விற்பனைக்கு வரும்பட்சத்தில் ஒட்டுமொத்த நாட்டையும் அது வளைத்து போடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். இதை உறுதிப்படுத்தும் விதமாகவே இந்த வீடியோ அமைந்திருக்கின்றது. மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட புல்லட் மின்சார பைக்கிற்கே பலரும் மயங்கி இருக்கின்றனர் என்பது வீடியோவிற்கு கிடைத்திருக்கும் வரவேற்பை வைத்து எங்களால் கூற முடிகின்றது.


Click it and Unblock the Notifications









