1993 உருவாக்கப்பட்ட சுஸுகி பைக் இப்போதும் ஓடினு இருக்கா!! சத்தியமா நம்பவே முடியல!

ஒரு சிலருக்கு பழமையான கிளாசிக் வாகனங்கள் என்றாலே தனி பிரியம் இருக்கும். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கூட அத்தகையவர்களுள் ஒருவர்தான். குறிப்பாக, தனித்துவமான சத்தத்தை எழுப்பக்கூடிய 2-ஸ்ட்ரோக் பைக்குகளுக்கு இப்போதும் நல்ல மார்க்கெட் உள்ளது.

2-ஸ்ட்ரோக் பைக் என்றதும் முதலாவதாக நம் நினைவிற்கு வருவது யமஹா ஆர்.எக்ஸ்100 தான். சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் தயாரித்த ஷோகன் (Shogun) பைக்கும் 2-ஸ்ட்ரோக் பைக் தான். ஆனால், ஆர்.எக்ஸ்100 பைக்கை தெரிந்த அளவிற்கு கூட இன்றைய கால இளைஞர்களுக்கு சுஸுகி ஷோகனை தெரியவில்லை.

rare 1993 suzuki shogun motorcycle

ஆனால், விற்பனையில் இருந்த சமயத்தில் யமஹா ஆர்.எக்ஸ்100 அளவிற்கு சுஸுகி ஷோகன் பைக்கையும் நிறைய பேர் விரும்பி வாங்கினர். ஆனால், இன்றைய காலத்தில் ஷோகன் பைக்கை சாலையில் காண்பது அரிதினும் அரிதாகிவிட்டது. ஒரு ஷோகன் பைக்கை எதிர்பாராத விதமாக சாலையில் கண்டாலே, என்ன இது புதுமையான பைக்காக இருக்கிறதே... என நினைக்க தோன்றுகிறது.

இருப்பினும், இப்போதும் நம் நாட்டில் சில பைக் சேகரிப்பாளர்கள் சுஸுகி ஷோகன் பைக்கை வைத்துள்ளனர். அவ்வாறு, 1993இல் இருந்து இப்போது வரையில் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வரும் சுஸுகி ஷோகன் மோட்டார்சைக்கிளை பற்றித்தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். இந்த ஷோகன் பைக்கை விவரிக்கும் வீடியோ ஒன்று 'ஓல்டு பிஸ்டன்ஸ் கேரேஜ்' என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டு உள்ளது.

rare 1993 suzuki shogun motorcycle

இந்த ஷோகன் பைக்கை முதல்முறையாக வாங்கியவர், வீடியோவில் காட்சித்தரும் நபரிடம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு விற்றுள்ளார். இந்த பைக்கை வாங்கிய பின் இவர் சில மாற்றங்களை செய்துள்ளார். நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள், இந்த குறிப்பிட்ட ஷோகன் பைக்கில் 1993இல் சுஸுகி நிறுவனம் அடித்த சிவப்பு நிற பெயிண்ட் தான் இப்போதும் உள்ளது.

டிவிஎஸ் மோட்டார் மற்றும் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனங்கள் இணைந்து அந்த சமயத்தில் ஷோகன் பைக்குகளை உருவாக்கின. விற்பனையில் இந்த சுஸுகி பைக்கிற்கு யமஹா ஆர்.எக்ஸ்100 போட்டியாக விளங்கியது என்றாலும், ஷோகனை யமஹாவின் ஆர்.எக்ஸ்135 பைக்குடன் தான் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். ஏனெனில், அந்த அளவிற்கு பவர்-டூ-எடை விகிதம் ஷோகன் பைக்குகளில் சிறப்பாக வழங்கப்பட்டன.

rare 1993 suzuki shogun motorcycle

சுஸுகி ஷோகன் பைக்குகளில் 108சிசி, 2-ஸ்ட்ரோக், சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 14 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இது யமஹா ஆர்.எக்ஸ்100 பைக்கின் என்ஜின் வெளிப்படுத்தும் இயக்க ஆற்றலை விட சற்று அதிகம் ஆகும்.

பெயிண்ட் மட்டுமின்றி, இந்த ஷோகன் பைக்கில் பேனல்களும் சுஸுகி தொழிற்சாலையில் பொருத்தப்பட்டவையே ஆகும். இவ்வளவு ஏன், பைக்கில் சுஸுகி ஒட்டிய ஸ்டிக்கர்கள் கூட அப்படியே உள்ளன. ஒரிஜினல் சுஸுகி ஷோகன் பைக்குகளில் ஸ்போக் சக்கர ரிம்கள் வழங்கப்பட்டன. ஆனால், இந்த பைக்கில் சுஸுகி ஜிஎஸ் 150 பைக்கின் அலாய் சக்கரங்கள் அதன்பின் பொருத்தப்பட்டு உள்ளன.

rare 1993 suzuki shogun motorcycle

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுஸுகி ஷோகன் பைக்குகளுக்கு என்றே அந்த சமயத்தில் தனி ரசிகர் பட்டாளம் இருந்தது. குறிப்பாக, 2000ஆம் காலக்கட்டங்களில் பல திரைப்படங்களில் ஹீரோக்கள் பயன்படுத்தக்கூடியதாக சுஸுகி ஷோகன் பைக்கை காண முடியும். அத்தகைய சுஸுகி பைக்கை இப்போதும் ஒருவர் வைத்துள்ளார் என்றால், அது பெரிய விஷயமே ஆகும்.

More from DriveSpark

Article Published On: Saturday, December 2, 2023, 20:09 [IST]
English summary
1993 suzuki shogun motorcycle still used now check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X