2023 Bajaj Pulsar 125 பைக்கின் முக்கிய தகவல்கள் லீக் ஆனது... என்ன, அந்த ஸ்டிக்கர தூக்கிட்டாங்களா!!

அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னரே 2023 பல்சர் 125 பைக் பற்றிய முக்கிய தகவல்கள் சில இணையத்தில் கசிந்திருக்கின்றன. இதன் மூலம் புதிய பல்சர் 125 மோட்டார்சைக்கிளில் என்ன மாதிரியான மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன என்பது முக்கிய தகவல்கள் தெரிய வந்திருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

பஜாஜ் நிறுவனம் புதிய மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்பவும், வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கிலும் தனது பஜாஜ் பல்சர் 125 பைக் மாடலில் கணிசமான மாற்றங்களை செய்திருக்கின்றது. இந்த மோட்டார்சைக்கிளை இன்னும் ஒரு சில தினங்களில் அது விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

2023 Bajaj pulsar 125

இந்த நிலையில், அதிகாரப்பூர்வ அறிமுகம் செய்வதற்கு முன்னரே பல்சர் 125 பைக் பற்றிய பல்வேறு முக்கிய தகவல்கள் இணையத்தின் வாயிலாக வெளியாகி உள்ளன. குறிப்பாக என்ன மாதிரியான மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன, என்னென்ன புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன, உள்ளிட்ட முக்கிய தகவல்கள் தெரிய வந்திருக்கின்றது.

மிக முக்கியமான மாற்றமாக, இந்த பைக்கின் எஞ்ஜின் கேஷில் ஒட்டப்படும் டிடிஎஸ்-ஐ எனும் பேட்ஜ் நீக்கப்பட்டு உள்ளது. இதற்கு பதிலாக வெறும் பஜாஜ் நிறுவனத்தின் லோகோவை அடக்கிய பேட்ஜ் மட்டுமே ஒட்டப்பட்டு இருக்கின்றது. இந்த செயலை சிறிய மாற்றமாக எண்ணிக்க கொள்ள வேண்டாம்.

Bajaj pulsar 125 digital analog screen

இந்த ஸ்டிக்கர் மாற்றத்தை வைத்து பார்க்கையில் பஜாஜ் நிறுவனம் ட்வின் ஸ்பார்க் செட்-அப்பை கை கழுவிவிட்டு சிங்கிள் ஸ்பார்க் செட்-அப்பிற்கு நகர்ந்திருப்பதற்கான அர்த்தம் என வாகன உலகத்தைச் சேர்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதையேதான் நாங்களும் யூகிக்கின்றோம். ஆகையால், 2023 பல்சர் 125 பைக்கில் செய்யப்பட்டு இருக்கும் மிகப் பெரிய மாற்றமாக இது கருதப்படுகின்றது.

இதற்கு அடுத்தபடியாக மற்றுமொரு மிக முக்கியமான மாற்றம் ஒன்றையும் இந்த பைக் சந்தித்து இருக்கின்றது. அதாவது, பல்சர் 125 பைக்கில் ஃப்யூவல் இன்ஜெக்சன் சிஸ்டத்தை புதிதாக சேர்த்திருக்கின்றது. இது எஞ்ஜினில் செய்யப்பட்டு இருக்கும் மிக முக்கியமான மாற்றம் ஆகும். இந்த மோட்டார் 11.8 எச்பி பவரையும், 10.8 என்எம் டார்க்கயைும் வெளியேற்றும் திறன் கொண்டது.

Bajaj pulsar 125 engine

Image Source

அதேவேளையில் நல்ல எரிபொருள் சிக்கனத்தையும் இந்த மோட்டார் வழங்கும். இத்தகைய மோட்டாராகவே 2023 பஜாஜ் பல்சர் 125 பைக்கின் எஞ்ஜின் மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது. இத்துடன், பைக்கின் வீல் அமைப்பிலும் பஜாஜ் சில மாற்றங்களைச் செய்திருக்கின்றது. முன்னதாக ஆறு ஸ்போக்குகளைக் கொண்ட அலாய் வீலை பல்சர் 125 பைக்கில் அது பயன்படுத்தி இருந்தது.

ஆனால், 2023 பல்சர் 125 பைக்கில் ஸ்பிளிட் டைப் மூன்று ஸ்போக்குகளைக் கொண்ட அலாய் வீல்களை சேர்த்திருக்கின்றது. நிறுவனத்தின் இந்த செயல் பல்சர் 125-க்கு கூடுதல் கவர்ச்சி சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இதுபோன்று இன்னும் கணிசமான மாற்றங்களுடனேயே 2023 பல்சர் 125 இந்திய சந்தையில் விற்பனைக்கு வர இருக்கின்றது.

இந்த பைக்கில் திரையை பொருத்தவரை முந்தைய மாடல்களில் பயன்படுத்தப்பட்ட அதே டிஜிட்டல் அனலாக் திரையே இடம் பெற இருக்கின்றது. எரிபொருள் அளவு, கியர் பொசிஷன், டிஸ்டன்ஸ்-டூ-எம்ப்டி உள்ளிட்ட முக்கிய தகவல்களை இந்த திரை வழங்கும். பஜாஜ் நிறுவனம் இப்போது வரை இந்த பைக்கின் அறிமுக நாள் பற்றிய தகவலை வெளியிடவில்லை.

இதற்கு முன்னதாகவே பைக்கின் படத்துடன் கூடிய முக்கிய தவல்கள் இணையத்தின் வாயிலக வெளியாகி உள்ளன. இதனால், பஜாஜ் நிறுவனம் பெருத்த அதிர்ச்சியில் உள்ளது. இதன் வருகை ஹீரோ கிளாமர், ஹோண்டா எஸ்பி 125 மற்றும் டிவிஎஸ் ரைடர் 125 ஆகிய பைக் மாடல்களுக்கு கடும் போட்டியாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

இந்தியாவில் பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் பைக் மாடலுக்கு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. அதேவேளையில், புதுமுகங்களின் வருகையால் பல்சருக்கு போட்டி அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே தனது போட்டியாளர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் விதமாக பஜாஜ் நிறுவனம் 2023 பல்சர் 125-ஐ சூப்பராக அப்டேட் செய்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 13, 2023, 8:38 [IST]
English summary
2023 bajaj pulsar 125 details leaked via online
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X