பஜாஜ் பல்சர் என்எஸ்160, என்எஸ்200 ரெண்டையும் ஓட்டி பாத்துட்டீங்களா? நாங்க ஓட்டி பார்த்துட்டோம்.. ரிவியூ தகவல்!
20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய இருசக்கர வாகன சந்தையில் பல்சர் எனும் பெயர் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. இந்த பெயரை மழுங்க செய்வதே தங்களின் ஒரே நோக்கம் என்பதை போல் போட்டி நிறுவனங்கள் பல்சருக்கு எதிராக புதுமுக வாகனங்களைக் களமிறக்கிய வண்ணம் இருக்கின்றன.
இதன் எதிரொலியாக அவ்வப்போது இந்த மலிவு விலை ஸ்போர்ட்ஸ் ரக பைக்கின் விற்பனை கணிசமான அளவு சரிவைச் சந்திப்பதுண்டு. இருப்பினும், எதைக் கண்டும் துவண்டுபோகாமல் பஜாஜ் நிறுவனம் போட்டியாளர்களுக்கு கூடுதல் போட்டியை ஏற்படுத்தும் விதமாக பல்சரை அடுத்த லெவலுக்கு அப்கிரேட் செய்யும்.

இவ்வாறே இரு தசாப்தங்களாக சந்தையில் பல்சர் போராடிய வண்ணம் சந்தையில் நீடித்துக் கொண்டிருக்கின்றது. பல்சர் எனும் பெயர் பலகையில் 11 க்கும் மேற்பட்ட வித்தியாசமான மாடல்கள் தற்போது சாலையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே அண்மையில் பஜாஜ் நிறுவனம் அதன் என்எஸ் 160 மற்றும் என்எஸ் 200 ஆகிய இரு பைக் மாடல்களை அப்டேட் செய்து விற்பனைக்குக் களமிறக்கியது.
சிறப்பம்சம் மற்றும் எஞ்ஜின் என பலவற்றில் புதுப்பித்தல்களைப் பெற்று இவை சந்தைக்கு வந்திருக்கின்றன. இந்த பைக்கையே அண்மையில் பெங்களூருவில் வைத்து ரைடு ரிவியூ செய்து பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவங்களையே இந்த பதிவின் வாயிலாக உங்களுக்கு வழங்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

பஜாஜ் பல்சர் என்எஸ் 160 மற்றும் என்எஸ் 200 இல் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன?
பஜாஜ் பல்சர் என்எஸ் 160 மற்றும் என்எஸ் 200 இரண்டு மாடல்களின் சிறப்பம்சங்களும் அப்கிரேட் செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக, எஞ்ஜின் விஷயத்தில் புதிதாக ஓபிடி 2 விதிகளுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. புதிய விதி ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கின்றது.
ஆகையால், பஜாஜ் தன்னுடைய இந்த இரு பைக்குகளையும் புதிய விதிகளுக்கு இணங்கிய வாகனமாக தயார் செய்திருக்கின்றது. அத்துடன், இ20 ரக எரிபொருளில் ஓடும் வாகனமாகவும் என்எஸ் 160 மற்றும் என்எஸ் 200-ஐ பஜாஜ் உருவாக்கி இருக்கின்றது. வழக்கமான எரிபொருளில் வெளிப்படுத்துவதைக் காட்டிலும் இந்த (இ20) எரிபொருளில் இயங்கும்போது சற்று கூடுதல் பவரை இரு பைக்குகளும் வெளியேற்றும் என்பது கவனிக்கத்தகுந்தது.

பஜாஜ் பல்சர் என்எஸ் 160 ஓர் 160 சிசி மோட்டார்சைக்கிள் ஆகும். இந்த மோட்டார் அதிகபட்சமாக 17 பிஎச்பி பவரையும், 14.6 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 200சிசி மோட்டார்சைக்கிளான பல்சர் என்எஸ் 200, அதிகபட்சமாக 24.13 பிஎச்பி மற்றும் 18.74 என்எம் டார்க்கை வெளியேற்றும். இதைத்ததொடர்ந்து, பைக்கில் ரைடிங் அனுபவத்தை சிறப்பானதாக மாற்றும் விதமாக அப்சைடு டவுன் ஃபோர்க் வழங்கப்பட்டு உள்ளது.
முன் பக்கத்திலேயே இந்த ரக சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கின்றது. வேறு எந்த மலிவு விலை பைக்கிலும் இந்த அம்சத்தைக் காண முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன், பைக்கிற்கு கவர்ச்சி சேர்க்கும் விதமாக சில தனித்துவமான செயல்களையும் பஜாஜ் இந்த பைக்குகளில் கையாண்டு இருக்கின்றது.

குறிப்பாக, நிற பூச்சு விஷயத்தில் கூடுதல் கவனத்தை பஜாஜ் செலுத்தி இருக்கின்றது. இரண்டுக்கும் மேற்பட்ட நிறங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக, என்எஸ் 200 மற்றும் என்எஸ் 160 எனும் பெயர் எழுத்துக்களுக்கு தங்க நிறம் பயன்படுத்தப்பட்டு இருப்பது பலரின் கவனத்தை ஈர்க்கக் கூடிய செயலாக இருக்கின்றது.
இத்துடன் மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காக இரு பைக்குகளிலும் டூயல் சேனல் ஏபிஎஸ் அம்சம் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகின்றது. இதுதவிர, என்250 மற்றும் 250எஃப் ஆகிய மாடல்களில் வழங்கப்பட்டிருப்பதைப் போல கிரைமெகா பிரேக்குகள் புதுப்பித்தலின்கீழ் என்எஸ் 200 மற்றும் என்எஸ் 160 இரண்டிலும் வழங்கப்பட்டு இருக்கின்றது.

முன் பக்கத்தில் 300 மிமீ டிஸ்க்கும், பின் பக்கத்தில் 230 மிமீ டிஸ்க்கும் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த அனைத்தும் உச்சபட்ச வேகத்தைகூட சில நொடிகளில் கட்டுக்குள் கொண்டு வந்துவிடும். மிகவும் எடை குறைவான வீல்களே இந்த இரு பைக்குகளிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
காஸ்மெட்டிக் மாற்றங்களும் இந்த இரு பைக்குகளிலும் கணிசமான அளவு செய்யப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக, கட்டுமஸ்தான தோற்றத்தை ஹை-லைட் செய்து காட்டும் வகையில் இரு பைக்குகளிலும் ஸ்டிக்கரிங் வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. நடுத்தர-டிஜிட்டல் வசதிக் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதில் புதிய அம்சங்கள் பெரிய அளவில் சேர்க்கப்படவில்லை.
ஆனால், காலியாக இருக்கும் தூரம் (distance to empty) தகவலை வழங்கும் அம்சம் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கின்றது. இந்த பைக்கில் உள்ள கணிசமான குறைகளில் ஒன்றாக சென்டர் ஸ்டாண்டு நீக்கப்பட்டு இருக்கின்றது. ஷார்ப்பான வளைவுகளில் மிக சிறப்பாக வளைந்து (trackability)-க் கொடுத்து போவதற்காக யாரும் விரும்பாத செயலை பஜாஜ் செய்திருக்கின்றது.

பஜாஜ் பல்சர் என்எஸ் 160 ரைடிங் அனுபவம் எப்படி இருந்தது?
மிக சிறந்த 160சிசி இருசக்கர வாகனம் என்பதை என்எஸ் 160 தற்போது மீண்டும் உறுதி செய்திருக்கின்றது. திறனை வெளிப்படுத்துவதிலும், மைலேஜை வழங்குவதிலும் இந்த பைக் சிறப்பாக செயல்பட்டது. அதேவேளையில், அதிக வேகத்தின்போது அதிர்வுகள் சற்று அதிகமாகவே இந்த பைக்கில் தென்படுகின்றது. இதை குறைக்கும் முயற்சியை நிறுவனம் செய்திருக்கலாம் என்பது எங்களின் கருத்து.
குறிப்பாக, வேகம் அதிகரிக்க அதிகரிக்க அதிர்வும் கூடவே அதிகரிக்கும் நிலை உள்ளது. ஷார்ட் கியரிங் அமைப்பும் சற்றே சிக்கலானதாக இருக்கின்றது. அதேவேளையில், அதிக வேகத்தின்போது மிக சிறந்த ரைடிங் அனுபவத்தை பெற புதிய யுஎஸ்டி ஃபோர்க்குகள் பெரும் உதவியாக இருக்கின்றன. மிக நேர்த்தியாக திசைகளை மாற்ற இது உதவுகின்றது.

சிக்கல்கள் கணிசமாக இந்த பைக்கில் இருந்தாலும் இதை மிகவும் மோசமான பைக் என்றும் கூறும் அளவிற்கு அதில் குறைகள் என கூறலாம். பள்ளம்-மேடுகள் நிறைந்த கரடு-முரடான பாதையில் சுலபமாக இந்த பைக் பயணிக்கின்றது. ஆனால், தனியாக பயணிக்கும்போது பின்பக்கம் தூக்கி தூக்கி போடும் உணர்வு ஏற்படுகின்றது.
பஜாஜ் பல்சர் என்எஸ் 200 ரைடிங் அனுபவம் எப்படி இருந்தது?
பஜாஜ் நிறுவனம் இந்த பைக்கின் மோட்டாரில் சில அப்கிரேட்களை செய்திருக்கின்றது. ஆனால் இந்த அப்கிரேட் பெரிய அளவில் வேலை செய்ததாக தெரிய வில்லை. ஏனெனில் பழைய என்எஸ் 200 எஞ்ஜின் வெளிப்படுத்திய அதே திறனையே 2023 மாடலும் வெளியேற்றுகின்றது. இதனை நாங்கள் பெங்களூருவில் உள்ள மெகோ கார்டோபியா ரேஸ் டிராக்கில் வைத்தே ஓட்டி பார்த்தோம். 4ஆவது கியரில் மிக சிறப்பான வேகத்தை என்எஸ்200 எட்டியது.

அதேவேளையில், 6000 ஆர்பிஎம்மிலேயே கிளிப்-ஆன் பார்களில் ரெவ்வை எங்களால் உணர முடிந்தது. இது சற்று சலிப்பாக இருந்தது. ஆனால், சட்டென வளைவுகளில் திருப்ப மிகவும் நேர்த்தியான பைக்காக இது இருக்கின்றது. மிகவும் ஷார்ப்பான வளைவுகளில் வாகனத்தை திருப்பும்போது அது உற்சாகமான அனுபவத்தை எங்களுக்கு வழங்கியது. குறிப்பாக, முன் மற்றும் பின் பக்க சஸ்பென்ஷன் விருப்பத்திற்கு அதிகமாக இருக்கின்றது. ரைடிங் அனுபவத்தை கணிசமாக சுவாரஷ்யமாக மாற்றியதில் இதன் பங்கும் உண்டு.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
புதிய பல்சர் என்எஸ் 160 மற்றும் என்எஸ் 200 ஆகிய இரண்டிலும் லேசான குறைகள் தென்பட்டாலும், அவற்றின் அழகிய தோற்றம் சுண்டி இழுக்கும் வகையில் இருக்கின்றன. குறிப்பாக, சஸ்பென்ஷன் செட்-அப் மற்றும் கணிசமான சிறப்பம்சம் மேம்பாடுகள் இருசக்கர வாகன பிரியர்களை கவரக் கூடியதாக இருக்கின்றது. அதேவேளையில், பெரும்பாலான தொழில்நுட்பங்கள் மற்றும் ஒட்டுமொத்த தோற்றமும் அப்படியே பயன்படுத்தப்பட்டு இருப்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications









