இந்தியாவில் இப்படியொரு 1000cc பைக்கை BMW அறிமுகப்படுத்தும்னு எதிர்பார்க்கவே இல்ல! விலையை மட்டும் பார்க்காதீங்க

ஜெர்மன் மோட்டார்சைக்கிள் நிறுவனமான பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் இந்தியாவில் அதன் புதிய 1000சிசி பைக்காக 2023 எம் 1000 ஆர்ஆர் பைக்கை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய பிஎம்டபிள்யூ பைக்கின் விலை உள்பட முக்கிய சிறப்பம்சங்களை இனி பார்க்கலாம்.

பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் அதன் பிரபலமான 1000சிசி பைக்குகளுள் ஒன்றான எம்1000 ஆர்ஆர்-இன் புதிய மேம்படுத்தப்பட்ட வெர்சனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. ஸ்டாண்டர்ட் மற்றும் காம்பெடிஷன் என்கிற 2 விதமான வேரியண்ட்களில் 2023 பிஎம்டபிள்யூ எம் 1000 ஆர்ஆர் பைக் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

2023 bmw m 1000 rr launched

இதில் ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.49 லட்சமும், காம்பெடிஷன் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.55 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் கூடுதலாக ரூ.6 லட்சம் செலவு செய்தால், பைக்கின் சக்கரங்களை கார்பன்-ஃபைபரில் ஃபினிஷிங்கில் பெறுவதோடு உலோக ஸ்விங்கார்ம் மற்றும் பில்லட் மெஷிண்டு 'எம்' பாகங்களையும் பெறலாம்.

2023 பிஎம்டபிள்யூ எம்1000 ஆர்ஆர் பைக்கில் வாட்டர் & ஆயில்-கூல்டு 999சிசி, 4-சிலிண்டர், DOHC என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அமைப்பில் பிஎம்டபிள்யூவின் ஷிஃப்ட்கேம் தொழிற்நுட்பத்துடன் (VVT) 2-ரிங் ஃபோர்க்டு பிஸ்டன்கள், டைட்டானியம் வால்வுகள், மேம்படுத்தப்பட்ட கேம்ஷாஃப்ட்ஸ், எடை குறைவான கேம் ஹோல்டர்கள் மற்றும் டைட்டானியம் கனெக்டிங் ராட்கள் இடம்பெற்றுள்ளன.

2023 bmw m 1000 rr launched

இந்த தொழிற்நுட்பம் மற்றும் உலோகங்களின் உதவியுடன் மேற்கூறப்பட்ட 4-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 14,500 ஆர்பிஎம்-இல் 209.2 பிஎச்பி மற்றும் 11,000 ஆர்பிஎம்-இல் 113 என்எம் டார்க் திறன் வரையில் இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக விளங்குகிறது. இந்த என்ஜின் உடன் ஸ்ட்ரைட்-கட் கியர்களை கொண்ட 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 3.1 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த 1000சிசி பிஎம்டபிள்யூ பைக்கின் டாப்-ஸ்பீடு 314kmph ஆகும். 2023 எம்1000 ஆர்ஆர் பைக்கின் எடையை தாங்குவதில் என்ஜினும் ஒன்றாக விளங்குவதுபோல் பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரிட்ஜ்-டைப் கேஸ்ட் அலுமினியம் ஃப்ரேமில் பைக்கின் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

2023 bmw m 1000 rr launched

சஸ்பென்ஷனுக்கு பைக்கின் இரு முனைகளிலும் அட்ஜெஸ்ட்டபிள் சஸ்பென்ஷன் செட்-அப்கள் வழங்கப்பட்டுள்ளன. பைக்கை நகர்த்தி செல்ல எடை குறைவான 17-இன்ச் அலாய் சக்கரங்கள் உள்ளன. பிரேக் பணியை கவனிக்க முன் சக்கரத்தில் 4-பிஸ்டன் காலிபர்களுடன் 320மிமீ ட்வின் டிஸ்க்குகளும், பின் சக்கரத்தில் 2-பிஸ்டன் காலிபர்களுடன் 220மிமீ-இல் சிங்கிள் டிஸ்க்கும் பொருத்தப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: 2023 பிஎம்டபிள்யூ எம்1000 ஆர்ஆர் பைக் முன்பை விட ஜெர்மன் ஸ்டைலில் மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, பைக்கின் ஏரோடைனாமிக் தோற்றம் இன்னும் மெருகேறியுள்ளது. இதனால் இந்த பைக்கை அன்றாட பணிகளுக்கு பயன்படுத்துவது மட்டுமின்றி, ரேஸ் டிராக்கிற்கும் தைரியமாக எடுத்து செல்லலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 29, 2023, 21:59 [IST]
English summary
2023 bmw m 1000 rr launched in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X