இந்த ஒரு வசதிக்காகவே புதிய ஹீரோ கிளாமர் பைக்கை வாங்கலாம்!! விலையும் குறைவு... இவ்வளவு மைலேஜ் கிடைக்குமா?

ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட 2023 கிளாமர் (Glamour) மோட்டார்சைக்கிள் சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய அப்டேட் செய்யப்பட்ட ஹீரோ கிளாமர் பைக்கின் விலை, புதிய அப்டேட்கள் உள்பட முக்கிய விபரங்களை இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் குறிப்பாக மோட்டார்சைக்கிள்கள் விற்பனையில் நம்பர் ஒன் பிராண்டாக விளங்குகிறது. ஹீரோவில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் மோட்டார்சைக்கிள்களுள் ஒன்று கிளாமர் ஆகும். இதனாலேயே, அவ்வப்போது ஹீரோ கிளாமர் பைக் அப்டேட் செய்யப்பட்டு விடுகிறது.

2023 hero glamour bike launched

2023 ஹீரோ கிளாமர் மோட்டார்சைக்கிளும் வழக்கம்போல் டிரம் மற்றும் டிஸ்க் என 2 விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் டிரம் பிரேக் வேரியண்ட்டில் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.82,348 ஆகவும், டிஸ்க் பிரேக் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.86,348 ஆகவும் உள்ளது. 2023ஆம் ஆண்டிற்கான அப்டேட்டாக கிளாமர் பைக்கிற்கு 3 புதிய பெயிண்ட் தேர்வுகளை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வழங்கியுள்ளது.

இதன்படி, கேண்டி பிளாஸிங் சிவப்பு, டெக்னோ நீலம்-கருப்பு மற்றும் ஸ்போர்ட்ஸ் சிவப்பு-கருப்பு என்கிற 3 விதமான பெயிண்ட் தேர்வுகளில் 2023 கிளாமர் பைக் கிடைக்கும். அதுமட்டுமின்றி, கட்டக்கட்டமான ஸ்ட்ரிப்கள் உடன் பைக்கின் கிராஃபிக்ஸும் அப்டேட் செய்யப்பட்டு உள்ளது. இவற்றுடன், புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் 2023 கிளாமரில் வழங்கப்பட்டு உள்ளது.

2023 hero glamour bike launched

இந்த புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மூலம் வழக்கமான விபரங்களுடன் ரியல்-டைம் மைலேஜ் இண்டிகேட்டர் மற்றும் பெட்ரோல் குறைவாக உள்ளதை எச்சரிக்கும் அலாரம் போன்றவற்றையும் பெறலாம். இவை மட்டுமின்றி, பயணத்தின் போது மொபைல் போனை சார்ஜ் செய்துக் கொள்வதற்கு ஏதுவாக யுஎஸ்பி சார்ஜர் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது. அத்துடன், 2023 கிளாமர் பைக்கில் தரையில் இருந்து இருக்கையின் உயரத்தையும் ஹீரோ நிறுவனம் குறைத்துள்ளது.

இதன்படி, முன்பை விட கிளாமரில் ரைடர் இருக்கையின் உயரம் தரையில் இருந்து 8மிமீ மற்றும் பின் இருக்கையின் உயரம் 17மிமீ குறைந்துள்ளது. ஹீரோ கிளாமரில் 125சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. ஏர்-கூல்டு என்ஜினான இது அதிகப்பட்சமாக 7,500 ஆர்பிஎம்-இல் 10.68 பிஎச்பி மற்றும் 6,000 ஆர்பிஎம்-இல் 10.6 என்எம் டார்க் திறன் வரையில் இயக்க ஆற்றலை பைக்கிற்கு வழங்கக்கூடியதாக உள்ளது.

2023 hero glamour bike launched

ஒபிடி-2க்கு இணக்கமானதாக மேம்படுத்தப்பட்டு உள்ள இந்த என்ஜின் இனி எத்தனால் 20% கலக்கப்பட்ட பெட்ரோலை ஏற்கும். கிளாமரின் என்ஜின் அமைப்பில் ஹீரோவின் ஐ3எஸ் ஐடியல் ஸ்டாப்-ஸ்டார்ட் தொழிற்நுட்பம் இடம்பெறுகிறது. இந்த தொழிற்நுட்பத்தின் உதவியுடன் 2023 கிளாமர் பைக்கில் 63kmph மைலேஜை பெறலாம் என்கிறது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்.

புதிய கிளாமர் பைக்கின் அறிமுகம் குறித்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதன்மை வணிக அதிகாரி ரஞ்சிவ்ஜித் சிங் கூறுகையில், "புதிய கிளாமரின் அறிமுகத்தின் மூலம் மிகவும் போட்டி மிகுந்த 125சிசி மோட்டார்சைக்கிள்கள் பிரிவில் பிராண்டின் நிலைப்பாட்டை வலுப்படுத்தி உள்ளோம். கிளாமர் அதன் புதிய தோற்றத்தின் மூலம் வளர்ந்துவரும் எங்களது 2-சக்கர வாகனங்களுக்கான மார்க்கெட்டை மேலும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் என நம்புகிறோம்" என்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரஞ்சிவ்ஜித் சிங் கூறுவதுபோல, புதிய கிளாமர் ஹீரோ மோட்டோகார்பின் வளர்ச்சிக்கு தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என நாங்களும் நம்புகிறோம். குறிப்பாக, புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், யுஎஸ்பி சார்ஜர் வசதி உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதன் மூலம் வாடிக்கையாளர்களை வழக்கத்தை காட்டிலும் 2023 ஹீரோ கிளாமர் வெகுவாக கவரும் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Thursday, August 24, 2023, 22:29 [IST]
English summary
2023 hero glamour launched with new colour options
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X