கம்மி பட்ஜெட்டிற்கு இவ்வளவு சூப்பரான பைக்கா? ஹோண்டா கிட்ட இதை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டாங்க!

ஹோண்டா நிறுவனம் தனது 2023 சிபி 300 எஃப் என்ற புதிய பைக்கை ரூபாய் 1.70 லட்சம் என்ற விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கிற்காண புக்கிங், பிக் வில் டீலர் ஷிப்புகளில் இன்று துவங்குகிறது. இந்த பைக் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஹோண்டா நிறுவனம் தனது சிபி 300 எஃப் பைக்கை நீண்ட ஆண்டுகளாக இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது இந்த பைக்கை தற்போது அப்டேட் செய்து ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இந்த பைக் பிஎஸ் 6 ஓபிடி 2 கட்டுப்பாடுகளின் படி கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்குக்காக நீண்ட நாள் மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது இந்த பைக் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

honda cb 300f

இந்த பைக்கின் இன்ஜினை பொறுத்தவரை 293 சிசி சிங்கிள் சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 24 பிஎச்பி பவரையும் 25.6 என்எம் தாத்திரணையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த பைக் கியர் பாக்ஸ் உடன் ஸ்லீப்பர் கிளட்ச் அம்சத்துடன் விற்பனைக்கு வருகிறது.

இந்த பைக்கில் உள்ள பிரேக்கிங் சிஸ்டத்தை பொருத்தவரை முன்பக்கம் 276 மிமீ டிஸ்க் பிரேக்கும் பின்பக்கம் 220 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரேக்கர் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ஹோண்டா நிறுவனத்தில் இந்த பைக்கில் டார்க் கண்ட்ரோல் என்ற புதிய சிஸ்டம் ஹோண்டா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.

honda cb 300f

சஸ்பென்ஷனை பொருத்தவரை இந்த பைக்கில் முன்பக்கம் தங்க நிற யூஎஸ்டி 4 சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. இது போக பின்பக்கம் 5 ஸ்டெப் கொண்ட மோனோ ஷாக் அப்சர்வர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோக பைக்கின் முன் பக்கம் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் பேனல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த டிஸ்ப்ளே சிஸ்டத்தில் ஐந்து லெவல் ப்ரைட்நெஸ் அட்ஜஸ்ட்மென்ட் இருக்கிறது. இது போக இதில் ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், டேகோமீட்டர், ப்யூயல் காஜ் மீட்ட, கியர் பொசிஷன் இண்டிகேட்டர் மற்றும் கடிகாரம் ஆகிய அம்சங்கள் இருக்கிறது. இப்படி எல்இடி லைட்டிங் சிஸ்டம் மற்றும் ஹோண்டா ஸ்மார்ட்போன் வாய்ஸ் கண்ட்ரோல் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஹோண்டா சிபி 300 எஃப் பைக் குறித்து ஹோண்டா நிறுவனத்தின் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு இயக்குனர் யோகேஷ் மத்தூர் கூறும்போது: " நாங்கள் பிஎஸ் 6 ஓபிடி 2 கட்டுப்பாடுடன் கூடிய சிபி 300 எஃப் பைக்கை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.

இது வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தை தரும் வாகனமாக இருக்கும். உண்மையான ஒரு ஸ்ட்ரீட் பைட்டர் பைக் அனுபவத்தை இந்த சிபி 300 எஃப் பைக் அதை ஓட்டுபவர்களுக்கு வழங்கும் இது நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்ற பவர்ஃபுல்லான பெர்ஃபார்மன்ஸ் கொண்ட பைக்காக இருக்கும்" என தெரிவித்தார்.

இந்த பைக் குறித்து ஹோண்டா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவர் சுசுமோ ஒட்டானி கூறும் போது: " எங்கள் நிறுவனம் சிபி 300 எஃப் பைக்கை அறிமுகப்படுத்தும் போது பலரை திரும்பிப் பார்க்க வைக்கும் பைக்காக இருந்தது. இந்த பைக் பெர்பார்மன்ஸ், மாடல் லுக், வெர்சட்டைல் ஆகிய மூன்றையும் பேலன்ஸ் செய்த ஒரு உண்மையான ஸ்ட்ரீட் பைட்டர் பைக்காக உருவாக்கப்பட்டது .

தற்போது இந்த பைக் அடுத்த தலைமுறையினரை கவரும் வகையில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது தற்போது அரசின் விதிமுறைப்படி ஓபிடி 2 கட்டுப்பாட்டு விதிகளுக்கு கீழ் இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் இன்ஜின் மற்றும் மற்ற நவீன தொழில்நுட்பங்கள் பைக்கின் ரைடிங் அனுபவத்தை ஒரு படி மேலே எடுத்துச் செல்லும் வகையிலும் இன்ஜின் பெர்பார்மன்ஸ் சிறப்பாக இருக்கும் வகையிலும் வடிவமைத்துள்ளோம்" என கூறினார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் இருசக்கர வாகனங்களை தயாரித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்துவதில் சிறந்த நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இந்த சிவி 300 எஃப் பைக்கும் நல்ல விற்பனையை பெறும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, September 11, 2023, 18:42 [IST]
English summary
2023 honda cb 300f launched price rs 1 7 lakh know full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+