200சிசி ஹோண்டா பைக் இவ்வளவு குறைவான விலையில் கிடைக்குறது அபூர்வம்!! இப்போவே புக் செய்து வைங்க
2023 ஹோண்டா சிபி200எக்ஸ் (Honda CB200X) மோட்டார்சைக்கிள் மேம்படுத்தப்பட்ட வெர்சனில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. விநாயகர் சதுர்த்தி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களை டார்க்கெட் செய்து கொண்டுவரப்பட்டு உள்ள புதிய சிபி200எக்ஸ் பைக்கின் விலை உள்பட பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
வருட இறுதி பண்டிகை நாட்களை முன்னிட்டு புது, புது வாகனங்கள் சந்தையில் அறிமுகம் செய்யப்படுவது வழக்கமான ஒன்று தான். இந்த வகையில், அப்டேட் செய்யப்பட்ட சிபி200எக்ஸ் அட்வென்ச்சர் பைக்கை ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

2023 ஹோண்டா சிபி200எக்ஸ் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.47 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. புதிய சிபி200எக்ஸ் பைக்கில் புதிய அப்டேட்டாக என்ஜின் திருத்தப்பட்டு இருப்பது மட்டுமின்றி, லேட்டஸ்ட் பிஎஸ்6 2ஆம் கட்ட விதிமுறைகளுக்கு இணக்கமாக மோட்டார்சைக்கிள் மேம்படுத்தப்பட்டும் உள்ளது. இவற்றுடன், சிபி200எக்ஸ் பைக்கிற்கு புதியதாக ஒரு பெயிண்ட் தேர்வை ஹோண்டா நிறுவனம் வழங்கியுள்ளது.
அதனுடன் சேர்த்து, டெசண்ட் ப்ளூ மெட்டாலிக், பேர்ல் நைட்ஸ்டர் பிளாக் மற்றும் ஸ்போர்ட்ஸ் சிவப்பு என்ற 3 பெயிண்ட் ஆப்ஷன்களில் இந்த பைக்கை வாங்கலாம். இதில் டெசண்ட் ப்ளூ மெட்டாலிக் பெயிண்ட் தேர்வையே புதியதாக ஹோண்டா தற்போது வழங்கியுள்ளது. 2023 சிபி200எக்ஸ் பைக்கை மொத்தம் 10-வருட உத்தரவாதத்துடன் ஹோண்டா விற்பனை செய்ய உள்ளது. இதில் முதல் 3 வருடங்கள் ஸ்டாண்டர்ட்டாக கிடைக்கும். அடுத்த 7 வருட உத்தரவாதத்தை கூடுதல் தொகையை செலுத்தியே பெற முடியும்.

புதிய 2023 ஹோண்டா சிபி200எக்ஸ் பைக்கிலும் வழக்கமான 184.04சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு, ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜின் தான் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே கூறியதுபோல், பிஎஸ்6 2ஆம் கட்ட கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப என்ஜின் சற்று திருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் மூலம் அதிகப்பட்சமாக 8,500 ஆர்பிஎம்-இல் 17.03 பிஎச்பி மற்றும் 6,000 ஆர்பிஎம்-இல் 15.9 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம்.
என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கியர்பாக்ஸ் அமைப்பில், அசிஸ்ட் & ஸ்லிப்பர் க்ளட்ச் வசதி உள்ளது. இந்த வசதியின் மூலம், முரட்டுத்தனமாக கியரை மாற்றும்போது ஏற்படும் வீல் லாக்கிங்கை தடுக்கலாம். இந்த பைக்கில் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் யுஎஸ்டி ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோ-ஷாக் அப்சார்பரும் வழங்கப்பட்டுள்ளன.

பிரேக்கிங் பணியை கவனிக்க, முன் சக்கரத்தில் 276மிமீ பெடல் டிஸ்க்கும், பின்பக்கத்தில் 220மிமீ டிஸ்க்கும் உள்ளன. தொழிற்நுட்ப அம்சங்களாக 2023 ஹோண்டா சிபி200எக்ஸ் மோட்டார்சைக்கிளில் 5 நிலைகளில் திரை வெளிச்சத்தை அட்ஜெட் செய்யக்கூடிய முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், எல்இடி லைட்டிங் தொழிற்நுட்பம், சிங்கிள்-சேனல்-ஏபிஎஸ் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
இதில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரையின் வாயிலாக ட்வின் ட்ரிப் மீட்டர்கள், பேட்டரி வோல்ட்மீட்டர், கியர் பொசிஷன் இண்டிகேட்டர் மற்றும் நேரம் உள்ளிட்ட விபரங்களை பெறலாம். ஹோண்டாவின் அட்வென்ச்சர் பைக்கான இதில் அலாய் சக்கரங்கள் பொருத்தப்படுகின்றன. ஹோண்டா சிபி200எக்ஸ் பைக்கிற்கு விற்பனையில் ஹீரோ மோட்டோகார்பின் எக்ஸ்பல்ஸ் 200டி போட்டியாக விளங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி பைக்கின் விற்பனை மாதத்திற்கு மாதம் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. உண்மையில் அதனுடன் போட்டியிட முடியாமல் ஹோண்டா போராடுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியாவில் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளில் 2ஆம் கட்ட கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்து கிட்டத்தட்ட 3 மாதங்களாகி விட்டன. ஆனால் இப்போதுதான் சிபி200எக்ஸ் பைக்கை ஹோண்டா அப்டேட் செய்கிறது. இதில் இருந்து இந்த பைக்கின் விற்பனை எந்த அளவிற்கு உள்ளது என்பதை அறியலாம்.


Click it and Unblock the Notifications









