ஹோண்டா ஆக்டிவாவை மறந்து எல்லாரும் டியோவை வாங்க போறாங்க!! ஸ்கூட்டரில் புதியதாக இப்படியொரு அம்சமா!

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களுள் ஒன்றான ஹோண்டா டியோ அப்டேட் செய்யப்பட்டு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், புதிய டியோ ஸ்கூட்டர் குறித்த டீசர் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றி இனி இந்த செய்தியில் முழுமையாக பார்க்கலாம்.

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் பிரதான மாடல் ஆக்டிவா ஸ்கூட்டர் ஆகும். ஆக்டிவா இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்கூட்டர் மாடலாக விளங்குகிறது. ஆக்டிவாவிற்கு அடுத்து ஹோண்டா அதிகம் விற்பனை செய்யும் ஸ்கூட்டர் டியோ ஆகும். ஆனால் கடந்த சமீப மாதங்களாக டியோ ஸ்கூட்டரின் விற்பனை வெகுவாக குறைந்து வந்தது.

honda dio twin instrument cluster

இந்த சரிவை உணர்ந்த ஹோண்டா நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட புதிய டியோ ஸ்கூட்டரை சந்தையில் களமிறக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறது. இதற்கிடையில் புதிய டியோ ஸ்கூட்டரை மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்தும் நோக்கில் பல்வேறு டீசர் வீடியோக்கள் தொடர்ச்சியாக வெளியீடு செய்யப்பட்ட வண்ணம் உள்ளன.

இந்த வகையில் சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்ட டீசர் வீடியோவில், 2023 டியோ ஸ்கூட்டரின் என்ஜின்-எக்ஸாஸ்ட் சத்தம் எவ்வாறு இருக்கும் என்பது காட்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தற்போது புதிய டியோ ஸ்கூட்டர் தொடர்பான புதிய டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஸ்டேரிங் சக்கரத்தின் மத்தியில் வழங்கப்படும் ஸ்கூட்டரின் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் பகுதி காட்டப்பட்டுள்ளது.

டியோ ஸ்கூட்டரில் வழக்கமாக எளிமையான சிங்கிள் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்படும். ஆனால், தற்போது புதியதாக வெளியிடப்பட்டுள்ள டீசரில் இரட்டை டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் பகுதி உள்ளது. அதாவது, இரு டிஜிட்டல் எல்சிடி டிஸ்பிளேஸ் ஒன்றன்மேல் ஒன்றாக வழங்கப்பட்டுள்ளன. இதனுடன், சைடு ஸ்டாண்ட் கட்-ஆஃப் வசதி என ஏகப்பட்ட வசதிகளும் 2023 டியோவில் வழங்கப்பட்டுள்ளன.

இந்த வசதிகள் 2023 ஆக்டிவா ஸ்கூட்டரில் இருந்து அப்படியே வழங்கப்பட்டுள்ளன. ஆனால் ஆக்டிவாவில் கூட வழங்கப்படாத இரட்டை-திரை இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் பகுதி 2023 டியோவில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் சிறிய அளவில் ஒரேயொரு எல்சிடி திரை மட்டும் வழங்கப்படுகிறது. 2023 டியோவில் வழங்கப்பட்டுள்ள புதிய செவ்வக வடிவ டிஸ்பிளே ஆனது நீல நிற பேக் லைட்டிங் உடன் உள்ளது.

honda dio twin instrument cluster

இன்னும் சொல்லப் போனால், ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்கில் வழங்கப்படும் இன்ஸ்ட்ரூமெண்ட் திரையை விட டியோவின் இந்த புதிய திரை பெரியதாக உள்ளது. டியோ ஸ்கூட்டரின் புதிய செவ்வக வடிவ இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரின் வாயிலாக ஸ்கூட்டரின் வேகம், டச்சோ மற்றும் சைடு-ஸ்டாண்ட் போடப்பட்டு இருந்தால் அதுகுறித்த எச்சரிக்கை உள்ளிட்டவற்றை பெறலாம்.

மற்றொரு திரையில் என்ஜின் சர்வீஸ், பேட்டரி மற்றும் ஸ்மார்ட் கீ இண்டிகேட்டர் உள்ளிட்டவை காட்டப்படுகின்றன. 2023 டியோவில் 3-ஸ்டெப் ஈகோ இண்டிகேட்டர் வழங்கப்பட்டுள்ளது. இண்டிகேட்டர்களின் சிக்னல்கள் புதியதாக வழங்கப்பட்டுள்ள பெரிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரின் திரையில் கணக்கச்சிதமாக பொருந்தியுள்ளன. ஸ்டாண்டர்ட், டீலக்ஸ் மற்றும் எச்-ஸ்மார்ட் என 3 விதமான வேரியண்ட்களில் 2023 ஹோண்டா டியோ அறிமுகம் செய்யப்பட உள்ளது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: டியோ ஸ்கூட்டருக்கு ஒரு சமயத்தில் திடீரென பெரிய வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது. ஆனால் சமீப காலமாக டியோ ஸ்கூட்டர்கள் விற்பனை சரிவடைந்து வருகிறது. புதிய இரட்டை-திரை இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருடன் வரும் 2023 டியோ இந்த நிலையை மாற்றும் என நம்புவோம். அதேபோல், புதிய இரட்டை இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை மற்ற 2-வீலர்களுக்கும் ஹோண்டா வழங்க முயற்சிக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 12, 2023, 11:28 [IST]
English summary
2023 honda dio gets twin instrument cluster
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+