கார்களையே தூக்கி சாப்பிடும் வசதியுடன் புதிய ஹோண்டா ஸ்கூட்டர்! ஆக்டிவாவே இதுக்கு முன்னால கை கட்டிதான் நிக்கணும்

இந்திய சந்தையில் ஸ்கூட்டர் விற்பனையில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களில் ஒன்று ஹோண்டா (Honda). ஹோண்டா என்றதும் ஆக்டிவா (Honda Activa) ஸ்கூட்டர்தான் நமக்கு முதலில் நினைவிற்கு வரும். அதேபோல் சர்வதேச சந்தைகளிலும் ஹோண்டா நிறுவனம் பல்வேறு ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது.

இதில் ஹோண்டா ஸ்கூப்பி (Honda Scoopy) மிகவும் முக்கியமானது. தென் கிழக்கு ஆசிய நாடுகள் பலவற்றிலும் ஹோண்டா ஸ்கூப்பி ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் இந்த ஸ்கூட்டருக்கு ஹோண்டா நிறுவனம் காப்புரிமை பெற்றுள்ளது. எனவே இந்திய சந்தையிலும் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக ஸ்கூப்பி ஸ்கூட்டரின் 2023 மாடலை ஹோண்டா நிறுவனம் இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்துள்ளது.

கார்களையே தூக்கி சாப்பிடும் வசதியுடன் புதிய ஹோண்டா ஸ்கூட்டர்! ஆக்டிவாவே இதுக்கு முன்னால கை கட்டிதான் நிக்கணும்

கார்களையே தூக்கி சாப்பிட்றும் போலயே!

2023 ஹோண்டா ஸ்கூப்பி ஸ்கூட்டரில், பல்வேறு புதிய வசதிகள் வழங்கப்பட்டிருப்பதுடன், புதிய கலர் ஆப்ஷன்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்தோனேஷியாவில் தற்போது விற்பனையில் இருப்பது 5வது தலைமுறை ஹோண்டா ஸ்கூப்பி ஆகும். இதன் 2023 மாடல்தான் பல்வேறு அப்டேட்களுடன் களமிறக்கப்பட்டுள்ளது. ஸ்போர்ட்டி, ஃபேஷன், பிரஸ்டீஜ் மற்றும் ஸ்டைலிஷ் என மொத்தம் 4 வேரியண்ட்களில் 2023 ஹோண்டா ஸ்கூப்பி ஸ்கூட்டர் கிடைக்கும்.

2023 ஹோண்டா ஸ்கூப்பி ஸ்கூட்டரில், செல்போன்களை சார்ஜ் செய்து கொள்ள வசதியாக யூஎஸ்பி சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் வெகு சமீபத்தில் கார்களில் வழங்கப்படுவதை போன்ற ஹோண்டா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் கீ (Smart Key) தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வசதியை 2023 ஹோண்டா ஸ்கூப்பி ஸ்கூட்டரும் பெற்றுள்ளது.

கார்களையே தூக்கி சாப்பிடும் வசதியுடன் புதிய ஹோண்டா ஸ்கூட்டர்! ஆக்டிவாவே இதுக்கு முன்னால கை கட்டிதான் நிக்கணும்

சூப்பரான இன்ஜின்!

அதே சமயம் 2023 ஹோண்டா ஸ்கூப்பி ஸ்கூட்டரில் 8 கலர் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டரின் முன் பகுதியில் டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் ட்ரம் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளன. அதே சமயம் 2023 ஹோண்டா ஸ்கூப்பி ஸ்கூட்டரில், 109.5 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 9 பிஹெச்பி பவர் மற்றும் 9.3 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஹோண்டா ஆக்டிவா 6ஜி (Honda Activa 6G) ஸ்கூட்டரின் பவர் அவுட்புட் வெறும் 7.68 பிஹெச்பி மற்றும் 8.84 என்எம் மட்டுமே என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் வாய்ந்த ஹோண்டா ஸ்கூப்பி இந்திய சந்தையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் பரவலாக காணப்படுகிறது.

எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

இந்திய வாடிக்கையாளர்களின் இந்த எதிர்பார்ப்பை ஹோண்டா நிறுவனம் விரைவில் நிறைவேற்றும் என நாம் எதிர்பார்க்கலாம். இதுதவிர ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் (Electric Scooter) இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஆக்டிவா ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளையும் ஹோண்டா நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த தகவல் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏத்தர் 450எக்ஸ் (Ather 450X), பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak), டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube) மற்றும் ஓலா எஸ்1 ப்ரோ (Ola S1 Pro) ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வரவுள்ளது. மேற்கண்ட போட்டியாளர்களுக்கு எல்லாம் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் விலையில் ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹோண்டா நிறுவனம் தயாராகி கொண்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 15, 2023, 11:48 [IST]
English summary
2023 honda scoopy features engine india launch details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+