இப்ப வாங்குனா 2033 வரை வாரண்டி கிடைக்கும்! புதிய ஹோண்டா யூனிக்கான் அறிமுகம்!
ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் ஓபிடி 2 கட்டுப்பாடுகளுடனான யூனிகான் பைக் ரூபாய் 1,09,800 என்ற விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் ஒரே வேரியண்டாக விற்பனைக்கு வரவுள்ளது. இந்த பைக்குக்கு 10 ஆண்டுகள் வரை வாரண்டி வழங்கப்படுகிறது. இந்த பைக் குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
ஹோண்டா நிறுவனத்தின் யூனிகான் பைக் இந்தியாவில் பிரபலமான பைக்குகளில் ஒன்று. இந்த பைக்கை ஏகப்பட்ட மக்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இன்றும் இந்த பைக்குக்கு நல்ல மவுசு இருக்கிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் இந்தியாவில் பிஎஸ்6 இரண்டாம் கட்ட கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது.

அப்பொழுது இந்தியாவில் விற்பனை செய்யும் வாகனங்களில் மாசு வெளியீட்டை ரியல் டைமில் கண்காணிக்கும் கருவி பொருத்தப்பட வேண்டும் என அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி ஹோண்டா நிறுவனம் தனது யூனிகான் பைக்கில் தற்போது இந்த கருவியைப் பொருத்தி அப்டேட் செய்து வெளியிட்டுள்ளது.
புதிதாக அப்டேட் செய்யப்பட்ட 2023 ஹோண்டா யூனிகான் பைக்கை பொறுத்தவரை 170 சிசி ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர், இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஃப்யூயல் இன்ஜெக்டட் சிஸ்டம் இருக்கிறது. இந்த பைக் 13.27 பிஎச்பி பவரை 7500 ஆர்பிஎம்மிலும், 14.58 என்னும் டார்க் பவரே 5500 வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் செல்ஃப் ஸ்டார்ட் வசதி இருக்கிறது. இதில் டைமண்ட் டைப் பிரேம் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்க சஸ்பென்ஷனிற்காக டெலஸ்கோப்பிக் ஃபோக் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் ஹைட்ராலிக் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. பிரேக்கை பொருத்தவரை முன்பக்கம் 240மிமீ டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது பின்பக்கம் 130மிமீ ட்ரம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த பைக்கில் பாதுகாப்பு வசதிக்காக சிங்கிள் சேனல் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கின் முனபக்கம் 18 இன்ச் அலாய் வீல் ட்யூப்லெஸ் டயருடன் பொருத்தப்பட்டுள்ளது. இது 80/100 என்ற அளவிலான டயரை கொண்டுள்ளது. பின்பக்கம் 100/90 என்ற அளவிலான டயர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கின் விலையைப் பொருத்தவரை ரூ 1,09,900 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஹோண்டா யூனிகான் பைக் ப்யூயல் இக்னிஷயன் பொருத்தப்பட்டுள்ளது. இதன் கலரை பொருத்தவரை இம்பீரியல் ரெட் மெட்டாலிக், மேட் ஆக்சிஸ், கிரைம் மெட்டாலிக் ஆகிய கலர்களில் விற்பனையாகி வருகிறது. தற்போது புதிதாக பியல் சியான் ப்ளூ கலரும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பைக்குக்கு வழக்கமான 3வருட வாரண்டி வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் விரும்பினால் ஏழு வருட வாரண்டியை தனியாகப் பெற்றுக் கொள்ள முடியும். ஆக மொத்தம் 10 ஆண்டுகள் வரை வாரண்டி கிடைக்கும்.
அதாவது 2023-ம் ஆண்டு நீங்கள் இந்த பைக்கை வாங்கினால் 2033 ஆம் ஆண்டு வரை பயன்படுத்த இதற்கான வாரண்டி உங்களுக்கு வழங்கப்படும். இந்த பைக் மார்க்கெட்டில் உள்ள பஜாஜ் பல்சர் 150, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 டூவி, பஜாஜ் பல்சர் என் 150 ஆகிய பைக்குகளுக்கு போட்டியாகக் களம் இறங்குகிறது.


Click it and Unblock the Notifications









