ரூ.7 லட்சத்தில் புதிய கவாஸாகி வல்கன் எஸ் பைக்... ஆனாலும் சிங்கிள் டிஸ்க் மட்டும்தான் - நம்பவே முடியல!!

2023 கவாஸாகி வல்கன் எஸ் (Kawasaki Vulcan S) மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய கவாஸாகி பைக்கை பற்றிய முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.

கவாஸாகி இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் அதன் புதிய மிடில்-வெயிட் க்ரூஸர் மோட்டார்சைக்கிளான வல்கன் எஸ் மாடலை 2023ஆம் ஆண்டிற்காக அப்டேட் செய்து அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.10 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முந்தைய 2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட வல்கன் எஸ் பைக்குடன் ஒப்பிடுகையில், புதிய வல்கன் எஸ் பைக்கில் குறிப்பிடத்தக்க அப்கிரேட்கள் வழங்கப்பட்டுள்ளன.

ரூ.7 லட்சத்தில் புதிய கவாஸாகி வல்கன் எஸ் பைக்... அறிமுகம்!!

இருப்பினும் கவாஸாகி வல்கன் எஸ் பைக்கை வழக்கம்போல் மெட்டாலிக் மேட் கார்பன் கிரே நிறத்தில் மட்டுமே பெற முடியும். அதேபோல், 2023 வல்கன் எஸ் பைக்கில் வழக்கமான 659சிசி இணையான-இரட்டை, லிக்யுடு-கூல்டு என்ஜினே பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 7,500 ஆர்பிஎம்-இல் 59.9 பிஎச்பி மற்றும் 6,600 ஆர்பிஎம்-இல் 62.4 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இந்த என்ஜின் உள்ளது.

இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. பெயிண்ட் & என்ஜின் மட்டுமின்றி, வல்கன் எஸ் பைக்கின் தோற்றத்திலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வழக்கமான சிங்கிள்-பேட் ஹெட்லேம்ப், நீர்த்துளி வடிவில் பெட்ரோல் டேங்க் மற்றும் கருப்பு நிறத்தில் ஃப்ரேம் உள்ளிட்டவற்றுடன் வழக்கம்போல் தாழ்வான பைக்காகவே 2023 வல்கன் எஸ் வடிவமைக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ரூ.7 லட்சத்தில் புதிய கவாஸாகி வல்கன் எஸ் பைக்... அறிமுகம்!!

பொதுவாகவே, க்ரூஸர் ரக பைக்குகள் தாழ்வானதாக வடிவமைக்கப்படுவது வழக்கம். இதற்கேற்ப வல்கன் எஸ் பைக்கில் ரைடரின் இருக்கையும் வளைவாக வழங்கப்பட்டுள்ளது. எக்ஸாஸ்ட் குழாய் அளவில் சிறியதாக இடம்பெற்று இருக்க, அலாய் சக்கரங்கள் மாடர்ன் டச்சில் உள்ளன. சஸ்பென்ஷனை பொறுத்தவரையில், 2023 வல்கன் எஸ் பைக்கில் முன்பக்கத்தில் 130மிமீ டிராவல் உடன் 41மிமீ டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் 80மிமீ டிராவல் உடன் ப்ரீலோடு அட்ஜெஸ்ட் ஆகக்கூடிய மோனோஷாக்கும் வழங்கப்பட்டுள்ளன.

பிரேக்கிங் பணியை இந்த பைக்கில் முன் சக்கரத்தில் 300மிமீ சிங்கிள் டிஸ்க்கும், பின் சக்கரத்தில் 250மிமீ சிங்கிள் டிஸ்க்கும் கவனித்து கொள்கின்றன. சற்று விலையுயர்ந்த பைக்குகளிலேயே தற்சமயம் முன் சக்கரத்தில் டபுள் டிஸ்க்குகள் வழங்கப்படும் நிலையில், ரூ.7 லட்சத்திற்கு மேல் விலையை கொண்ட பைக்கில் சிங்கிள் டிஸ்க் மட்டுமே வழக்கப்பட்டு இருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.

ரூ.7 லட்சத்தில் புதிய கவாஸாகி வல்கன் எஸ் பைக்... அறிமுகம்!!

பைக்கின் மற்ற சிறப்பம்சங்களாக, 14-லிட்டர் பெட்ரோல் டேங்க், 235 கிலோ கெர்ப் எடை, 705மிமீ-இல் தாழ்வான இருக்கை, 130மிமீ கிரவுண்ட் கிளியரென்ஸ், 18-இன்ச் முன் & 17-இன்ச் பின் சக்கரங்கள் மற்றும் ட்யூவல்-சேனல் ஏபிஎஸ் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. பாகங்களாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ள இந்த கவாஸாகி பைக்கிற்கு ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 நேரடி போட்டி மாடலாக விளங்கவுள்ளது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து

இந்தியா, மிக பெரிய மோட்டார்சைக்கிள் சந்தை என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. இருப்பினும் அமெரிக்கர்களை போன்று தாழ்வான க்ரூஸர் ரக பைக்கை விரும்புகிறவர்கள் நம் நாட்டில் மிகவும் குறைவே. இதனால்தான் குறைந்த விலையிலான ராயல் என்பீல்டின் சூப்பர் மீட்டியோர் 650 மோட்டார்சைக்கிள் அவ்வளவாக விற்பனையாகுவதில்லை. அப்படி இருக்கையில், 2023 கவாஸாகி வல்கன் எஸ் பைக் எந்த அளவிற்கு விற்பனையாகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 5, 2023, 15:22 [IST]
English summary
2023 kawasaki vulcan s bike launched in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+