2023 KTM 250 Adventure பைக் இந்தியாவில் அறிமுகம் - இந்த விலையில் பைக்கை வாங்கிடலாம்!!

ஒபிடி2-க்கு இணக்கமாக மேம்படுத்தப்பட்ட 2023 கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய 250 அட்வென்ச்சர் பைக்கை பற்றிய முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.

2020இல் அமலுக்கு வந்த பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளின் 2ஆம் கட்ட கட்டுப்பாடுகள் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன. இந்த புதிய கட்டுப்பாடுகளின்படி இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஆட்டோமொபைல் வாகனங்களில் ஒபிடி2 தொழிற்நுட்ப அம்சம் இடம்பெற வேண்டியது அவசியமாக மாறியுள்ளது. ஒபிடி2 ஆனது வாகனத்தில் உள்ள குறைப்பாடுகளை தெரிவிக்கக்கூடியதாக விளங்குகிறது.

2023 KTM 250 Adventure இந்தியாவில் அறிமுகம் - விலை இதுதான்!!

இதன்படி, பிரபல மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான கேடிஎம் இந்தியாவில் அதன் 390 ட்யூக், ஆர்சி200 மற்றும் ஆர்சி390 பைக்குகளை ஒபிடி2-க்கு இணக்கமாக அப்டேட் செய்து கடந்த வாரங்களில் அறிமுகப்படுத்தி வந்த நிலையில், தற்போது அந்த வரிசையில் 250 அட்வென்ச்சர் பைக் ஒபிடி-2க்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 2023 கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.47 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய 250 அட்வென்ச்சர் பைக்கிலும் வழக்கமான 248.76சிசி சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜினே பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜினும் ஒபிடி2-க்கு இணக்கமானதாக மேம்படுத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 9,000 ஆர்பிஎம்-இல் 29.6 பிஎச்பி மற்றும் 7,500 ஆர்பிஎம்-இல் 24 என்எம் டார்க் திறனை இந்த என்ஜின் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் உள்ளிட்டவை இணைக்கப்பட்டுள்ளன.

2023 KTM 250 Adventure இந்தியாவில் அறிமுகம் - விலை இதுதான்!!

மெக்கானிக்கல் அப்கிரேடை தவிர்த்து, பைக்கின் தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கமான சிங்கிள்-பேட் ஹெட்லேம்ப், சிறிய அளவிலான விண்ட்ஸ்க்ரீன், சைடு-ஸ்லங் எக்ஸாஸ்ட் மற்றும் இரண்டாக பிளவுப்பட்ட இருக்கை உள்ளிட்டவையே முந்தைய மாடலில் இருந்து 2023 250 அட்வென்ச்சர் பைக்கிலும் தொடரப்பட்டுள்ளன. இதில் இருக்கை ஆனது தரையில் இருந்து 855மிமீ உயரத்தில் வழங்கப்படுகிறது.

மேற்கூறப்பட்ட அம்சங்களை போல், பைக்கின் 14.5 லிட்டர் கொள்ளளவிலான பெட்ரோல் டேங்கிலும் எந்த மாற்றமும் இல்லை. இந்த அட்வென்ச்சர் பைக்கில் முன் சக்கரத்தில் 19 இன்ச்சிலும், பின் சக்கரத்தில் 17 இன்ச்சிலும் அலாய் சக்கரங்கள் பொருத்தப்படுகின்றன. இந்த முறையும் 250 அட்வென்ச்சர் பைக்கில் எல்இடி ஹெட்லைட் வழங்கப்படவில்லை. ஹலோஜன் ஹெட்லைட்டே தொடரப்பட்டுள்ளது. ஆனால் ஹெட்லைட்டிற்கு அருகாமையில் எல்இடி டிஆர்எல்-கள் பொருத்தப்பட்டுள்ளன.

2023 KTM 250 Adventure இந்தியாவில் அறிமுகம் - விலை இதுதான்!!

அதேபோல் பின்பக்கத்தில் டெயில்லைட் மற்றும் டர்ன் இண்டிகேட்டர்களும் எல்இடி-ஆக உள்ளன. பைக்கின் வேகம், கியர் பொசிஷன் உள்ளிட்டவற்றை காட்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. இவற்றுடன் ட்யூவல்-சேனல் ஏபிஎஸ், 12 வோல்ட் பவர் சாக்கெட் உள்ளிட்டவையும் 250 அட்வென்ச்சர் பைக்கில் இடம்பெறுகின்றன. ஃபேக்டரி ரேசிங் நீலம் அல்லது எலக்ட்ரானிக் ஆரஞ்ச் என்ற 2 பெயிண்ட் தேர்வுகளில் ஒன்றில் 2023 கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்கை வாங்கலாம்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்தியாவில் கேடிஎம் நிறுவனம் மெல்ல மெல்ல அதன் பைக்குகளை பிஎஸ்6 2ஆம் கட்ட விதிமுறைகளுக்கு இணக்கமாக அப்டேட் செய்து வருகிறது. அந்த வரிசையிலேயே 250 அட்வென்ச்சர் பைக்கும் இணைந்துள்ளது. பைக்கின் விலை பெரியதாக அதிகரிக்கப்படவில்லை. ஆனால் அதற்கேற்ப பைக்கின் தோற்றத்திலும் எந்த அப்கிரேடும் இல்லை. இதனால்தான், 2023 250 அட்வென்ச்சர் பைக்கை கமுக்கமாக கேடிஎம் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, April 21, 2023, 11:03 [IST]
English summary
2023 ktm 250 adventure bike updated to obd2 standards
மேலும்... #கேடிஎம் #ktm #new launches
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X