ஆஃப்ரோடு பைக் ஓட்ட ஆசையா இருக்குதா? உங்களுக்குன்னே இந்த பைக்கை அப்டேட் பண்ணிருக்காங்க!
கேடிஎம் நிறுவனம் தனது 2023 கேடிஎம் 390 அட்வெஞ்சர் பைக்கை அப்டேட் செய்து அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய அப்டேட்டில் இந்த பைக்கில் என்னென்ன அம்சங்கள் புதிதாக வந்துள்ளன என விரிவாகக் காணலாம் வாருங்கள்.
கேடிஎம் நிறுவனம் இந்தியாவில் பைக்குகளை அறிமுகப்படுத்தி இளைஞர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மார்கெட்டில் செம மவுசு இருக்கிறது. பல இளைஞர்கள் இந்நிறுவனத்தின் பைக்குகளை வாங்க தவம் கிடக்கின்றனர். இந்நிலையில் கேடிஎம் தனது பைக்கை அப்டேட் செய்து இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி கேடிஎம் தனது 2023 கேடிஎம் அட்வெஞ்சர் பைக்கில் முக்கிய அப்டேட்டாக முழுமையாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஸனை பொருத்தியுள்ளது. இதை ஆஃப் ரோடிற்கு ஏற்றவாறு அட்ஜெஸ்ட் செய்ய முடியும். என்று அறிவித்துள்ளது. ரேலி ஆரஞ்ச் நிறத்தில் இந்த பைக்கை அந்நிறுவனம் அப்டேட் செய்துள்ளது. இதற்காக டபிள்யூபி ஆபெக்ஸ் சஸ்பென்ஸனை பொருத்தியுள்ளது.
இந்த சஸ்பென்சனில் கம்பிரஷன், ரீபவுண்ட் மற்றும் ப்ரீ லோடிற்காக அட்ஜெஸ்ட் செய்ய முடியும். இதன் மூலம் ரைடருக்கு ஏற்ற கிரிப் கிடைக்கும் என கேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் முன்பக்க ஃபோர்க் கம்பிரஷன் மற்றும் ரீபவுண்டிற்காக 30 கிளிக்குகளும், பின்பக்க மேனா ஷாக்கை பொருத்தவரை ரீபவுண்டிற்காக 20 கிளிக்களும், ப்ரீலோடிற்காக 10 ஸ்டெப்களும் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அவரது உடல் எடை, உயரத்திற்குத் தகுந்தார் போது அவரது ரைடு கம்ஃபர்டாகவும், கையாள வசதியாகவும், இருக்கும்படி மாற்றியமைத்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கிற்கு முன்பக்கம் 19 இன்ச் மற்றும் பின்பக்கம் 17 இன்ச் ஃபோர்க் வீல் எடை குறைந்த கருப்பு நிற அனோடைஸ்டு அலுமினியம் ரிம் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஃப்ரோ பைக்கின் துறைத் தலைவர் சுமீத் நராங் கூறும் போது: " ஆன்/ ஆஃப் ரோடு செக்மெண்ட், அட்வென்ஞ்சர் பைக் செக்மெண்ட் இந்தியாவில் வளர்ச்சியடைந்து வருகிறது. கேடிஎம் ப்ரோ எக்ஸ்பி அட்வெஞ்சர் தயாரிப்புகளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளது. அதில் 50 சதவீதம் புதிய வாடிக்கையாளர்கள் தான். இது அட்வெஞ்சர் பைக்கிங்கிற்கான டிமாண்ட் அதிகமாகியுள்ளதைக் காட்டுகிறது.
தற்போது 2023 கேடிஎம் 390 அட்வெஞ்சர் பைக்கை அப்டேட் செய்து வெளியிட்டுள்ளோம். அதில் பிரபலமான முழு அட்ஜெஸ்டபுள் சஸ்பென்சன் மற்றும் ஸ்போக் வீல்களை வழங்கியுள்ளோம். இது மோட்டார் சைக்கிளை அதிக திறன் மிக்கதாக மாற்றுகிறது" எனக் கூறினார். இந்த பைக்கின் விலையைப் பொருத்தவரை ரூ3.60 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இது பழைய மாடல் பைக்கை விட ரூ23 ஆயிரம் விலை அதிகமாக இருக்கிறது.
இந்த 2023 கேடிஎம் 390 அட்வெஞ்சர் பைக்கை பொருத்தவரை இதில் 3டி ஐஎம்யூவுடன் கூடிய டிராக்ஷன் கண்ட்ரோல் இடம் பெற்றுள்ளது. இதில் க்விக் ஸிவிஃப்டர்+, லீன் ஆங்கில் சென்சிடிவ் கார்னரிங் ஏபிஎஸ், ரோடிங் மோட்கள் (ஸ்டிரீட் மற்றும் ஆஃப் ரோடு), ஆஃப் ரோடு ஏபிஎஸ், ரைடு பை வயர் டெக்னாலஜி, எல்இடி ஹெட்லைட்கள், அப்சைடு டவுண் ஃபோர்க், சைடு மவுண்டட் எக்ஸாஸ்ட் சிஸ்டம், 46 மிமீ த்ராட்டல் பாடி, ஸ்லிப்பர் கிளட்ச், ஆஃப் பங்சன்களுடன் கூடிய 5 இன்ச் கலர்டு டிஎஃப்டி டிஸ்பிளே, உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஆஃப்ரோடு மோட்டார் சைக்கிள்களுக்கு டிமாண்ட் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. ஆஃப் ரோடு பைக்கிங் இளைஞர்கள் மத்தியில் அதிகமாக வளர்கிறது. இதனால் எதிர்காலத்தில் இந்த பைக்கின் விற்பனை பல மடங்கு அதிகமாகும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications








