2023 Suzuki Hayabusa பைக் அறிமுகம்! இந்த விலைக்கு ஒரு எஸ்யூவி காரையே வாங்கிடலாமே!

சுஸூகி நிறுவனம் தனது ஹயபுஸா பைக்கை புதிய பெயிண்ட் ஸ்கீம் மற்றும் அப்டேட் செய்யப்பட்ட இன்ஜின் உடன் 2023 சுஸூகி ஹயபுஸா பைக் ஆக அறிமுகப்படுத்தியுள்ளது. இதை பற்றி விரிவாகக் காணலாம் வாருங்கள்.

ஜப்பானை சேர்ந்த சுஸூகி நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் னது தனது ஹயாபுஸா பைக்கின் 3ம் தலைமுறை பைக்கை அறிமுகப்படுத்தியது. இந்த பைக் கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய அப்டேட்டை அப்பொழுது பெற்றது.

2023 Suzuki Hayabusa பைக் அறிமுகம்! இந்த விலைக்கு ஒரு எஸ்யூவி காரையே வாங்கிடலாமே!

சர்வதேச அரங்கில் அறிமுகமான 2 மாதத்திலேயே இந்த பைக்கை இந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்திவிட்டது. அப்பொழுது இந்த பைக்கிற்கு இந்தியாவில் மிகப்பெரிய அளவில் கிரேஸ் இருந்தது. இந்த பைக் 1340 சிசி கொண்ட 4 ஸ்டோக் ஃப்யூயல் இன்ஜெக்டட் லிக்யூட் கூல்டு டிஓஎச்சி கொண்ட பைக் ஆகும்.

இந்த பைக் இன்-லைன் 4 சிலிண்டர் இன்ஜினை கொண்டது. இது அதிகபட்சமாக 190எச் பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. இந்த பைக் 2 ஸ்பேர் அலுமினியர் ஃபிரேமில் உருவாக்கப்பட்டுள்ளது.

2023 Suzuki Hayabusa launched in India
இந்த பைக் மொத்தம் 1480 மி மீ வீல் வேலஸ் கொண்டது. மொத்தம் 264 கிலோ எடை கொண்டது. இன் முன்பக்க சன்ஸ்பென்சன் பிரம்போ நிறுவனத்தின் ஸ்டைல்மா கேலிபர் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் எல்இடி ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளது.

இதன் மத்தியில் டிஎஃப்டி டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இது போக இந்த பைக்கில் பெரிய எக்ஸாஸ்ட் சிஸ்டம், பெரிய ஃப்யூயல் டேங்க், ஆகியன பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கில் பிரிட்ஜ்ஸ்டோன் பேட்லெக்ஸ் எஸ்22 டயர்கள் வழங்கப்பட்டுள்ளது.

2023 Suzuki Hayabusa launched in India

இந்த பைக்கில் சில எலெக்ட்ரானிக் சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஆக்ஸிஸ் ஐஎம்யூ, 10 லெவல் டிராக்ஷன் கண்ட்ரோல், 10 லெவல் ஆண்டி வீலீ கண்ட்ரோல், 3 லெவல் இன்ஜின் பிரேக் கண்ட்ரோல், ட்ரிபிள் பவர் மோட்கள், லாஞ்ச் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ் சிஸ்டம், ஹில்ஹோல்டு கண்ட்ரோல் உள்ளிட்ட பல ஆப்ஷன்கள் உள்ளன.

2023 சுஸூகி ஹயபுஸா பைக்கை பொருத்தவரை டூயல் டோன் கலர் ஸ்கீம் கொடுக்கப்பட்டுள்ளதுமெயின் பாடியில் முன்பக்க ஏர் இன்டேக், சைடு கவுலிங்ஸ், பின்பக்கம் வேறு வேறு ஷேர்களில் பெயிண்ட் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் கலரை பொருத்தவரை மெட்டாலிக் தண்டர் க்ரே/கேண்டி டார்லிங் ரெட் முதல் கலராவும் மெட்டாலிக் பிளாக்/ கிளாஸ் ஸ்பார்க்கில் பிளாக் இரண்டாவது கலராகவும், பியர்ல் விகோர் ப்ளூ/பியர்ல் பிரில்லியன்ட் ஒயிட் இது மூன்றாவது கலர் ஆப்ஷனாகவும் இருக்கிறது.

இந்த பைக்கின் விலையைப் பொருத்தவரை ரூ16.41 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பைக் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. சமீபத்தில் தான் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் இந்த பைக்கை புக்கிங் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, April 7, 2023, 21:00 [IST]
English summary
2023 suzuki hayabusa launched in india know full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X