2023 முடிவு ஸ்பெஷல்: 2023 ஆம் ஆண்டில் இதுவரை அறிமுகமான சூப்பரான பைக்குகளின் பட்டியல் இதோ!

சென்ற ஆண்டுகளைப் போலவே நடப்பு 2023 ஆம் ஆண்டிலும் அதிக அளவில் புதுமுக இருசக்க வாகனங்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், நாட்டின் இருசக்கர வாகன உலகை அலங்கரிக்கும் வகையில் விற்பனைக்கு வந்த சில முக்கிய பைக் அறிமுகங்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ராயல் என்பீல்டு புல்லட் 350 (Royal Enfield Bullet 350): இந்தியர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக இருந்த பைக்குகளில் இதுவும் ஒன்று ஆகும். கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி அன்றே இந்த பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. அறிமுகமாக அப்போது அந்த பைக்கிற்கு ரூ. 1.74 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

Royal enfield bullet 350

மேலும், இது கிளாசிக் 350-யைக் காட்டிலும் ரூ. 19 ஆயிரம் மலிவு விலை ஆகும். அதேவேளையில், ஹண்டர் 350-யைக் காட்டிலும் தோராயமாக ரூ. 24 ஆயிரம் அதிகம் விலை ஆகும். இந்த பைக்கில் 349 சிசி சிங்கிள் சிலிண்டர் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 20 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 (TVS Apache RTR 310): டிவிஎஸ் நிறுவனத்தின் இந்த தயாரிப்பிற்கும் இந்தியர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்த பைக்கை டிவிஎஸ் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 2.42 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

Tvs apache rtr 310

இது எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த பைக்கில் 312.12 சிசி எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 35.08 பிஎச்பி பவரையும், 28.7 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. அதிக பவரை வெளியேற்றும் பைக் மட்டுமில்லைங்க இது அதிக கவர்ச்சியான பைக்கும் கூட இது.

இந்த பைக்கில் சிறப்பு வசதிகளாக க்ரூஸ் கன்ட்ரோல், டைனமிக் பிரேக் லேம்ப், 5 அங்கு டிஎஃப்டி திரை, கோ-ப்ரோ இணைப்பு வசதி உடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, மியூசிக் கன்ட்ரோல், வாய்ஸ் அசிஸ்ட், ஸ்மார்ட் ஹெல்மெட் டிவைஸ் இணைப்பு மற்றும் நேவிகேஷன் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

Aprilia rs 457

அப்ரில்லா ஆர்எஸ் 457 (Aprilia RS 457): இந்தியர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த பைக் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த பைக் கடந்த 8ஆம் தேதியே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமாக இந்த பைக்கிற்கு ரூ. 4.10 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். அப்ரில்லா நிறுவனத்தின் மிக சிறந்த சிசி திறன் கொண்ட பைக் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த பைக்கில் 457 சிசி திறன் கொண்ட எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 44 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

Honda cb300r

இந்த பைக்கின் டெலிவரி பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. அடுத்த ஆண்டின் மார்ச் மாதத்திலேயே இதன் டெலிவரி பணிகள் தொடங்கப்பட இருப்பதாகக் கூறப்படுகின்றது. அட்ஜஸ்டபிள் டிராக்சன் கன்ட்ரோல், ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் என இந்த பைக்கிலும் ஏகப்பட்ட சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

ஹோண்டா சிபிஆர் (Honda CB300R): ஹோண்டா நிறுவனம் இந்த ஆண்டை அலங்கரிக்கும் விதமாக பலதரப்பட்ட மோட்டார்சைக்கிளை இந்த ஆண்டில் அது விற்பனைக்குக் களமிறக்கியது. அந்தவகையில், பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த சிபி300ஆர் இந்த ஆண்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதன் அறிமுகம் கடந்த அக்டோபர் மாதத்திலேயே அரங்கேறியது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 2.40 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

Honda shine 100

ஹோண்டா ஷைன் 100 (Honda Shine 100): ஹோண்டா நிறுவனத்தின் மற்றுமொரு மிக சிறந்த அறிமுகமாக ஷைன் 100 காட்சியளிக்கின்றது. இந்த பட்டியலின் மலிவு விலை பைக் மாடலாகவும் இது காட்சியளிக்கின்றது. ரூ. 65,012 இதுவே பைக்கின் விலை ஆகும். 98.98 சிசி திறன் கொண்ட மோட்டாரே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் 7.28 பிஎச்பி மற்றும் 8.05 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

இந்த பைக்குகள் தவிர இன்னும் பல மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்தியாவில் இந்த 2023 ஆம் ஆண்டில் அறிமுகமாகி இருக்கின்றன. ஹீரோ கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் 210 (Hero Karizma XMR 210) - விலை ரூ 1.79 லட்சம், பஜாஜ் பல்சர் என்எஸ்200 (Bajaj Pulsar NS200) - ரூ. 1.42 லட்சம் ஆகிய பைக்குகளும் இந்தியாவில் நடப்பாண்டில் அறிமுகமாகி இருக்கின்றன.

Hero karizma xmr

இதுதவிர, ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் (Hero Super Splendor XTEC) - விலை ரூ. 85,149, ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 (Royal Enfield Super Meteor 650) - விலை ரூ. 3.60 லட்சம், டிரையம்ப் டைகர் 900 (Triumph Tiger 900) - விலை ரூ. 13.95 லட்சம் விலைக் கொண்ட இந்த பைக்குகளும் இந்தியாவில் இந்த ஆண்டிலேயே அறிமுகமாகின.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா வாகனங்களுக்கான பரந்து விரிந்த சந்தையாகக் காட்சியளிக்கின்றது. குறிப்பாக, இந்தியாவில் இருசக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனால்தான், பன்னாட்டு நிறுவனங்கள் பல இந்தியாவை மையமாகக் கொண்டு தங்களின் புதிய வாகனங்களை விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டு இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, December 14, 2023, 12:35 [IST]
English summary
2023 year end special major bike launches this year
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X