இப்படியொரு கவாஸாகி பைக்கை வாங்குறது எல்லாம் நமக்கு கனவாகவே போயிடும் போல!! விலை எவ்வளவு தெரியுமா?
2024 கவாஸாகி நிஞ்சா 650 (Kawasaki Ninja 650) மோட்டார்சைக்கிள் மேம்படுத்தப்பட்ட வெர்சனில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. புதிய நிஞ்சா 650 பைக்கை பற்றியும், இந்த பைக்கிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலையையும் இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவிற்கான கவாஸாகி நிஞ்சா 650 மோட்டார்சைக்கிள் அப்டேட் செய்யப்பட்டு உள்ளது. புதிய கவாஸாகி நிஞ்சா 650 பைக்கிற்கான எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.7.16 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது தற்சமயம் விற்பனையில் இருக்கும் நிஞ்சா 650 பைக்கின் ரூ.7.16 லட்சம் என்ற விலையுடன் ஒப்பிடுகையில், வெறும் ரூ.4 ஆயிரம் மட்டுமே அதிகமாகும்.

வெறும் ரூ.4 ஆயிரம் மட்டுமே அதிகரிப்பு என்பது உங்களுக்கு சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். இவ்வளவு குறைவான அளவிலான விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணம், பைக்கின் தோற்றத்தில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை என்பதாகும். பைக்கின் என்ஜின் & எக்ஸாஸ்ட் சிஸ்டம் மட்டுமே லேட்டஸ்ட் மாசு உமிழ்வு தரநிலைகளுக்கு இணக்கமாகவும், ஒபிடி2-க்கு இணக்கமானதாகவும் அப்டேட் செய்யப்பட்டு உள்ளது.
இருப்பினும், புதிய கவாஸாகி நிஞ்சா 650 பைக்கிலும் வழக்கமான 649சிசி, லிக்யுடு-கூல்டு, இணையான-இரட்டை சிலிண்டர் என்ஜின் தான் தொடரப்பட்டு உள்ளது. அதிகப்பட்சமாக 8,000 ஆர்பிஎம்-இல் 67.3 பிஎச்பி மற்றும் 6,700 ஆர்பிஎம்-இல் 64 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் சைன் டிரைவ் வாயிலாக இணைக்கப்படுகிறது.

லேட்டஸ்ட் மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமானதாக அப்டேட் செய்யப்பட்டு உள்ளதால், எத்தனால் 20% கலக்கப்பட்ட பெட்ரோலை இந்த என்ஜின் ஏற்கும். ஏற்கனவே கூறியதுபோல், பைக்கின் தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை என்பதால், வழக்கமான பாடி ஸ்டைலில் தான் 2024 நிஞ்சா 650 பைக்கும் காட்சியளிக்கிறது. பைக்கின் முன்பக்கத்தில் ட்வின்-பேட் எல்இடி ஹெட்லேம்ப்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
ஹெட்லேம்பிற்கு மேலே விண்ட்ஷீல்டு எப்போதும் போல் வழங்கப்பட்டுள்ளது. இந்த கவாஸாகி ஸ்போர்ட்ஸ் பைக்கில் இருக்கைகள் படிக்கட்டு போன்று வழங்கப்படுகின்றன. எக்ஸாஸ்ட் குழாய் பைக்கிற்கு அடியில், அளவில்-சிறியதாக வழங்கப்படுகிறது. 2024 நிஞ்சா 650 பைக்கையும் விற்பனைக்கு வந்த பின் லைம் பச்சை என்ற ஒரேயொரு பெயிண்ட் தேர்வில் மட்டுமே வாங்க முடியும்.

தொழிற்நுட்ப அம்சங்களாக பைக்கில் வண்ண டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் திரை, எல்இடி ஹெட்லைட்கள் & டெயில்லைட்கள், டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் மற்றும் ஸ்மார்ட் போன் இணைப்பு வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இதில் ஸ்மார்ட்போன் இணைப்பு வசதியை கவாஸாகியின் ரைடியோலாஜி மொபைல் செயலி மூலமாக பெறலாம்.
சஸ்பென்ஷனுக்கு பைக்கின் முன்பக்கத்தில் 41மிமீ-இல் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோ-ஷாக்கும் வழக்கம்போல் 2024 நிஞ்சா 650 பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. பிரேக்கிங் பணியை முன் & பின் சக்கரத்தில் டிஸ்க் பிரேக்குகள் கவனித்துக் கொள்கின்றன. அத்துடன், ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் உள்ளது. பைக்கின் 17-இன்ச் அலாய் சக்கரங்களில் ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: 2024 கவாஸாகி நிஞ்சா 650 பைக்கில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரியதாக எந்த அப்டேட்டும் இல்லை. கடந்த ஜூன் மாதம் முதல் அமலுக்கு வந்த பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளின் 2ஆம் கட்ட கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப பைக்கின் என்ஜின் & எக்ஸாஸ்ட் குழாய் அமைப்பு மட்டுமே சற்று திருத்தப்பட்டுள்ளது. இருப்பினும், பைக்கிற்கு குறைந்தப்பட்சம் புதிய பெயிண்ட் தேர்வையாவது கவாஸாகி வழங்கியிருக்கலாம் என்பது எங்களது கருத்து.


Click it and Unblock the Notifications









