இனி யாரும் இதை புள்ளிங்கோ பைக்குனு சொல்ல முடியாது! வேற லெவல்ல அப்டேட் பண்ணிருக்காங்க!
கேடிஎம் நிறுவனம் தனது 390 டியூக் பைக்கை அப்டேட் செய்து அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கை அந்நிறுவனம் இளைஞர்கள் கவரும் வகையில் பல புதிய அம்சங்களை சேர்த்து முற்றிலும் புதிய லுக்கில் வடிவமைத்துள்ளது. இந்த 390 டியூக் பைக் மூன்றாம் தலைமுறை பைக்காக அறிமுகம் ஆகியுள்ளது. இந்த பைக் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.
இந்த பைக்கை ஒட்டிப் பார்க்க கேடிஎம் நிறுவனம் எங்கள் டிரைவ்ஸ்பார்க் குழுவை அழைத்திருந்தது. அதன் பெயரில் எங்கள் குழு நேரடியாக இந்த பைக்கை ஓட்டி பார்க்க சென்றது. இந்த பைக்கை எங்கள் குழு ஓட்டி பார்த்து அதன் அனுபவத்தை வீடியோவாக பகிர்ந்துள்ளோம். அந்த வீடியோவை இத்துடன் கீழே இணைத்துள்ளோம்.
இந்த கேடிஎம் 390 டியூக் பைக்கை பொறுத்தவரை 399 சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்யூட் கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 45.4 எச்பி பவரையும் 39 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்ட என்ஜினாக இருக்கிறது. இந்த இன்ஜினுடன் பை டைரக்ஷன் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இன்ஜினை குளிர்விக்க டூயல் ஃபேன் ரேடியாட்டரும் பொருத்தப்பட்டுள்ளது.

பழைய தலைமுறையிலிருந்த இந்த மூன்றாம் தலைமுறை அப்டேட்டில் பல முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள. முக்கியமாக ஃப்யூயல் டேங்க் ஸ்ப்ரவுட்ஸ், ஹெட்லைட்டில் கூடுதலான பிளாஸ்டிக் பேனல்கள், 183 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், புதிய எக்ஸாஸ்ட் ஆகியன பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த பைக் 168 கிலோவில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக்கில் 15 லிட்டர் பெட்ரோல் டேங்க், பின்பக்கம் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் ஆகிய அம்சங்கள் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








