இனி ரோட்டுல சர்ரு.. புர்ரு...ன்னு போகலாம்! வந்தாச்சு புதிய அப்டேட்டட் 2024 கேடிஎம் 390 டியூக் பைக்!

கேடிஎம் நிறுவனம் தனது 390 டியூக் பைக்கை அப்டேட் செய்து முதன்முறையாக காட்சிப்படுத்தியுள்ளது . இந்த பைக் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவிற்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு கேடிஎம் நிறுவனம் இந்த பைக்கை தற்போது அப்டேட் செய்துள்ளது. இதுகுறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கேடிஎம் நிறுவனம் இந்தியாவில் நீண்ட ஆண்டுகளாக இளைஞர்களுக்கு பிடித்த மாதிரியான பைக்குகளை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருகிறது. இதற்காக இந்நிறுவனம் இந்தியாவில் பஜாஜ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து பஜாஜ் நிறுவனத்தின் ஆலையில் தனது பைக்குகளை தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

ktm 390 duke

கேடிஎம் பைக்குகளுக்கு இந்தியாவில் நல்ல மவுசு இருப்பதால் விற்பனை சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதுவும் குறிப்பாக கேடிஎம் 390 டியூக் ரக பைக் இந்திய இளைஞர்களை அதிகம் கவர்ந்த பைக் என்றே சொல்லலாம். இந்நிலையில் கேடிஎம் நிறுவனம் தனது டியூக் பைக்கை சர்வதேச அளவில் அப்டேட் செய்துள்ளது.

இந்த பைக்கை கேடிஎம் நிறுவனம் 2024 390 டியூக் என்ற பெயரில் தற்போது பொது பார்வைக்காக காட்சிப்படுத்தியுள்ளது. இந்த பைக்கில் இதுவரை இல்லாத அளவிற்கு மிக அதிகமான அப்டேட்கள் எல்லாம் கொண்டுவரப்பட்டுள்ளன. முக்கியமாக இதன் லுக் முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பார்க்கவே வித்தியாசமான லுக்கில் இருக்கிறது.

ktm 390 duke

2024 கேடிஎம் 390 டியூக் பைக்கை பொறுத்தவரை முன்பு இருந்த மாடலில் உள்ள ஹெட்லைட்டை விட இதில் பெரிய எல்இடி லைட் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக பூமராங் வடிவிலான எல்இடி டே டைம் ரன்னிங் லைட்டும் வழங்கப்பட்டுள்ளது. இது பைக்குக்கு ஒரு மஸ்குலரான லுக்கை கொடுக்கிறது. இதுபோக இந்த பைக்கின் பெட்ரோல் டேங்க் வடிவமைப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய டிசைன் இந்த பைக்கிற்கு ஒரு பிரஷ்ஷான லுக்கை கொடுக்கிறது.

அடுத்த முக்கியமான அப்டேட் என்றால் இந்த பைக்கில் உள்ள பவுடர் கோட்டட் ஸ்டீல் பிரேம் தான். இது வழக்கமாக கேடிஎம் நிறுவனத்தின் சிக்னேச்சர் கலரான ஆரஞ்சு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. இது போக புதிய ஸ்லிட் சீட் மற்றும் கிராப் ரெயில்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய நீலவாக்கிலான எல்இடி டெயில் லைட், ஸ்லீக்கான எல்இடி இண்டிகேட்டர், பின்பக்கம் காம்பேக்ட்டான ஃபாக்ஸ் இன்டெக் ஆகியன இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளது.

ktm 390 duke

இந்த பைக்கை பார்க்கும் போது பழைய பைக்கை விட சற்று பெரிதாக இருக்கும் என தெரிகிறது. இந்த பைக் குறித்த அளவுகளின் விபரங்களை கேடிஎம் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. அதனால் இது குறித்து உறுதியாக எந்த தகவலையும் கூற முடியாது. இதன் முன் பக்கம் அகலமான சிங்கிள் பீஸ் ஹேண்டில் பார் வழங்கப்பட்டுள்ளது.

இதன் இன்ஜினை பொறுத்தவரை 399 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்யூட் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகமான பவரையும், டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்ட ஸ்லீப்பர் மற்றும் அசிஸ்டன்ட் கிளட்ச் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கியர் மாற்றும் இடமும் சற்று வித்தியாசமாக மாற்றி அமைக்கப்பட்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் ஏகப்பட்ட எலக்ட்ரானிக் அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அதன்படி லாஞ்ச் கண்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ், குவிக் ஷிஃப்ட் ஆகிய அம்சங்கள் முக்கியமாக இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த பைக்கில் மூன்று விதமான ரைடு மோடுகள் உள்ளன. ஸ்ட்ரீட், ரெயின் மற்றும் டிராக் ஆகிய மோடுகளில் நீங்கள் பயணிக்க முடியும்.

இதுபோக இந்த பைக்கில் ப்ளூ டூத் கனெக்டிவிட்டி ஆப்ஷனும் இருக்கிறது. இந்த கனெக்டிவிட்டி ஆப்ஷன் மூலம் நீங்கள் நேவிகேஷன் வசதியை பெற்றுக் கொள்ள முடியும். இதற்காக 5இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. அதிலுள்ள கிராபிக்ஸ்களும் புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இந்த பைக்கின் சஸ்பென்ஷனை பொருத்தவரை முன்பக்கம் 43மிமீ அப்சைட் டவுன் போக் வழங்கப்பட்டுள்ளது. இதில் கம்ப்ரஷன் மற்றும் ரீபவுண்டுக்கான அட்ஜஸ்ட்மென்ட் செய்யும் வசதி உள்ளது.

இந்தியாவில் இந்த பைக் அறிமுகப்படுத்தப்படும் போது இந்த அட்ஜஸ்டபிள் வசதி கொண்ட முன்பக்க ஃபோர்க் இருக்குமா இல்லையா என்ற விபரம் இதுவரை தெரியவில்லை. இதன் பிரேக்கிங் அம்சங்களை பொருத்தவரை முன்பக்கம் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும் பின்பக்கம் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதில் டூயல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த பைக் முன்பக்கம் 17 இன்ச் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. இதன் தயாராக மைக்லாரன் என்ற குறைந்த எடை கொண்ட ரப்பர் டயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது விற்பனையாகி வரும் மாடலை ஒப்பிடும்போது அதைவிட புதிய மாடல் சற்று பிரீமியமாக தெரிகிறது. இந்த 2024 கேடிஎம் 390 டியூக் பைக்கை பொறுத்தவரை இந்தியாவில் தான் உலகிலேயே முதல் மார்க்கெட்டாக அறிமுகமாக போகிறது.

இந்த 2024 390 டியூக் அப்டேட்டட் பைக் இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை குறித்த விபரங்கள் இதன் அறிமுகத்தின் போது தான் தெரியவரும். தற்போது விலை குறித்து எந்த விவரமும் கேடிஎம் நிறுவனம் வெளியிடவில்லை. இந்த பைக்கில் உள்ள அம்சங்கள் மற்றும் லுக்கை மட்டுமே பொதுப்பார்வைக்காக காட்சிப்படுத்தியுள்ளது. முழுமையான விபரங்கள் அடுத்தடுத்த மாதங்களில் தெரியவரும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 22, 2023, 17:00 [IST]
English summary
2024 ktm 390 duke unveiled most extensive update yet
மேலும்... #கேடிஎம் #ktm
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X