இந்த பைக்கை டிரையம்ப் இந்தியாவுக்கு கொண்டு வரங்களா? பெயருக்கு ஏத்த மாதிரி புலி போல இருக்கும்!
டிரையம்ப் நிறுவனம் கோவாவில் நடந்து வரும் இந்தியா பைக் வீக் நிகழ்வில் தனது டைகர் 900 ஜிடி மற்றும் டைகர் 900 ராலி ப்ரோ அட்வெஞச்சர் பைக்குகளை காட்சிப்படுத்தியுள்ளது. இந்த பைக்கில் ஏற்கனவே சர்வதேச மார்க்கெட்டில் விற்பனையாகி வரும் நிலையில் இந்தியாவில் இந்த பைக்குகள் களமிறங்க தற்போது தயாராகி வருகின்றன. இந்த பைக்குகள் குறித்த பரபரப்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதை விரிவாக காணலாம் வாருங்கள்.
டிரையம்ப் நிறுவனம் கோவாவில் தற்போது நடந்து வரும் இந்தியா பைக் வீக் நிகழ்ச்சியில் ஏகப்பட்ட பைக்குகளை காட்சிப்படுத்தியும் அறிமுகப்படுத்தியும் வருகின்றன. அதன்படி இந்நிறுவனம் எட்டு விதமான பைக்குகளை இன்று அறிமுகப்படுத்திய நிலையில் தற்போது இந்தியாவுக்கு வரப்போகும் டைகர் 900 ஜிடி மற்றும் டைகர் 900 ப்ரோ அட்வெஞ்சர் டூவீலர் ஆகிய பைக்குகளை காட்சிப்படுத்தியுள்ளது.

கடந்த அக்டோபர் மாதமே இந்த பைக்குகளை டிரையம் நிறுவனம் இந்தியாவிற்கு கொண்டு வரப் போவதாக அறிவித்திருந்தது. அதன்படி தற்போது இந்த பைக்குகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த பைக்குகளில் விலை விபரம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் இந்த பைக் அடுத்த ஆண்டு அதாவது 2024 மார்ச் மாதம் டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவிற்கு வரும் இந்த டைகர் 900 ஜிடி மற்றும் டைகர் 900 ஆகிய பைக்குகள் பல்வேறு விதமான அப்டேட்களை பெற உள்ளன. இதன் இன்ஜின் முதல் மெக்கானிக்கல் வரை ஏகப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இதனால் பழைய வெர்ஷனிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இந்தியாவில் அறிமுகம் ஆகும் பைக் இருக்கிறது.

டிரையம்ப் டைகர் 900 பைக்கை பொறுத்தவரை புதிய ஸ்பிலிட் எல்இடி ஹெட்லைட் டிரான்ஸ்பரன்ட் வைசர் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கில் அப்ஸ்வர்ட் எக்ஸாஸ்ட் பொருத்தப்பட்டுள்ளது. நீளமான சிங்கிள் சீடாக லீக்கான எல்இடி லைட் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில் லுக் தற்போது சர்வதேச மார்கெட்டில் விற்பனையாகும் பைக்கிலிருந்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
டிரையம்ப் டைகர் 900 ஜிடி பைக்கை பொறுத்தவரை சாலையில் பயன்படுத்தக்கூடிய வகையிலாக உருவாக்கப்பட்டுள்ளது. டைகர் 900 ப்ரோ பைக்கை பொறுத்தவரை ஆஃப் ரோடு பைக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்குகளின் இன்ஜினை பொருத்தவரை 888 சிசி இன் லைன் 3 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இது 107 பிஎச்பி பவரை அதிகபட்சமாக 9500 ஆர்பிஎம்மிலும் 90 என்எம் டார்க் திறனை அதிகபட்சமாக 6850 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளன. பழைய பைக்கிலிருந்து இந்த பைக்கின் உயரம் 10மிமீ வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இதுபோக இந்த பைக்கில் புதிதாக ஏழையின் டிஎஃப்டி ஸ்க்ரீன் வழங்கப்பட்டுள்ளன. டைகர் 1200 பைக்கில் உள்ள இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீனை போல இந்த பைக்கிலும் வழங்கப்பட்டுள்ளது. இது ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆப்ஷன் உடன் விற்பனைக்கு வருகிறது. இந்த பைக்கின் விலையை டிரையம்ப் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
ஆனால் யூகத்தின் அடிப்படையில் சமூகவலைதளங்களில் ரூபாய் 19.95 லட்சம் முதல் 14.15 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வரும் என்றும் டைகர் 900 பைக்கை பொறுத்தவரை 15.95 லட்சம் முதல் 16.25 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செக்மெண்ட் பைக்குக்கு இவ்வளவு விலை நிச்சயம் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த டிரையம்ப் டைகர் 900 பைக் மார்க்கெட்டிற்கு வரும்போது டுகாட்டி டெசர்ட் எக்ஸ், மல்டிஸ்டார்டா வி2, ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின், பிஎம்டபிள்யூ எஃப் 850 ஜிஎஸ் ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் விற்பனைக்கு வரும் போது மார்கெட்டில் என்ன விதமான மாற்றம் ஏற்படுகிறது என தெரியவரும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிரையம்ப் நிறுவனத்தின் இந்த டைகர் பைக் அட்வெஞ்ச்சர் மற்றும் ஆப்-ரோடு ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பக்கம் 800 சிசிக்கும் அதிகமான செக்மெண்டில் உள்ள பைக்குகளை விரும்பும் வாடிக்கையாளர்கள் இந்த பைக்குகளை விரும்பி வாங்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இன்னும் 3 மாதத்திற்குள் இந்த பைக் விற்பனைக்கு வரும் என்பதால் பலர் இப்பொழுதே இந்த பைக்கை வாங்க தயாராகி விட்டனர்.


Click it and Unblock the Notifications









