புல்லட்டை தூர விடுங்க! 2024ல் ராயல் என்ஃபீல்டு என்ன பைக்கை எல்லாம் அறிமுகப்படுத்தப்போறாங்க தெரியுமா?
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 2024-ம் ஆண்டு பிறந்த 4 புதிய பைக்குகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதில் ஏற்கனவே ராயல் என்பீல்டு ஷாட் கன் 650 பைக் விற்பனைக்கு வருவது உறுதியான நிலையில் மற்ற மூன்று பைக்குகள் என்னென்ன? அதில் என்னென்ன அம்சங்களை நாம் எதிர்பார்க்கலாம்? என்ற விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.
ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650: ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சமீபத்தில் நடந்த மோட்டோவெர்ஸ் நிகழ்ச்சியில் தனது ஷாட் கன் 650 பைக்கை அறிமுகப்படுத்தியது. இந்த பைக் சூப்பர் மீட்டியோர் 650 பைக்கை விட குறைவான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கின் அதிகாரப்பூர்வ அறிமுகம் வரும் ஜனவரி மாதம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பைக்கின் அம்சங்களை பொருத்தவரை முன்பக்கம் 18 இன்ச் வீல் பின்பக்கம் 17 இன்ச் வீல் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் ஹேண்டில் பார் ராயல் என்ஃபீல்டு பைக்குகளிலேயே சற்று வித்தியாசமான ஹேண்டில் பார் கொண்ட பைக்காக இருக்கிறது. இதன் கால் வைக்கும் பகுதி மற்றும் சீட்டு பகுதியும் முற்றிலும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் முற்றிலுமாக புதிய சப் பிரேமில் புதிய பெட்ரோல் டேங்க் டிசைனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 450: ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது 450சிசி பைக்குகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி தனது புதிய ரோடு ஸ்டார் பைக்கான ஹண்டர் 450 பைக்கை 2024-ம் ஆண்டு களமிறக்க முடிவு செய்துள்ளது. இது நேரடியாக மார்க்கெட்டில் டிரையம்ப் ஸ்பீடு 400 பைகிற்கு எதிராக களமிறங்க உள்ளது.

இந்த ஹண்டர் 450 பைக்கின் இன்ஜினை பொருத்தவரை 452 சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்யூட் கூல்டு இன்ஜின் கொண்டதாக இருக்கிறது. இதன் பவரை பொருத்தவரை 40.02 பிஎஸ் பவரும் 40 என்எம் டார்க் திறனையும் கொண்ட பைக்காக இது உருவாக்கப்படுகிறது. கிட்டத்தட்ட ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அட்வெஞ்சர் ரக பைக்குகளில் இருக்கும் இன்ஜின் தான் இந்த பைக்கிலும் பொருத்தப்பட உள்ளது.
ராயல் என்ஃபீல்டு ஸ்கிரம்லர் 650: ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது ஸ்கிரம்லர் 650 பைக்கை இந்தியாவில் பல்வேறு இடங்களில் சோதனை செய்து வருவதை நம்மால் காண முடிகிறது. இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் இந்த பைக் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பைக்கில் ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன. முக்கியமாக பிளாக் பேட்டர்ன் கொண்ட டயர்கள் இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட பைக்காக இது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பைக் நீண்ட தூர பயணத்திற்காக பெரிய வீல் பேஸ் கொண்ட பைக்காக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ஒரே எக்ஸாஸ்ட் சிஸ்டத்தில் இரண்டு எக்ஸாஸ்ட்கள் கொண்ட பைக்காக இருக்கிறது. இதன் இன்ஜினை பொருத்தவரை 648 சிசி பேரலல் ட்வின் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கும் 2024 ஆம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராயல் என்ஃபீல்டு பாபர் 350: ராயல் என்பீல்டு நிறுவனம் கிளாசிக் 350 பைக்கை அடிப்படையாகக் கொண்டு புதிதாக பாபர் ஸ்டைலில் ஒரு 350 சிசி இன்ஜின் கொண்ட பைக்கை உருவாக்க திட்டமிட்டு வருகிறது. இந்த பைக்கில் பல முக்கியமான அம்சங்கள் இடம் பெற உள்ளன. இதன் டயரை பொறுத்தவரை ஒயிட் வால் கொண்ட டயர்கள் பொருத்தப்பட உள்ளன. உயரமான ஹேண்டில் பார்கள் இதில் அமைக்கப்பட உள்ளன.
இது ஒரு பாபர் ஸ்டைல் பைக் என்பதால் இதன் பின்பக்க சீட்டை கழட்டி மாட்டும் வகையில் இது உருவாக்கப்பட உள்ளது. இந்த பைக் 2024-ம் ஆண்டு முதல் பாதியிலேயே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மார்க்கெட்டில் உள்ள ஜாவா42 பாபர், ஜாவா பெராக் பைக்குக்கு போட்டியாக விற்பனைக்கு வரவுள்ளது. இதன் இன்ஜினை பொருத்தவரை 349சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் மற்றும் ஆயில் கூல்டு இன்ஜினாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 2024-ம் ஆண்டு நான்கு புதிய பைக்குகளை களம் இறக்க திட்டமிட்டுள்ளது. இதனால் நிறுவனத்தின் பெயரும் புகழும் 2024-ம் ஆண்டு மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இந்த பைக்குகளுக்கு எல்லாம் அதன் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications









