சிங்கிள் சார்ஜில் 300 கிமீ ஓடும்! இந்த ரேட்டுக்கு எப்படி தர்றாங்க! ரூம் போட்டு யோசிக்கும் போட்டி நிறுவனங்கள்!

மை இவி ஸ்டோர் (MY EV Store) நிறுவனம், புத்தம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை இந்திய சந்தையில் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஐஎம்இ ரேபிட் (IME Rapid) என்ற பெயரில், இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் களமிறக்கப்பட்டுள்ளது.

ஐஎம்இ ரேபிட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மொத்தம் 3 வேரியண்ட்களில் (Variants) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவற்றில் முறையே 60V 26 AH, 60V 52 AH மற்றும் 60V 72 AH பேட்டரிகள் (Battery) பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் ரேஞ்ச் (Range), குறிப்பாக டாப் வேரியண்ட்டின் ரேஞ்ச் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது.

IME Rapid

இதில் முதல் வேரியண்ட்டின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 100 கிலோ மீட்டர்கள் தொலைவும், இரண்டாவது வேரியண்ட்டின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 200 கிலோ மீட்டர்கள் தொலைவும் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மூன்றாவது வேரியண்ட்டின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 300 கிலோ மீட்டர்கள் பயணிக்கலாமாம்!

ரேஞ்ச் மட்டுமல்லாது, செயல்திறனிலும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அசத்துகிறது. ஏனெனில் இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 80 கிலோ மீட்டர்கள் என கூறியுள்ளனர். இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் வாய்ந்த ஐஎம்இ ரேபிட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை (Price) 99 ஆயிரம் ரூபாய் ஆகும்.

IME Rapid Electric Scooter

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 1.48 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆரம்பத்தில் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் நகரில் மட்டுமே ஐஎம்இ ரேபிட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கும். அதன்பின் படிப்படியாக கர்நாடக மாநிலம் முழுமைக்கும் விரிவுபடுத்தப்படும்.

அதன்பின் இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை விரிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான ஸ்பேர் பார்ட்ஸ்கள் போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்யும் பணிகளில் மை இவி ஸ்டோர் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

எனவே சர்வீஸ் செய்வது போன்ற விஷயங்கள், வாடிக்கையாளர்களுக்கு பிரச்னையாக இருக்காது என எதிர்பார்க்கலாம். அத்துடன் வாடிக்கையாளர்கள் எளிதாக லோன் பெற ஏதுவாக, கோடக் மஹிந்திரா, ஸ்ரீராம் பைனான்ஸ் மற்றும் மணப்புரம் பைனான்ஸ் போன்ற நிதி நிறுவனங்களுடன் மை இவி ஸ்டோர் கூட்டணி அமைத்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற தற்போது தயக்கம் காட்டி கொண்டிருப்பதற்கு மிக முக்கியமான காரணமே குறைவான ரேஞ்ச்தான். ஆனால் ஐஎம்இ ரேபிட் எலெக்ட்ரின் ஸ்கூட்டரின் ரேஞ்ச் 300 கிலோ மீட்டர்கள் என்பது உண்மையிலேயே மிகவும் வியப்பாக இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 6, 2023, 19:39 [IST]
English summary
300 km range electric scooter launched in india check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+