காலேஜ் பசங்களுக்கு ஏத்த டாப் 5 பைக் மாடல்கள்... ரொம்ப ஸ்டைலான வண்டி வேணுமா இதுல ஒன்ன சூஸ் பண்ணுங்க!

பள்ளி பருவத்தை முடிக்கும்போதே, பள்ளி படிப்புடன் சேர்ந்து சில சாங்கியம், சிம்பிரதாயங்களும் ஒழிந்துவிடுகின்றன. குறிப்பாக, "நீ சின்ன பையன் வண்டி எல்லாம் ஓட்டக் கூடாது" என்பது போன்ற தடைகள் எல்லாம் தாமாக நீங்கிவிடும். ஓர் இளைஞன் கல்லுரி பருவத்தை எட்டும்போது அவன் அல்லது அவள் 18 வயதை பூர்த்தி செய்து விடுகின்றனர். இது லைசென்ஸ் பெற ஏதுவான வயதாகும்.

லைசென்ஸை பெற்று விட்டால் டூ-வீலரை ஓட்டவும் எந்த சிக்கலும் இருக்காது. மேலும், காலேஜ்க்கும் தாராளமாக இருசக்கர வாகனத்தில் சென்று வரலாம். "ஆனா என் கிட்ட வண்டி இல்ல. இனிதான் காலேஜ் போறதுக்காக புதுசா வண்டி வாங்க போறோம்" அப்படியாக திட்டமிட்டிருப்பவராக நீங்கள் இருந்தால், உங்களுக்கான டாப் 5 பைக் பரிந்துரைகளையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம்.

Perfect Bikes For College Students

உங்களுக்கு பிடித்த டூ-வீலர் ஏதேனும் இந்த லிஸ்டில் இருந்தால், தாராளமாக அதை நீங்கள் வாங்கலாம். ஐந்து, தினசரி காலேஜ்க்கு குயிக்காக சென்று விட்டு வீடு திரும்ப ஏதுவான மோட்டார்சைக்கிள்களின் லிஸ்டையே வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் இது பற்றிய விரிவான பதிவிற்குள் போகலாம்.

கேடிஎம் 200 ட்யூக் பைக்: காலேஜ் சென்று வர சிறப்பான பைக்குகளில் இதுவும் ஒன்று. ஆனால், பல பெற்றோர்கள் இதை வாங்கி தர மாட்டார்கள். இதை வைத்து சீன் போடு நினைத்துக் கொண்டு பலர் கீழே விழுந்து கை, கால்களை உடைத்துக் கொள்கின்றனர்.

Perfect Bikes For College Students

ஆகையால், இந்த பைக்கை நீங்கள் தேர்வு செய்தால் முதலில் உங்களின் பெற்றோர்களின் அனுமதியை வாங்கிக் கொள்ளுங்கள். கொஞ்சம் முறிக்கினாலே அதிகம் சீறக் கூடிய மோட்டார்சைக்கிள் ஆகும். ஒரு வேளை இந்த மோட்டார்சைக்கிளை உங்கள் பெற்றோர்கள் வாங்கிக் கொடுத்துவிட்டால், அவர்களின் உணர்வை மதித்து பொறுமையாக சென்று, பொறுமையாக வீடு திரும்புவதை வாடிக்கையாக வைத்துக் கொள்ளுங்கள்.

இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் வெறும் சிம்பிளாக சீன் போட மட்டுமே பயன்படுத்துங்கள். மாறாக, ரேஸ் டிரைவ் எல்லாம் செய்வதை தவிர்த்துவிடுங்கள். இவ்வாறு செய்வதனால் பலத்த காயங்கள் ஏற்படுவதோடு, போலீஸாரின் அபராதத்தைப் பெற வேண்டியிருக்கும். இதைக் கவனத்தில் கொண்டு எந்தவொரு டூ-வீலராக இருந்தாலும் பாதுகாப்புடன் பயணிப்பதை வாடிக்கையாக்கிக் கொள்ளுங்கள்.

கேடிஎம் 200 ட்யூக் பைக்கின் விலை ரூ. 1.91 லட்சம் ஆகும். இந்த பைக்கில் 199 சிசி லிக்யூடு கூல்டு மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 25 பிஎஸ் பவரையும், 19.2 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

Perfect Bikes For College Students

யமஹா ஆர்15 வி4: இளைஞர்களுக்கு மட்டுமல்ல பல இளம் பெண்களுக்கும் பிடித்தமான இருசக்கர வாகன மாடல் இதுவாகும். இதனால்தான் இந்த டூ-வீலரை சாலைகளில் நம்மால் அதிகளவில் பார்க்க முடிகின்றது. இது ஓர் ஆரம்ப நிலை ஸ்போர்ட் பைக்காகும். ஆகையால், இந்த பைக்கிலும் பயணிக்கும்போது சற்று அதிகம் கவனம் தேவை.

இந்த பைக்கில் பாதுகாப்பான பயணத்திற்காக டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் டிராக்சன் கன்ட்ரோல் என எக்கசக்க அம்சங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இருந்தாலும், இந்த பைக்கில் காலேஜ் சென்று வரும்போது ஹெல்மெட்டை அணிந்து மிக பாதுகாப்பாக சென்று வருவதே நல்லதே. இந்த பைக்கின் விலை ரூ. 1.80 லட்சம் ஆகும்.

சுஸுகி ஜிக்ஸெர் 250: இந்த பைக்கில் 26.5 பிஎஸ் பவரையும், 22.2 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்ட மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுவும், அதிக பவர்ஃபுல்லான பைக்காகும். மிக சிறந்த திறன் வெளிப்பாட்டை இதில் பெற்றுக் கொள்ள முடியும். எனவேதான் இதனை காலேஜ்க்கு ஏற்ற பைக் என நாங்கள் கூறுகின்றோம். அதேவேளையில், சிறந்த கம்யூட்டர் ரக பைக்கும் இதுவாகும். இந்த பைக் இந்தியாவில் ரூ. 1.95 லட்சத்திற்கு விற்கப்படுகின்றது.

Perfect Bikes For College Students

யமஹா எம்டி 15 வி2: இதன் விலை ரூ.1.68 லட்சம் ஆகும். இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிகவும் கவர்ச்சிகரமான பைக்குகளில் இதுவும் ஒன்றாகும். இந்த பைக்கில் 18.4 பிஎஸ் பவரையும், 14.1 என்எம் டார்க்கையும் வெளியேற்றக் கூடிய 155 சிசி மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஆர்15 வி4 பைக்கிலும் இதே மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

ராயல் என்பீல்டு ஹண்டர் 350: அதிக சத்தம், அதிர்வு ஆகியவற்றைத் தராத ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிளாக இது இருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல சிறப்புகளை இந்த பைக் தாங்கி இருக்கின்றது. இதன் விளைவாகவே இந்த பைக்கிற்கு இந்தியர்கள் மத்தியில் அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. காலேஜ் மட்டுமல்ல பிற தினசரி பயன்பாட்டிற்கும் உகந்த பைக் மாடல் இதுவாகும்.

Perfect Bikes For College Students

இந்தியாவில் இந்த பைக் ரூ. 1.71 லட்சத்திற்கு விற்கப்படுகின்றது. இந்த பைக்கில் நிறுவனம் 349 சிசி சிங்கிள் சிலிண்டர் ஓஎச்சி ஃபூயவல் இன்ஜெக்டட் ஏர் மற்றும் ஆயில் கூல்டு மோட்டாரையே பயன்படுத்தி இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 20 எச்பி பவரையும், 27 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மோட்டாருடன் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க கருத்து

மேலே பார்த்த அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இந்த பைக்குகளை வாங்குவது முக்கியமல்ல, பாதுகாப்பாக காலேஜ் சென்றுவிட்டு வீடு திரும்புவதே முக்கியமானது. அதேவேளையில், இந்த பைக்குகளை வாங்கி தர உங்கள் அப்பா, அம்மா தயக்கம் காட்டலாம். இது நம்முடைய பாதுகாப்பாகதான் என்பதை கருத்தில் கொண்டு அவர்களை எந்த வகையிலும் பைக் வேண்டும் என கட்டாயப்படுத்த வேண்டாம் என்பதே எங்களின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Friday, April 7, 2023, 20:09 [IST]
English summary
5 best bikes college students
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X