ரூ.1 லட்சம் மட்டும்தான் கையில் இருக்கா? இதில் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கி போடலாம்!!

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. எலக்ட்ரிக் வாகனங்களில் குறிப்பாக, எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களையே நிறைய பேர் வாங்குகின்றனர். அதாவது, நெடுந்தொலைவிற்கு கொண்டுச்செல்ல தேவைப்படாத ஸ்கூட்டர்களையே எலக்ட்ரிக் மோட்டார் உடன் வாங்க நிறைய பேர் விரும்புகின்றனர்.

ஏனெனில், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வீட்டிலேயே சார்ஜ் செய்துக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி, எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பராமரிப்பு செலவும் பெரியதாக இருக்காது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அதிக விலையில் மட்டுமே கிடைக்கும் என ஒரு தவறான பேச்சும் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், அப்படியில்லை. ரூ.1 லட்சத்திற்குள் எக்ஸ்-ஷோரூம் விலையை கொண்ட 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இங்கே பார்க்கலாம்.

electric scooters under rs.1 lakh

ஏசர் முவி 125 4ஜி (ACER MUVI 125 4G): இபைக்கோ நிறுவனம் டிசைன் செய்து உருவாக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர். அதிகப்பட்சமாக மணிக்கு 75kmph வேகத்தில் இயங்கக்கூடிய இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 80கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்பவர்களுக்கு ஏற்றதாக இருப்பது மட்டுமின்றி, இந்த ஸ்கூட்டரை வணிக பயன்பாடுகளுக்கு ஏற்பவும் கஸ்டமைஸ் செய்துக் கொள்ளலாம். இதன் விலை ரூ.99,999.

electric scooters under rs.1 lakh

ஓலா எஸ்1 எக்ஸ் (OLA S1 X): இந்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அறிமுகமே தேவையில்லை. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர். இரு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப்-ஸ்பீடு 90kmph ஆகும். இதன் பேட்டரியை ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 151கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம்.

electric scooters under rs.1 lakh

ஒகினவா பிரைஸ் புரோ (OKINAWA PraisePro): 81கிமீ ரேஞ்சையும், 56kmph டாப்-ஸ்பீடையும் கொண்ட இந்தியாவின் மலிவான எலக்ட்ரிக் ஸ்கூட்டர். இந்த ஸ்கூட்டரில் இருந்து 2.08kWh பேட்டரியை தனியாக வெளியே எடுக்கலாம். ஒகினவாவின் அட்வான்ஸ்டு தொழிற்நுட்பங்களை கொண்ட இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.99,645 ஆகும்.

electric scooters under rs.1 lakh

கைனெடிக் க்ரீன் ஜூலு (Kinetic Green Zulu): மார்க்கெட்டில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர். சுமார் 104கிமீ ரேஞ்சை இந்த ஸ்கூட்டர் வழங்கக்கூடியதாக கைனெடிக் க்ரீன் நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த ஸ்கூட்டரின் சார்ஜிங்கும் வேகமாக இருக்கும் என அறிமுகத்தின்போது கைனெடிக் க்ரீன் தெரிவித்து இருந்தது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.94,990 ஆகும்.

electric scooters under rs.1 lakh

ஹீரோ எலக்ட்ரிக் என்.ஒய்.எக்ஸ் (Hero Electric NYX): ரூ.73,590-இல் இருந்தே எக்ஸ்-ஷோரூம் விலைகளை கொண்ட விலை குறைவான எலக்ட்ரிக் ஸ்கூட்டர். முழுவதுமாக பேட்டரி சார்ஜை நிரப்பினால் அதிகப்பட்சமாக ஏறக்குறைய 100கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். ஆனால், இந்த இ-ஸ்கூட்டரின் டாப்-ஸ்பீடு 42kmph மட்டுமே ஆகும். இருப்பினும், சிட்டியில் ஓட்டுவதற்கு இந்த வேகமே போதுமானது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் இந்த 2023ஆம் வருடத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. கைனெடிக் க்ரீன் ஜூலு போன்ற ஸ்கூட்டர்கள் மிக சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன என்பதை ஏற்கனவே கூறிவிட்டோம். எலக்ட்ரிக் வாகனங்கள் மீது இன்னமும் நம்பிக்கை இல்லாதவர்கள், பெரிய தொகையை செலவு செய்யாமல், இவ்வாறான மலிவான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுள் ஒன்றை வாங்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, December 29, 2023, 22:47 [IST]
English summary
5 electric scooters in india under rs 1 lakh check full list here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X