இந்த 2023இல் நிறைய பேர் வெறித்தனமா எதிர்பார்த்த 5 பைக்குகள்!! ஹீரோவில் இருந்து ஹார்லி-டேவிட்சன் வரையில்!

இந்தியா, 2-வீலர்களுக்கான சந்தை என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. தற்போதைய மாடர்ன் காலக்கட்டத்தில் ஸ்கூட்டர்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனைக்குவர ஆரம்பித்துவிட்டாலும், பைக்குகளை ஓட்ட விரும்புவோர் ஒருபக்கம் இருக்கத்தான் செய்கின்றனர். இதனாலேயே ஒவ்வொரு வருடமும் கணிசமான எண்ணிக்கையில் புதிய பைக்குகள் அறிமுகமாகி விடுகின்றன.

அல்லது, குறைந்தப்பட்சம் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் பைக்குகள் அப்டேட் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்படுகின்றன. இந்த வகையில், இந்த 2023ஆம் வருடத்திலும் ஹீரோ, ராயல் என்ஃபீல்டு என பல முன்னணி 2-வீலர் நிறுவனங்களில் இருந்து மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் சிறந்த 5 பைக்குகளை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

5 bike launches in 2023

கேடிஎம் 390 ட்யூக் (KTM 390 Duke): இந்தியாவில் இந்த 2023ஆம் வருடத்தில் கேடிஎம் நிறுவனம் அதன் புதிய ட்யூக் பைக்காக 390 ட்யூக்கை அறிமுகப்படுத்தியது. இது 390 ட்யூக்கின் நியூ ஜென்ரேஷனாக அறிமுகம் செய்யப்பட்டது. புதிய கேடிஎம் 390 ட்யூக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3.10 இலட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்த பைக்கின் முந்தைய விலையை காட்டிலும் ரூ.12,000 அதிகமாகும்.

5 bike launches in 2023

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 (Royal Enfield 450): பிரபலமான ஹிமாலயன் பைக்கின் அடுத்த பரிணாம வளர்ச்சியாக ஹிமாலயன் 450 பைக்கை சில மாதங்களுக்கு முன் ராயல் என்ஃபீல்டு அறிமுகப்படுத்தியது. அளவில் பெரிய 452சிசி லிக்யுடு-கூல்டு என்ஜின் மட்டுமின்றி, தோற்றத்திலும் ஹிமாலயன் 450 மெருக்கேற்றப்பட்டதாக உள்ளது. இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.2.69 இலட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

5 bike launches in 2023

டிரையம்ப் ஸ்பீடு 400 & ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் (Triumph Speed 400 & Scrambler 400X): பஜாஜ் ஆட்டோவின் கீழ் இந்தியாவில் செயல்படும் டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்திய விலை குறைவான பைக்குகள் இவை ஆகும். இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.2.33 இலட்சத்தில் இருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த இரு பைக்குகளிலும் 398சிசி லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது.

5 bike launches in 2023

ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 (Harley-Davidson X440): விலை குறைவான ஹார்லி-டேவிட்சன் பைக் என்பதினாலேயே மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளான பைக். ஹீரோ மோட்டோகார்ப் உடன் இணைந்து தயாரித்து இந்த 2023இல் ஹார்லி-டேவிட்சன் அறிமுகப்படுத்தியது. இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.2.29 இலட்சத்தில் இருந்து உள்ளன. இந்த பைக்கில் 440சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது.

5 bike launches in 2023

ஹீரோ கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் (Hero Karizma XMR): பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் பைக்கை இந்த வருடத்தில் ஹீரோ நிறுவனம் அறிமுகப்படுத்தியது. புதிய கரீஸ்மாவின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.80 இலட்சத்தில் இருந்து துவங்குகின்றன. இந்த பைக்கில் 210சிசி சிங்கிள்-சிலிண்டர் DAHC, லிக்யுடு-கூல்டு என்ஜின் உடன் ஸ்லிப் & அசிஸ்ட் க்ளட்ச் இணைக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த 5 பைக்குகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான தோற்றத்திலும், ஒவ்வொரு விதமான பயன்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடியவைகளாகவும் உள்ளன. இவை மட்டும் தான் இந்த 2023ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டவையா? என்றால் இந்த லிஸ்ட் இன்னும் பெரியது ஆகும். அவற்றுள் சிறந்த 5 மோட்டார்சைக்கிள்களையே இந்த செய்தியில் பார்த்துள்ளோம்.

More from DriveSpark

Article Published On: Thursday, December 28, 2023, 23:07 [IST]
English summary
5 most anticipated bike launches in this 2023 in india check full list here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X