எல்லாரும் பல்சர், ஆர்15 -ஐ தேடியே போறாங்க... நமது இந்தியர்களால் கண்டுக்கொள்ள படாமல் போன 5 தரமான பைக்குகள்!!

என்ன தான் கார்களில் பலரை முறை பயணம் செய்து இருந்தாலும், மோட்டார்சைக்கிளில் ரைடு செய்வது என்பது புதிய அனுபவத்தை வழங்கக்கூடியது. இந்தியாவில் பிரபலமான பைக் பிராண்ட்கள் என்று பார்த்தால், பல்சர், ட்யூக், ஒய்.இசட்.எஃப் உள்ளிட்டவற்றை சொல்லலாம். நம்மில் பெரும்பான்மையானவர்களின் தேர்வு இவற்றில் ஒன்றாகவே இருக்கும்.

குறிப்பாக, முதல்முறையாக பைக்கை வாங்க திட்டமிடுவோரின் சாய்ஸ் பல்சர் பைக்குகளில் ஒன்றாகவோ அல்லது கேடிஎம் ட்யூக் பைக்குகளில் ஒன்றாகவோ அல்லது யமஹா ஒய்.இசட்.எஃப் பைக்குகளில் ஒன்றாகவோ தான் இருக்கும். இவற்றை தாண்டி சந்தையில் அதிகம் விற்பனையாகாத பைக்கின் பக்கம் நமது கவனம் செல்வதற்கு வாய்ப்புகள் குறைவே.

நமது இந்தியர்களால் கண்டுக்கொள்ள படாமல் போன 5 தரமான பைக்குகள்

அதற்காக வாடிக்கையாளர்களால் பெரியதாக கண்டுக்கொள்ளப்படாத பைக்குகள் தரமற்றவை என சொல்லிவிட முடியாது. சில காரணங்களினால் அவை நம் இந்தியர்களை கவராமல் போய் இருக்கலாம். அவ்வாறான பைக்குகளுள் ஐந்தினை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். இவை 300சிசி அல்லது அதற்கு உள்ளாக இருப்பவை ஆகும். அதேபோல் இனி நாம் பார்க்கவுள்ள பைக்குகளுள் ஒன்றை தவிர்த்து மற்றவைகளின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.2 லட்சத்திற்கு உள்ளாகவே உள்ளன.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி

பஜாஜ் பல்சர் பைக்குகளுக்கு எவ்வாறு தனி ரசிகர் கூட்டம் உள்ளதோ அதேபோன்று டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளுக்கும் தனி கூட்டம் உள்ளது. ஆனால் அத்தகையவர்களின் கவனம் ஏனோ இந்த 200சிசி அப்பாச்சி பைக்கின் மீது விழுவதில்லை. அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி பைக் உண்மையில் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற மோட்டார்சைக்கிளாகும். அந்த அளவிற்கு இந்த பைக்கில் ஏகப்பட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.

சுஸுகி ஜிக்ஸெர் எஸ்.எஃப்250

ஜப்பானில் பிரபலமான இந்த சுஸுகி ஜிக்ஸெர் பைக்கை நம் நாட்டில் பெரும்பாலானோர் கவனிக்க மறந்துவிடுகின்றனர். இதற்கு இதன் ரூ.1.95 லட்சம் என்ற சற்று அதிகப்படியான எக்ஸ்-ஷோரூம் விலை ஒரு காரணம் என்றாலும், 250சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கிற்கு இது நியாயமான விலையே. போதிய அளவில் அட்வான்ஸ்டு வசதிகள் இல்லாதது இந்த பைக்கின் குறையாக பார்க்கப்படுகிறது. இந்த பைக்கில் 249சிசி ஆயில்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது.

யமஹா எஃப்.இசட்25

வெறும் ரூ.1.49 லட்சத்தில் தற்சமயம் எக்ஸ்-ஷோரூம் விலையை கொண்ட இது இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய 250சிசி பைக்காக விளங்குகிறது. பக்கா ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்கான இதில் இரு விதமாக செயல்படக்கூடிய எல்இடி ஹெட்லைட் மற்றும் மல்டி-ஃபங்க்சன் நெக்ட்டீவ் எல்இடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்படுகிறது. இருப்பினும் ப்ளூடூத் இணைப்பு வசதி இல்லாதது இப்போது வரையிலும் எஃப்.இசட்25 பைக்கின் குறையாக பார்க்கப்படுகிறது.

கேடிஎம் ஆர்சி125

கேடிஎம் ஆர்சி வரிசை பைக்குகளிலேயே குறைவான இயக்க ஆற்றலை பெறும் பைக், ஆர்சி125 ஆகும். இருப்பினும் இந்தியாவில் அதிக இயக்க ஆற்றலை வெளிப்படுத்தும் 125சிசி பைக் என்று பார்த்தால், அதுவும் கேடிஎம் ஆர்சி125 தான். இதில் பொருத்தப்படும் என்ஜின் அதிகப்பட்சமாக 9,250 ஆர்பிஎம்-இல் 14.3 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதனாலேயே, இந்தியாவின் விலைமிக்க 125சிசி பைக்காக கேடிஎம் ஆர்சி125 விளங்குகிறது.

பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ்

இந்த வரிசையில் நாம் பார்க்கும் விலைமிக்க பைக்காக இது இருக்கலாம். ஆனால், இந்தியா மட்டுமின்றி உலகளவில் பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் விற்பனை செய்யும் விலை குறைவான 2வது பைக் இதுவாகும். அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளான இதில் 313சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இதே என்ஜின் தான் பிரபலமான டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கிலும் பொருத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, March 17, 2023, 21:41 [IST]
English summary
5 unpopular bikes in india apache rtr200 4v to bmw g310 gs
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+