ரூ496 கோடி மக்கள் பணம் ஊழலா? 7 இவி ஸ்கூட்டர் தயாரிப்பாளர்களுக்கு ஆப்பு வச்ச மத்திய அரசு!
மத்திய அரசு வழங்கிய ஃபேம் 2 மானியத்தை சரியாக பின்பற்றாததால் சில எலெக்ட்ரிக் டூவீலர் தயாரிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. மத்திய அரசு வழங்கிய மானியத்தை குறிப்பிட்ட எலெக்ட்ரிக் டூவீலர் தயாரிப்பாளர்கள் விதிமுறைகளை மீறி பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை இந்தியாவில் அதிகரிக்க ஃபேம் 2 என்ற ஒரு திட்டத்தை வகுத்திருந்தது அதன்படி ஃபேம் 1 என்ற முதற்கட்ட திட்டத்தின்படி எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக மானியம் வழங்கப்பட்டது. இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் மக்களுக்கு அதிக பலன் கிடைத்து வந்தது.

இந்நிலையில் இந்த மாநில திட்டத்தின் அடுத்த கட்டமாக ஃபேம் 2 என்ற மானியத்தை அரசு அறிவித்தது. அதன்படி இதை எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கும் வாகன தயாரிப்பாளருக்கு வழங்க உத்தரவிட்டது. அதன்படி மத்திய அரசு சொன்ன விதிமுறைகளின் கீழ் எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கப்பட்டால் அவர்களுக்கு இந்த மானியத்தை பெரும் அதிகாரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அதன்படி இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் பல நிறுவனங்கள் இந்த மானியத்தை கோரி விண்ணப்பித்தன அவர்களுக்கு எல்லாம் இந்த மானியங்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்கள் பல இந்த மானியங்களை பெற்று எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் போது மத்திய அரசு சொன்ன விதிமுறைகளின் கீழ் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்காமல் அவர்கள் தனியாக வேறொரு வடிவமைப்பு ஏற்று வாகனங்களை தயாரித்து வெளியிட்டதாக குற்றச்சாட்டு இருக்கிறது.

இதன்படி மத்திய அரசு வழங்கிய ரூபாய் 469 கோடி பணத்தை பெற்றுக்கொண்ட வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மத்திய அரசு சொன்ன வழிமுறைகளின் படி எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்காமல் தாங்களாக ஒரு வடிவமைப்பில் தயாரித்து விற்பனை செய்து இந்த மானியத்தின் பலனை வீணடித்துள்ளதாக குற்றச்சாட்டு இருந்துள்ளது. இதற்கு விளக்கம் கேட்டு 7 எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதன்படி ஹீரோ எலெக்ட்ரிக், ஒக்கினோவா, ஆட்டோ டெக், ஆம்பியர் இவி, ரிவோல்ட் மோட்டார்ஸ், பெங்லிங் இந்தியா, ஏமோ மொபிலிட்டி மற்றும் லோகியா ஆட்டோ ஆகிய நிறுவனங்களுக்கு மத்திய அரசும் தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி கூடுதலாக வழங்கப்பட்ட மானிய தொகையை குறிப்பிட்ட நிறுவனங்கள் மீண்டும் அரசுக்கு திரும்ப ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

இதில் ரிவோல்ட் மோட்டார்ஸ் மட்டுமே தங்கள் பணத்தை மீண்டும் அரசுக்கு ஒப்படைப்பதாக தெரிவித்துள்ளது. மற்ற நிறுவனங்கள் எதுவும் இதுவரை அந்த நோட்டீஸ்க்கு பதில் அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிவடையும் தருவாயில் அதன் பின்பு பதில் வராமல் இருந்தால் குறிப்பிட்ட இந்த ஆறு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
தற்போது மத்திய அரசு ஃபேம் 2 மானியத்தை குறைத்து விட்டது. இதனால் இந்தியா முழுவதும் உள்ள எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்கள் தங்கள் வாகனங்களின் விலையை உயர்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகனங்களில் விலை கணிசமான அளவு உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இந்த ஃபேம் 2 மானியத்தில் சில எலெக்ட்ரிக் டூவீலர் தயாரிப்பாளர்கள் முறைகேடு ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு காரணம் இந்த மானிய திட்டம் குறித்த சரியான புரிதல் இல்லை என்று தான் கூறப்படுகிறது. இதில் பல ஸ்டார்ட் அப் மற்றும் சிறிய நிறுவனங்கள் சிக்கி கொண்டுள்ளன. இப்படியான சிக்கலில் உள்ள நிறுவனங்கள் அதிலிருந்து மீண்டு வருமா?
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபேம் 2 மானியம் என்பது மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த பயன்பாட்டை அதிகரிக்க வழங்கப்படும் மானியம் தான். பொதுவாக இந்த பணம் நேரடியாகவோ மறைமுகமாகவோ மக்களுக்கு வரவேண்டியது தான். அதே நேரம் மாசு கட்டுப்பாடுக்கும் வரவேண்டும். இது குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.


Click it and Unblock the Notifications









